அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்புகளுக்கு பெயர் போனவர். அண்மையில் அமெரிக்க மக்களுக்கு குறிப்பாக குழந்தைகளுக்கு என சிறப்பு திட்டத்தை அறிவித்து மக்களிடம் நற்பெயரை பெற்றுள்ளார்.
அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டம் அமெரிக்காவில் தற்போது டாக் ஆஃப் தி டவுனாக இருந்து வருகிறது. இதன்படி அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளின் பெயரில் அமெரிக்க அரசாங்கமே குறிப்பிட்ட பணத்தை வரவு வைத்து விடும். அந்த குழந்தைகள் 18 வயதான பின்னரே அந்த பணத்தை எடுக்க முடியும். அதற்குள் அந்த பணமானது முதலீடு செய்யப்பட்டு லாபம் குழந்தைகள் கணக்கிலேயே வரவு வைக்கப்பட்டு விடும்.

டிரம்ப் சேமிப்பு கணக்கு என இதனை அழைக்கின்றனர். அதாவது அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகள் பெயரில் அமெரிக்க அரசாங்கமே 1000 டாலர்களை வரவு வைத்துவிடும், இதற்காக ஒரு கணக்கும் குழந்தைகள் பெயரில் தொடங்கப்படும். இண்டஹ் 1000 டாலர்கள் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்யப்பட்டு லாபம் மீண்டும் குழந்தைகள் கணக்கிலேயே வரவு வைக்கப்படும்.
குழந்தைக்கு 18 வயதாகும் போது 1000 டாலர் என்பது பல ஆயிரம் டாலர்களாக வளர்ச்சி அடைந்திருக்கும். இந்த பணத்தை 18 வயது ஆன பிறகு அந்த குழந்தைகளால் எடுத்து பயன்படுத்த முடியும். 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து 2028 ஆம் ஆண்டு டிசம்பர் வரை பிறந்த மற்றும் பிறக்கும் குழந்தைகளுக்கு இந்த திட்டம் பொருந்தும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருக்கிறார்.

அமெரிக்க குடியுரிமை பெற்ற குழந்தைகளும் சமூக பாதுகாப்பு திட்டத்திற்கான எண் கொண்ட குழந்தைகளின் பெயரிலும், விண்ணப்பம் செய்யலாம். இந்த குழந்தை 18 வயதாகும் வரை அமெரிக்க அரசாங்கம் வரவு வைத்த 1000 டாலர்கள் மட்டுமில்லாமல் பெற்றோரும் குழந்தைகளின் பெயரில் இந்த திட்டத்தில் டாலர்களை வரவு வைக்கலாம். பெற்றோர், நண்பர்கள் , பெற்றோர் பணியாற்றும் நிறுவனங்களும் குழந்தைகளின் பெயரில் இந்த திட்டத்தில் பரிசாக டாலர்களை பங்களிப்பு செய்யலாம்.
18 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கணக்கில் வரவு வைக்கப்பட்ட பணமானது பெரிய அளவில் வளர்ந்து குழந்தைகளின் எதிர்கால கல்விக்கும் தொழில் தொடங்குவதற்கும் உதவியாக இருக்கும் என சொல்லப்படுகிறது. பெற்றோர் இந்த கணக்கில் வரவு வைக்கப்படக்கூடிய பணத்திற்கு வரி விலக்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனை டிரம்ப் அக்கவுண்ட் என அழைக்கிறார்கள். பெற்றோர் வருமான வரி கணக்கினை தாக்கல் செய்யும் போது தங்கள் குழந்தை தரவுகளை கொடுத்து இந்த கணக்கினை தொடங்க ஒப்புதல் வழங்கலாம். பெற்றோர் வேலை செய்யக்கூடிய நிறுவனங்கள், நண்பர்கள் இதில் நன்கொடையாக பணத்தை பங்களிப்பு செய்யலாம் என கூறியிருக்கிறார் டிரம்ப். அந்த குழந்தையின் சார்பாக பணம் முதலீடு செய்யப்பட்டு லாபம் மீண்டும் இதிலேயே வர வைக்கப்படும்.
வரும் ஜூலை நான்காம் தேதி இந்த திட்டம் நடைமுறைக்கு வருகிறது. இந்த திட்டத்தில் பெற்றோர் ஆண்டுக்கு 5000 டாலர்கள் வரை வரவு வைத்தால் கூட குழந்தை 18 வயதாகும் போது பல கோடி லாபம் கிடைக்கும். அதுவே குழந்தை 50 வயது வரை அந்த கணக்கில் பணத்தை எடுக்காமல் இருக்கும் பட்சத்தில் 100 கோடி ரூபாய் வரை கூட கிடைக்க வாய்ப்புள்ளதாம்.
தமிழ்நாட்டில் ஏற்கனவே பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் என்ற பெயரில் இதே போன்ற திட்டம் பல ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி பெண் குழந்தைகள் பிறந்த பெற்றோர் இந்த திட்டத்தில் விண்ணப்பம் செய்தால் அரசே குழந்தையின் பெயரில் இந்த திட்டத்தில் பணத்தை டெபாசிட் செய்யும். ஒரு பெண் குழந்தை என்றால் 50,000 ரூபாயும் 2 பெண் குழந்தைகள் என்றால் தலா 25,000 ரூபாயும் அரசே டெபாசிட் செய்யும்.
ஃபிக்ஸட் டெபாசிட் முறையில் மின் விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்பு செய்யப்படும் இந்த பணத்திற்கு வட்டி வருமானம் கிடைக்கும். 18 வயதான பின்னர் இந்த குழந்தை பள்ளி படிப்பை முடிந்திருந்தால் இந்த பணத்தை பெற்று கொள்ளலாம்.கிட்டதட்ட இதே போன்ற ஒரு திட்டத்தை தான் டிரம்ப் நிர்வாகம் செயல்படுத்தி இருக்கிறது.
More From GoodReturns

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!

ஈரானை சீண்டும் டிரம்ப்.. மீண்டும் போர் தீவிரமாகுமா..?

டிரம்ப் செய்யும் தில்லுமுல்லு.. உண்மையை உடைத்த ஈரான் தலைவர்..!

ஈரானுக்கு 48 மணி நேர கெடு விதித்த டிரம்ப்..!! பதிலுக்கு வஜ்ராயுதத்தை கையில் எடுத்த ஈரான்..!!

யாருடைய கட்டுப்பாட்டில் ஹார்முஸ் ஜலசந்தி? அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்லும் புது கணக்கு

மத்திய கிழக்கு போர் நிறுத்தம்..? டிரம்ப் பேச்சால் புது திருப்பம்..!!

பொட்டில் அடித்தது போல் சொன்ன Iran.. டிரம்ப் மீது சுத்தமா நம்பிக்கையில்லை.. JD Vance வர சொல்லுங்க..!!

என்னுடைய பவர் தெரியாம பேசுறீங்க.. டிரம்ப் வாயை திறந்த உடன் கச்சா எண்ணெய் விலை 13% வீழ்ச்சி..!



Click it and Unblock the Notifications