அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கு அதிக சுதந்திரத்தை அளிக்கும் வகையிலான சில மாற்றங்களை கொண்டுவர இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
அமெரிக்காவை சேர்ந்த ஓபன் ஏஐ, கூகுள், அமேசான், மெட்டா உள்ளிட்ட நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன. இருந்தாலும் இந்த நிறுவனங்களுக்கு எல்லாம், சீனாவில் நடைபெற்று வரும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த மேம்பாடுகள் பெரிய போட்டியாக அமைந்திருக்கின்றன.

சில மாதங்களுக்கு முன்பு சீனாவை சேர்ந்த நிறுவனம் டீப் சீக் என்ற செயலியை அறிமுகப்படுத்தியது. இது அமெரிக்க நிறுவனங்களின் செயற்கை நுண்ணறிவு செயலிகளை விட மேம்பட்டதாக இருந்தது. இதனால் அமெரிக்க டெக் நிறுவனங்களின் மதிப்புகள் குறைய தொடங்கின.
இந்த சூழலில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் எப்பொழுதும் அமெரிக்கா தான் அதிக்கம் செலுத்த வேண்டும் என அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். இதற்காக அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பயன்பாடுகளுக்கு தற்போது இருக்கும் சில கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு அவர் திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. AI action plan எனும் ஒரு திட்டத்தை அவர் தொடங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த திட்டத்தின் மீது அமெரிக்காவை சேர்ந்த பல்வேறு டெக் நிறுவனங்களும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்துள்ளன. குறிப்பாக மிகப்பெரிய அளவிலான லாங்குவேஜ் மாடல்களை உருவாக்குவதற்கு செயற்கை நுண்ணறிவு கருவிகளை காப்பி ரைட் கொண்ட கன்டெண்டுகளையும் பயன்படுத்த அனுமதிக்கும் போது உலக அளவில் இந்த தொழில்நுட்பத்தில் அமெரிக்கா என்றுமே முதலிடத்தில் நிற்கும் என ஓபன் ஏஐ, மெடா, கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் பரிந்துரை செய்திருக்கின்றன.
இதன்படி ஓபன் ஏஐ நிறுவனம் அளித்துள்ள பரிந்துரையில் தங்களுடைய ஏஜ மாடல்கள் காப்பி ரைட் கன்டண்டுகளையும் பயன்படுத்துவதற்கும் பயிற்சி பெறுவதற்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறது.
மேலும் மெட்டா நிறுவனம் ஓபன் சோர்ஸ் மாடல்கள் அதிக அளவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்றும் அவ்வாறு பயன்பாட்டுக்கு வந்தால் தான் ஏஐ தொழில்நுட்ப போட்டியில் சீனாவை பின்னுக்கு தள்ளி என்றென்றும் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தும் நாடாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் அமெரிக்கா முதலிடத்தில் நிலைத்து நிற்க வேண்டும் என்றால் அது சார்ந்த உள்கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் இந்த தொழில்நுட்ப பயன்பாட்டுக்கு என தனிதனி விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன அதனை மாற்றி ஒட்டுமொத்த நாடு முழுவதும் ஒரே விதிமுறையாக கொண்டு வர வேண்டும் என்றும் கூகுள் கேட்டுக் கொண்டிருக்கிறது.
ஆனால் அமெரிக்காவை சேர்ந்த சில பிரபலங்கள் காப்பி ரைட் கண்டெண்டுகளை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயிற்சிக்காக வழங்குவது மிகப்பெரிய ஆபத்தில் கொண்டு சென்று முடியும் என எச்சரித்துள்ளனர்.
More From GoodReturns

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

டிரம்ப் ஊதும் மகுடிக்கு கெவின் வார்ஷ் ஆடுவாரா..? தலைதூக்கும் ரெசிஷன் அச்சம்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்வது என்ன?

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!



Click it and Unblock the Notifications