அமெரிக்க நிறுவனங்கள் காலாண்டு வருவாய் அறிக்கைகளைச் சமர்ப்பிக்கும் நடைமுறையை நிறுத்திவிட்டு, ஆண்டுக்கு இருமுறை மட்டுமே அறிக்கைகளைச் சமர்ப்பிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
தற்போது, அமெரிக்காவில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களும் காலாண்டு மற்றும் ஆண்டு நிதி அறிக்கைகளை அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்திடம் (SEC) தாக்கல் செய்ய வேண்டும். தற்போது ஆண்டுக்கு 4 முறை என அறிக்கை தாக்கல் செய்யப்படும் நிலையில் அதனை ஆண்டுக்கு இரண்டு முறை என மாற்றலாம் என யோசனை தெரிவித்துள்ளார்.

இந்த யோசனையை அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் அங்கீகரித்தால், அது நிறுவனங்களின் சுமையைக் குறைக்கும் என்று டிரம்ப் கூறுகிறார். தன்னுடைய ட்ரூட் சோசியல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் "SEC ஒப்புதலுக்கு உட்பட்டு, நிறுவனங்கள் இனி காலாண்டு அடிப்படையில் அறிக்கை செய்ய கட்டாயப்படுத்தப்படக்கூடாது, மாறாக ஆறு மாத அடிப்படையில் அறிக்கை செய்ய வேண்டும்" என கூறியுள்ளார்.
சீன நிறுவனங்கள் பல தசாப்தங்கள் நீடிக்கும் நிறுவன உத்திகளை வகுக்கும் நிலையில், அமெரிக்க நிறுவனங்கள் குறுகிய கால காலாண்டு முடிவுகளில் அதிக கவனம் செலுத்துகின்றன, என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். "நிறுவன நிர்வாகத்தில் சீனாவுக்கு 50 முதல் 100 ஆண்டுகால தொலைநோக்கு பார்வை உள்ளது, ஆனால் நாம் நம் நிறுவனங்களை காலாண்டு அடிப்படையில் இயக்குகிறோம், இது நல்லதல்ல!" என்று அவர் பதிவு செய்துள்ளார்.
டிரம்ப் மட்டுமே சில நிறுவனங்களும் இதே கோரிக்கையை எழுப்பியுள்ளன. டிரம்பின் இந்த முன்மொழிவு, நிறுவனங்களுக்கான ஒழுங்குமுறைச் சுமையைக் குறைக்கும் என பல நிறுவனங்களும் கருத்து தெரிவித்துள்ளன. இது நிறுவனங்களின் செலவுகளைக் குறைத்து, பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் என பல நிறுவனங்களின் தலைவர்களும் கருத்து கூறுவதாக சிபிஎஸ் செய்தி குறிப்பிடுகிறது.
காலாண்டு தோறும் அறிக்கை தாக்கல் செய்வது, நிர்வாகிகளை நீண்ட கால வளர்ச்சிக்கு திட்டமிடுவதற்குப் பதிலாக குறுகிய கால இலாபங்களில் கவனம் செலுத்தத் தூண்டுகிறது என்று பலரும் தெரிவித்துள்ளனர். மறுபுறம், காலாண்டு அறிக்கைகளுக்கு ஆதரவாக இருப்பவர்கள், அவை முதலீட்டாளர்களுக்கு ஒரு நிறுவனத்தின் நிதி ஆரோக்கியம் குறித்த தகவல்களை வழங்குகின்றன என்று கூறுகின்றனர்.
ஆறு மாத அறிக்கைகளுக்கு மாறுவது முதலீட்டாளர்களுக்குக் குறைவான தகவல்களை அளிக்கும் என்றும், சாத்தியமான அபாயங்களை முன்கூட்டியே கண்டறிவதைக் கடினமாக்கும் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர். டிரம்பின் இந்த யோசனைக்கு சாதகமாகவும் , எதிர்ப்பு தெரிவித்தும் கருத்துகள் முன் வைக்கப்படுகின்றன. நீண்ட கால வளர்ச்சியில் நிறுவனங்கள் கவனம் செலுத்த காலாண்டு அறிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்ற இதற்கு ஆதரவானர்கள் கூறுகின்றனர்.
காலாண்டு அறிக்கைகள் ஒரு நிறுவனத்தின் நிதி நிலையை முதலீட்டாளர்களுக்கு வெளிப்படையாக தெரிவிப்பதால் முதலீட்டாளர் நலன் கருதி இதனை நீட்டிக்க வேண்டும் என ஒரு தரப்பில் குரல் கொடுக்கின்றனர்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications