ஈரானை துவம்சம் செய்ய திட்டம்? டிரம்ப், நெதன்யாகு நடத்திய திடீர் ஆலோசனை..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்துவது குறித்து விவாதித்ததாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிப்ரவரி மாதம் தொடங்கிய போரே முடிவில்லாமல் இருக்கும் நிலையில் மீண்டும் ஒரு தீவிர போர் நடந்தால் உலக பொருளாதாரமே ஸ்தம்பித்து போகும்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளிலும் நவம்பரில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு முன்பாகவே, ஈரானின் அணுசக்தி மற்றும் இராணுவ தளங்கள் மீது மீண்டும் பெரிய அளவிலான கூட்டு தாக்குதல்களை நடத்துவது குறித்து டொனால்ட் டிரம்பும் பெஞ்சமின் நெதன்யாகுவும் விவாதித்துள்ளனர். இந்த தகவலை Axios தளம் வெளியிட்டுள்ளது.

ஈரானை துவம்சம் செய்ய திட்டம்? டிரம்ப், நெதன்யாகு நடத்திய திடீர் ஆலோசனை..!!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டிரம்பை தொடர்பு கொண்டு பேசி உள்ளார். ஈரானின் அணுசக்தி திட்டங்கள் மீண்டும் வலுப்பெற்று வருவதாக கூறி, தேர்தலுக்கு முன்பு ஈரானுக்கு எதிராக ஒரு பெரிய அளவிலான இராணுவ நடவடிக்கையை தொடங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக, யுரேனியம் செறிவூட்டல் பணிகளுக்காக ஈரான் பயன்படுத்தி வருவதாக கருதப்படும் பிகாக்ஸ் மவுண்டைன் தளம் குறித்தும், ஈரானின் அணுசக்தி கட்டமைப்பு குறித்தும் இஸ்ரேல் சேகரித்த உளவுத்துறை அறிக்கைகளை நெதன்யாகு டிரம்பிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

Also Read

ஆனால் அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரி இந்த தகவலை மறுத்துள்ளனர். டிரம்ப் நவம்பர் மாத தேர்தலுக்கு முன் எந்தவிதமான தாக்குதல்களையும் நடத்த போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.இருப்பினும், அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை செயலாளர் பீட் ஹெக்செத் மற்றும் அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் (CENTCOM) தலைவர்கள் ஈரானுக்கு எதிரான புதிய தாக்குதல்களுக்கு ஆதரவாக இருப்பதாக தெரிகிறது. அதேசமயம், நிர்வாகத்தின் பெரும்பான்மையான ஆலோசகர்கள் இராணுவ நடவடிக்கையை விட ஈரானின் மீது பொருளாதார மற்றும் அரசியல் அழுத்தங்களை தொடர்வதே சிறந்தது என கூறுகிறார்களாம், இதனால் டிரம்ப் முடிவெடுக்காமல் இருப்பதாக சொல்லப்படுகிறது.

டிரம்ப் நெதன்யாகுவிடம் போருக்கு தயாராகுங்கள் நான் கூறும் வரை காத்திருங்கள் என கூறியதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ஈரான் குறித்த தனது அடுத்த கட்ட முடிவு மிக விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

Recommended For You

பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி திடீரென அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது போர் தொடுத்தன. இன்று வரை அது முடிவில்லாமல் தொடர்கிறது. இதனால் ஹார்முஸ் ஜல்சந்தி மூடப்பட்டு, கச்சா எண்ணெய், எல்பிஜி சப்ளை தடைபட்டுள்ளது. பல நாடுகளிலும் விலைவாசி உச்சத்தை தொட்டுள்ளது. எனவே போரை முடிவுக்கு கொண்டு வருவது தான் உலகிற்கே நல்லது. ஆனால் ஈரானின் அணுசக்தி அச்சுறுத்தலைக் காரணம் காட்டி தேர்தலுக்கு முன் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்துவது குறித்து விவாதம் என்ற செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளை மாளிகை இதை மறுத்தாலும், இரு நாடுகளின் படைகளும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+