ஈரான் நாட்டின் மீதான போர் மீண்டும் அதிகாரப்பூர்வமாக துவங்கியுள்ளது என அமெரிக்க அதிபரான டொனால்டு டிரம்ப் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
அமெரிக்கா - ஈரான் மத்தியில் அமைதி திரும்பி பேச்சுவார்த்தையில் இருந்த நிலையில், ஹார்முஸ் வழித்தட்டத்தில் ஓமன் நாட்டின் அருகில் புதியாக பாதையை உருவாக்கி அமெரிக்கா சரக்கு கப்பல்களை இயக்கியது. இங்கு தான் பிரச்சனை வெடித்தது, ஈரான் அனுமதி இல்லாமல் இவ்வழியாக சென்ற சரக்கு கப்பல்களை ஈரான் ஏவுகணை கொண்டு தாக்கியது.

இந்த தாக்குதல் தான் வளைகுடாவில் மொத்தமாக நிறுத்தி வைக்கப்பட்ட போர் மீண்டும் வெடிக்க துவங்கியுள்ளது. ஜூலை 7ஆம் தேதி துவங்கிய போர் தாக்குதல் இன்று வரையில் தொடர்கிறது.
இதற்கிடையில் தான் டிரம்ப் நிர்வாகம் ஜூலை 10ஆம் தேதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் 7ஆம் தேதி முதல் ஈரான் மீது அதிகாரப்பூர்வமாக போர் துவங்கியுள்ளது என தெரிவித்துள்ளது. எதற்காக இந்த அறிவிப்பு..? எதற்காக இந்த அறிக்கை..?
அமெரிக்க சட்டத்தின் படி ஒரு நாட்டின் மீது எவ்விதமான அரசியல் தலையீடும் இல்லாமல் அதிபர் அதிகாரத்தின் கீழ் 60 நாட்கள் மட்டுமே போர் செய்ய முடியும். அதை தொடர்ந்து போர் செய்ய வேண்டுமெனில் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற வேண்டும்.
ஏற்கனவே 60 நாட்கள் பெரும் தாக்குதலை நடத்திய டிரம்ப் தலைமையிலான அரசு, சட்ட சிக்கல், ஆயுத இருப்பு, எதிர்தாக்குதல் மூலம் ஏற்பட்ட பாதிப்பு, முதலீட்டு சந்தை, கச்சா எண்ணெய் சந்தை ஆகியவற்றை கருத்தில் கொண்டு போர் நிறுத்தப்பட்டு பேச்சுவாத்தைக்கு சென்றது. ஆனால் இந்த பேச்சுவார்த்தை சாதகமாக எட்டுவதற்குள் மீண்டும் போர் தாக்குதலுக்கான சூழ்நிலை உருவாகியுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு டிரம்ப் கடந்த வாரம் 3 எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்திய பின்பு, டிரம்ப் ஈரான் மீதான ceasefire முடிந்தது என அறிவிக்கப்பட்ட பின்பு இந்த அறிக்கையை சமர்ப்பித்தார்.
இதுக்குறித்து டிரம்ப் சிபிஎஸ் நியூஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் அமெரிக்க மக்களையும், அமெரிக்காவையும் காப்பாற்ற தொடர்ந்து ராணுவ தாக்குதலை மேற்கொள்வேன் என தெரிவித்துள்ளார். இது என்னுடைய கடமை என்றும் பேசியுள்ளார் டிரம்ப்.
இதன் மூலம் அடுத்த 60 நாட்களுக்கு அமெரிக்கா ஈரான் நாட்டையும், ஈரான் ராணுவத்தின் மீதும் கடுமையான தாக்குதல் கண்களை மூடிக்கொண்டு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வளைகுடா பகுதியில் மீண்டும் பெரும் தாக்குதல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, இதனால் வளைகுடா நாடுகளில் இருக்கும் இந்தியர்களும், பிற நாட்டவர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது கட்டாயம்.


Click it and Unblock the Notifications