அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது வரி விதிப்பால் உலக நாடுகளை தினமும் மிரட்டி வருகிறார் என்றால் மிகையில்லை, ஏற்கனவே வெளிநாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் ஸ்டீல், அலுமினியம், கார் மற்றும் வாகனங்கள் மீது 25 சதவீத வரி விதித்து உலோகம் மற்றும் ஆட்டோமொபைல் துறையைக் கலங்கடித்திருக்கும் வேளையில் தற்போது அடுத்த துறையைக் கட்டம் கட்டியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அடுத்து பார்மா துறையை டார்கெட் செய்து விரைவில் வரிகளை விதிக்கப்போவதாக வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார். இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான பார்மா நிறுவனங்கள் தங்களுடைய தயாரிப்புகளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து தான் பெரும்பகுதி வருமானத்தை ஈட்டி வருகிறது.

இந்த நிலையில் டிரம்ப் பார்மா துறையின் மீதும் 25 சதவீதம் வரியை விதித்தால் இந்திய பார்மா நிறுவனங்களுக்கு பெரும் ஆபத்தாக இருக்கும். ஆனால் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசும் போது இந்த வரிகள் எப்போது விதிக்கப்படும் அல்லது எவ்வளவு சதவீதம் விதிக்கப்படும் என்பது குறித்த விவரங்களைத் தெரிவிக்கவில்லை.
டிர்ம்ப் வெள்ளிக்கிழமை ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் பயணம் செய்வதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் பார்மா துறையின் மீது அடுத்து வரி விதிக்கும் திட்டம் இருப்பதாக அறிவித்தார். இதேவேளையில் அமெரிக்காவின் வரிகளைத் தவிர்க்க விரும்பும் நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.
ஆனால், எந்த பேச்சுவார்த்தையாக இருந்தாலும் சரி ஏப்ரல் 2-ம் தேதி அறிவிக்கப்படும் ரெசிப்ரோக்கல் வரிகள் விதிக்கப்பட்ட பின்னரே பிற நாடுகள் உடன் வரியைத் தவிர்க்கும் ஒப்பந்தங்கள் பரிசீலிக்கப்படும் என்றும் டொனால்டு டிரம்ப் திட்டவட்டமாக குறிப்பிட்டார்.
மேலும் அவர் பிரிட்டன் உட்பட பல நாடுகள் அமெரிக்காவின் வரி விதிப்புகளை தவிர்க்க பல தரப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளன என்று டிரம்ப் தெரிவித்தார். இந்த ஒப்பந்தம் மூலம் அமெரிக்கா ஏதாவது லாபம் பெற முடிந்தால் நிச்சயம் ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என்றும் டொனால்டு டிரம்ப் இந்த பேட்டியில் கூறினார்.
அமெரிக்கா அரசு கடைசியாக அறிவித்த வாகன இறக்குமதி மீது விதிக்கப்பட்ட 25 சதவீத வரி வாயிலாக மட்டுமே ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர் வருவாய் கிடைக்கும் என்று வெள்ளை மாளிகை கணித்துள்ளது. இத்தகைய நிலையில் மற்ற துறைகளை அமெரிக்க அரசு விட்டுவைக்குமா..?
More From GoodReturns

ஈரானுடன் ஒப்பந்தம் ஏற்படாமலேயே போரை முடிக்க போகிறாரா டிரம்ப்? என்ன சொல்லி இருக்காரு பாருங்க!!

ஈரான் மீது பங்கர்-பஸ்டர் குண்டு தாக்குதல்.. டிரம்ப் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு.. அதுவும் இந்த இடத்தில்..!!

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

மருந்து நிறுவனங்களுக்கு செக்.. உலோக இறக்குமதிக்கும் லாக்.. மீண்டும் டிரம்ப் ஆடுபுலி ஆட்டம்?

இனி நீங்கள் இழக்கப்போகும் வரிச் சலுகைகள் என்னென்ன? புதிய விதிகளால் லாபமா? நஷ்டமா?

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!



Click it and Unblock the Notifications