APEC மாநாட்டில் தூங்கிய டிரம்ப்..? வைரலாகும் வீடியோ..!! அதுவும் இவர் பேசும் போதா தூங்கினாரு?

சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC - Asia-Pacific Economic Cooperation) உச்சிமாநாட்டில், பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன அதிபர் ஜின் பிங், ரஷ்ய அதிபர் புதின் என பல தலைவர்களும் பங்கேற்ற இந்த நிகழ்வு உலகமெங்கிலும் மிகவும் உற்றுநோக்கப்பட்ட நிகழ்வாக இருந்தது.

இந்த மாநாட்டில் உலக தலைவர்கள் பலரும் உரை நிகழ்த்தினர். அப்போது சீன அதிபர் ஜி ஜின்பிங் உரையாற்றி கொண்டிருந்தபோது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தூங்கியதாக கூறப்படும் காட்சிகள் வெளியாகி வைரலாகி இருக்கிறது. சீன அதிபர் ஜி ஜின்பிங் உரையாற்றி கொண்டிருந்தபோது, அதிபர் டிரம்ப் கண்களை மூடிக்கொண்டு தலையை குனிந்த நிலையில் அமர்ந்திருந்த காட்சி நேரடி ஒளிபரப்பில் பதிவானது.

APEC மாநாட்டில் தூங்கிய டிரம்ப்..? வைரலாகும் வீடியோ..!! அதுவும் இவர் பேசும் போதா தூங்கினாரு?

அப்போது கனடா பிரதமர் மார்க் கார்னி உள்ளிட்ட உச்சிமாநாட்டில் பங்கேற்ற மற்ற தலைவர்கள் உரையை கவனமாக கேட்டு குறிப்புகள் எடுத்து கொண்டிருந்த நிலையில், டிரம்ப் கண்ணயர்ந்து காணப்பட்ட இந்த காட்சி கவனத்தை ஈர்த்தது.

பொது நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்களின் போது டிரம்ப் கண்களை மூடியபடி இருக்கும் புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் வெளியாகி அவர் தூங்கிவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுவது இது முதல் முறையல்ல. இருப்பினும், அதிகாரப்பூர்வ கூட்டங்களின் போது தான் தூங்கவில்லை என்றும், ஓய்விற்காக சில நேரங்களில் கண்களை மூடுவதாகவும் டிரம்ப் இதற்கு முன்பு விளக்கம் அளித்திருக்கிறார்.

இந்த வீடியோ சில நொடிகள் மட்டுமே ஓடக்கூடியதாக இருந்தாலும், சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. சிலர் வயதானவர் , நீண்ட நேர பயண கலைப்பாக கூட இருக்கலாம் என டிரம்புக்கு ஆதரவாகவும் சிலர் உலக தலைவர்கள் மாநாட்டில் இப்படி தூங்கலாமா என விமர்சனங்களையும் முன் வைத்துள்ளனர்.

Also Read

முன்னதாக சீனாவில் வந்திறங்கிய டிரம்பை, சீனாவின் மரபுகளை மீறி அதிபர் ஜி ஜின்பிங் நேரடியாக விமான நிலையத்தில் வரவேற்றார். பின்னர் ஷென்சென் மாநாட்டின்ப் ஒரு பகுதியாக டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரின் முத்தரப்பு பேச்சுவார்த்தையும் கவனம் பெற்றது.

Recommended For You

ஈரான் போர், உக்ரைன் போர், கச்சா எண்ணெய் சப்ளை ஆகிய பிரச்சினைகளுக்கு மத்தியில் நடந்த இந்த மாநாடு உலக கவனம் ஈர்த்தது. அப்படிப்பட்ட மேடையில் டிரம்ப் கண்ணயர்ந்தது தான் கேலி பொருளாக மாறிவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+