அமெரிக்க உச்சநீதிமன்றம் டொனால்ட் டிரம்ப் அறிமுகப்படுத்திய ரெசிப்ரோக்கல் வரி உத்தரவை ரத்து செய்தது டிரம்புக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை அமெரிக்க நீதிமன்ற உத்தரத்தவின் படி 6-3 வாக்கெடுப்பில் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் ரத்து செய்யப்பட்ட தீர்ப்பை வெளியிட்டார்.
இந்த தீர்ப்பில் 1977 சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டத்தின் (IEEPA) கீழ் டிரம்ப் உலக நாடுகளுக்கு வரி விதிக்க அதிகாரம் இல்லை, அமெரிக்க சட்டம் இதில் மீறப்பட்டது என்று தெளிவுபடுத்தப்பட்டது. இந்த வரிகள் பிப்ரவரி 2025 முதல் அமல்படுத்தப்பட்டன, அனைத்து வர்த்தக நாடுகளுக்கும் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டன.

டிசம்பர் 14 வரையில் சுமார் 179 பில்லியன் டாலர் அளவிலான வரி வசூல் செய்துள்ளது அமெரிக்க அரசு. இதேபோல் ஒரு நாளுக்கு 500 மில்லியன் டாலர் வரையில் அமெரிக்க வரி வசூல் செய்து வரும் நிலையில் தற்போது எவ்வளவு தொகையை ரெசிப்ரோக்கல் வரியாக வசூலித்துள்ளது, மேலும் எந்த நாட்டிடம் இருந்து எவ்வளவு வரி வசூல் செய்துள்ளது என்பதையும் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தீர்ப்பு வெளியான உடனே டிரம்ப் கடும் கோபத்தில் இருந்ததாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ராய்ட்டர்ஸ் செய்தியின்படி, டிரம்ப் இந்த தீர்ப்பை "அவமானம்" (disgrace) என்று விமர்சித்துள்ளார் டிரம்ப்.
"என்னிடம் பேக்அப் பிளான் இருக்கிறது" என்று டிரம்ப் கூறியுள்ளதாகவும் ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. இந்த தீர்ப்பு டிரம்பின் இரண்டாவது ஆட்சியின் முக்கிய வர்த்தக கொள்கை என்பதாலும், சர்வதேச பொருளாதாரம் பெரும் பாதிப்பை எதிர்கொண்ட இந்த அறிவிப்புக்கு அமெரிக்க மண்ணிலேயே அவமானம் ஏற்பட்டு உள்ளது, டிரம்ப் ஆட்சிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
நோபல் பரிசுக்கு ஆசைப்பட்ட டிரம்பின் வரலாற்று முக்கிய வர்த்தக கொள்கைக்கு இந்த தீர்ப்பு பெரும் அடியாக உள்ளது. டிரம்ப் இந்த மாதம் எப்ஸ்டீந் பைல்ஸ் வெளியானதில் இருந்து பெரும் விமர்சனத்தை எதிர்கொண்டு வருகிறார். இந்த நிலையில் அடுத்த பாதிப்பாக ரெசிப்ரோக்கல் வரி தொடர்பாக தீர்ப்பு வந்துள்ளது.
இந்த தீர்ப்பு உலக பொருளாதாரத்தில் நிவாரணத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் டிரம்ப் அரசு இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யுமா என்பது இதுவரையில் தெரியவில்லை. மேலும் டிரம்ப் "பேக்அப் பிளான்" இருப்பதாக கூறினாலும், இந்த தீர்ப்பு அவரது வர்த்தக திட்டங்களை பெரிதும் பாதிக்கும்.
More From GoodReturns

ஈரான் போர்: டிரம்ப் நிர்வாகத்திலேயே ஒரு கருப்பு ஆடு? செய்தியாளர்களிடம் உண்மையை போட்டுடைத்த டிரம்ப்

ஈரான் போர் நிறுத்தம் நீடிக்குமா? வெள்ளிக்கிழமை நடக்க இருக்கும் டிவிஸ்ட்!!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?



Click it and Unblock the Notifications