டிரம்ப் ஆட்சிக்கு வந்த 4 மாதத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்த வரி, வர்த்தகத் தடைகள், பதிலுக்குப் பதில் நடவடிக்கை என அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான வர்த்தக போருக்கு மத்தியில் இரு நாட்டு உறவில் ஒரு புதிய மாற்றங்கள் நடைபெறுவதாகத் தெரிகிறது. பல மாதங்களாக, டிரம்ப் நிர்வாகம் சீனாவின் பொருட்களின் இறக்குமதி வரிகளை படிப்படியாக உயர்த்தி, சீனா பொருளாதாரத்திற்கு நெருக்கடியைக் கொடுத்தது வந்தது. இதற்குச் சற்றும் சளைக்காமல் சீனாவும் அமெரிக்கப் பொருட்களுக்கு வரியை விதித்த காரணத்தால் அமெரிக்காவின் அஸ்திவாரம் ஆட துவங்கியது.
பலரும் எச்சரித்தும் சிறுபிள்ளை அடம்பிடிப்பது போல் டிரம்ப் ரெசிப்ரோக்கல் வரி விதித்தார், இது அமெரிக்கப் பொருளாதாரத்தில் மோசமான விளைவுகளை உருவாக்கியது. இதைச் சுதாரித்துக்கொண்ட டிரம்ப் கடந்த 2 வாரங்களாகப் பல அறிவிப்புகளைத் திரும்பப் பெற்றார், இந்த வாரம் சீனாவைப் பேச்சுவார்த்தைக்கு மறைமுகமாக அழைத்தார். இதை புரிந்துகொண்ட சீனா வியாழக்கிழமை அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தைக்குச் செல்வதாக சிக்னல் கொடுத்தது.

அமெரிக்கா சீனாவை மறைமுகமாகப் பேச்சுவார்த்தைக்கு அழைக்க முக்கிய திருப்பமாக அமைந்தது சீனா அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அரிய உலோக தாதுப் பொருட்களின் ஏற்றுமதியை நிறுத்தியது, போயிங் விமானங்கள் வாங்குவதை நிறுத்த உத்தரவிட்டதும் தான்.
வியாழக்கிழமை அன்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான ரெசிப்ரோக்கல் வரி உயர்வு முடிவுக்கு வரலாம் என்று ஒரு முக்கிய சிக்னலை கொடுத்தார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், அதிக வரி விதிப்பு நுகர்வோர் வாங்குதலைத் தடுக்கும் என்பதை உணர்ந்து, வரி விதிப்பை மறுபரிசீலனை செய்யப் பரிந்துரைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
"மக்கள் பொருட்களை வாங்க முடியாத அளவுக்கு வரி விதிக்கும் சூழ்நிலையை உருவாக்க நான் விரும்பவில்லை, எனவே நான் வரி விதிப்பு பாதையில் இனி மேலும் செல்ல விரும்பவில்லை," என்று டிரம்ப் கூறினார், இதன் மூலம் வர்த்தகத்தை ஊக்குவிக்க தற்போதைய வரி அளவை குறைக்கவோ அல்லது மறுசீரமைப்பு செய்யவோ வாய்ப்புள்ளது.
வியாழக்கிழமை சீனா வெளியிடப்பட்ட அறிக்கையில், சீன வணிக அமைச்சகம், உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தின் மீது "கடுமையான அழுத்தத்தை" செலுத்துவதை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியது.
அமெரிக்காவின் போயிங் விமானங்கள் வாங்க தடை.. அடுத்த ஆட்டத்தை தொடங்கியது சீனா..!
மேலும், வரவிருக்கும் வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்கு இருதரப்பும் சரிசமமான மரியாதை கொடுப்பது அவசியம் என்று சீனா அரசு வலியுறுத்தியது. இந்த முக்கியமான பேச்சுவார்த்தைகளை எந்த நாடு தொடங்க வேண்டும் என்ற முட்டுக்கட்டை தொடர்ந்தாலும், டிரம்ப்பின் பேச்சு மற்றும் சீனாவுடனான பேச்சுவார்த்தைக்கு அழைப்பு ஆகியவை மீண்டும் இரு நாடுகள் மத்தியில் பேச்சுவார்த்தைக்கான பாதையை உருவாக்கியுள்ளது என தெரிவித்துள்ளது.
இந்த வாரம் அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், சில சீன பொருட்களின் மீது 245% வரை வரி விதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீனாவும் அமெரிக்கப் பொருட்கள் மீது வரி விதித்துள்ளது. ஆனால், இதுவரையில் அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தைக்குச் சீனா முன்வரவில்லை என்றும் கூறப்பட்டு இருந்தது. இதுதான் இரு நாடுகள் மத்தியிலான பேச்சுவார்த்தைக்கு ஆரம்பக்கட்டமாக இருந்தது.
இதேபோல் சீன வணிக அமைச்சகம் அமெரிக்கா விதிக்கும் இந்த வரிகள் நியாயமற்றது ஆனாலும் "இறுதி வரை அமெரிக்காவை எதிர்த்துப் போராடுவோம்" என்று எச்சரித்தது.
More From GoodReturns

ஈரான் மீது பங்கர்-பஸ்டர் குண்டு தாக்குதல்.. டிரம்ப் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு.. அதுவும் இந்த இடத்தில்..!!

அமெரிக்க வானில் வட்டமிட்ட Dooms Day விமானம்!! டிரம்ப் ஈரானுக்கு விதித்த கெடு நெருங்குவதால் பதற்றம்!!

ஈரான் போர்: டிரம்ப் நிர்வாகத்திலேயே ஒரு கருப்பு ஆடு? செய்தியாளர்களிடம் உண்மையை போட்டுடைத்த டிரம்ப்

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!



Click it and Unblock the Notifications