உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையே மூன்று ஆண்டுகளுக்கு மேலாக மோதல்கள் நடைபெற்ற வருகின்றன. இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வருவதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். இந்த மோதலில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் உக்ரைனுக்கு ஆதரவாக நிற்கின்றன.
ரஷ்யா - உக்ரைன் போர்: ரஷ்யா மோதலை நிறுத்த வேண்டும் என்பதற்காக இந்த நாடுகள் ரஷ்யாவின் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தன. எனவே ரஷ்யா தங்களுடைய கச்சா எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை இந்தியா சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு தள்ளுபடி விலையில் விற்பனை செய்து வருகிறது. இதன் மூலம் ரஷ்யாவின் பொருளாதாரமும் எந்தவித சிக்கலும் இல்லாமல் செல்கிறது. இந்த சூழலில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ரஷ்யாவிற்கான வருமானத்தை நிறுத்தினால் அந்த நாடு போரை நிறுத்திக் கொள்ளும் என்ற திட்டத்தை தீட்டி இருக்கிறார்.

50 நாட்கள் கெடு விதித்த டிரம்ப்: ரஷ்யாவிற்கு 50 நாட்கள் கேடு வழங்குகிறோம், இந்த 50 நாட்களுக்குள் ரஷ்யா உக்ரைன் விவகாரத்தில் அமைதி ஒப்பந்தத்திற்கு முன் வர வேண்டும் இல்லையென்றால் ரஷ்யாவிடம் பொருட்களை வாங்கும் நாடுகளுக்கு 100% இறக்குமதி வரியை விதிப்போம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார் . மறைமுகமாக இந்தியா சீனா உள்ளிட்ட நாடுகளை தான் இது பாதிக்கப் போகிறது. ஏனெனில் இந்தியா அதிக அளவிலான கச்சா எண்ணையை ரஷ்யாவிடம் இருந்து வாங்கி வருகிறது.
100% இறக்குமதி வரி: நேட்டோ பொது செயலாளருடன் ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு அமைப்புகளையும், ஆயுதங்களையும் நாங்கள் வழங்க போகிறோம். இதற்கான செலவை நேட்டோ கூட்டமைப்பு நாடுகள் ஏற்றுக் கொள்ளப் போகின்றன என தெரிவித்திருக்கிறார். மேலும் உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே தன்னுடைய விருப்பம் என தெரிவித்திருக்கும் அவர் ரஷ்யாவிடம் இருந்து பொருட்களை வாங்கும் நாடுகளுக்கு நெருக்கடி தரப் போகிறோம் என தெரிவித்துள்ளார். 50 நாட்களுக்குள் ரஷ்யா அமைதி ஒப்பந்தத்திற்கு முன் வரவில்லை என்றால் ரஷ்யாவிடம் இருந்து பொருட்களை வாங்கக்கூடிய சீனா இந்தியா உள்ள நாடுகளுக்கு 100% இறக்குமதி மிதிப்போம் என அறிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு பாதிப்பு: ஏற்கனவே அமெரிக்காவை சேர்ந்த எம்பிக்கள் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வாங்கி ரஷ்யாவின் பொருளாதாரத்தை தாக்குப் பிடிக்கச் செய்யும் நாடுகளுக்கு அதிக வரி விதித்தால் அந்த நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து பொருட்களை வாங்குவதை நிறுத்திக் கொள்ளும் இது ரஷ்யாவின் வருமானத்தை பாதிப்படைய செய்து அந்த நாட்டை தானாகவே போர் நிறுத்தத்திற்கு வரச் செய்யும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பான ஒரு மசோதாவையும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு தயாராகி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications