அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்கட்கிழமை, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் இடையேயான அமைதி பேச்சுவார்த்தைக்கான கூட்டத்தை ஏற்பாடு செய்யத் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரும் ஒரு முக்கியமான படியாக கருதப்படுகிறது, ரஷ்யா - உக்ரைன் போரை அமைதியான முறையில் தீர்க்கும் முயற்சிகளை தீவிரமாக முன்னெடுத்து வருகிறார் டிரம்ப். வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபருடனும் ஐரோப்பிய தலைவர்களுடனும் நடைபெற்ற தீவிர பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது கூடுதல் முக்கியதுவம் பெற்றுள்ளது.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அலாஸ்காவில் ரஷ்ய அதிபர் புடினுடன் நடைபெற்ற சந்திப்பில் போர் நிறுத்தம் குறித்த உடன்பாடு எட்டப்படவில்லை என்றாலும், டிரம்ப் அமைதி உடன்பாடு சாத்தியம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த நிலையில் நேற்று அமெரிக்க வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி உடன் நடைபெற்ற முக்கிய கூட்டத்தில், ஐரோப்பிய தலைவர்களான ஜெர்மன் சான்சலர் பிரைட்ரிக் மெர்ஸ், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரோன், இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, ஐரோப்பிய கமிஷன் தலைவர் உர்சுலா வான் டெர் லெயென், NATO செயலர் ஜெனரல் மார்க் ருட்டே மற்றும் பின்னிஷ் அதிபர் அலெக்சான்டர் ஸ்டப் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த சந்திப்பு, டிரம்ப் - புடின் சந்திப்புக்கு பின்பு நடக்கும் காரணத்தாலும், ரஷ்ய - உக்ரைன் போரை எப்படி அமைதியான முறையில் தீர்க்க வேண்டும் என்பதை ஆய்வு செய்யும் முக்கிய கூட்டமாக இருக்கும் காரணத்தாலும் மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது.
டொனால்டு டிரம்ப், ஐரோப்பிய தலைவர்கள் மற்றும் உக்ரைன் அதிபருடனான சந்திப்புக்குப் பின்பு புடினுடன் தொலைபேசியில் பேசியதாக கூறியுள்ளார். அலாஸ்கா, வெள்ளை மாளிகை சந்திப்புகள் வெற்றிகரமாக முடிந்த நிலையில், அடுத்தக்கட்ட நகர்வுகளை மேற்கொள்ள டிரம்ப் முடிவு செய்துள்ளார்.

ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்த புடினும் ஜெலென்ஸ்கியும் இடையேயான சந்தைப்பை நடத்த ஒரு இடத்தில் தேர்வு செய்யத் தொடங்கியதாகவும் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் இந்த சந்திப்பு இரு தலைவர்களுடன் இணைந்து ஒரு மும்முனை கூட்டமாக நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார் டிரம்ப்.
விரைவில் மும்முனை சந்திப்புக்கான இடம் சேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் இதுவரையில் உக்ரைனும் சரி, ரஷ்யா-வும் சரி போர் நிறுத்துவதற்கான முடிவுகளை எட்டவில்லை.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications