எக்ஸ் (X) தளத்தில் "Trump Is Dead" என்ற ஹேஷ்டேக் கீழ் 1 லட்சத்திற்கும் அதிகமான பதிவுகள் உடன் உலகம் முழுவதும் டிரெண்ட் ஆகி வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உடல்நலம் குறித்த கேள்விகள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் தற்போது டிவிட்டரில் பெரும் விவாதமாக வெடிக்க துவங்கியுள்ளன.
சமீபத்தில் டிரம்பின் வலது கையில் காயம் ஏற்பட்டதை காட்டும் புகைப்படங்கள் இணையத்தில் பரவியதால் இந்த வதந்திகள் தொடங்கியுள்ளன. இருப்பினும், வெள்ளை மாளிகை இதை உடனடியாக மறுத்து, அதிபரின் உடல்நலம் குறித்த சந்தேகங்களை முழுமையாக நிராகரித்துள்ளது. இந்த நிலையில், பொதுமக்களிடையே குழப்பத்தையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சமீபத்திய புகைப்படங்கள், அவரது வலது கையில் காயத்துடனும், இதை மறைக்க மேக்அப் செய்யப்பட்டது என பல புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன, இது அவரது உடல்நலம் குறித்த சந்தேகங்களை தூண்டியுள்ளது. முன்னாள் அதிபரான ஜோ பைடன் உடல் நலம் குறித்து பல கேள்விகள் எழுந்த நிலையில் தற்போது டிரம்ப் உடல் நலம் குறித்தும் கேள்வி எழுந்துள்ளது.
டிரம்ப் பிப்ரவரி மாதம் பிரஞ்சு அதிபர் ஈம்மானுவேல் மக்ரோன்-ஐ சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்திலும் அவரது கையில் கருப்பு நிரத்தில் காயம் இருந்தது தென்பட்டது.

அதிபரின் உடல்நலம் குறித்த விளக்கம்
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், USA டுடேவுக்கு அளித்த சமீபத்திய பேட்டியில், ஏதேனும் "பெரிய சோகம்" ஏற்பட்டால் தலைமை பதவியை ஏற்க தயாரா என கேள்வி எழுப்பப்பட்டது. 79 வயதான டிரம்ப் உடல் நலமாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதாக வலியுறுத்திய வான்ஸ், எதிர்பாராத சம்பவங்கள் ஏற்பட்டால் நாம் அதை தவிர்க்க முடியாது என்பதை ஒப்புக்கொண்டார்.

41 வயதான வான்ஸ், அமெரிக்க வரலாற்றில் மூன்றாவது இளைய துணை அதிபராக உள்ள நிலையில், டிரம்ப் தற்போது அதிக வயதில் பதவியேற்ற முதல் அதிபர்க உள்ளார். வான்ஸ் மேலும், டிரம்ப் இரவு தாமதமாகவும் காலை மிக உற்சாகமாக பணி செய்வதாகவும், அவர் "சிறந்த உடல் நலத்தில்" இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த டிவிட்டர் சம்பவத்தை அடுத்து, வெள்ளை மாளிகை உடனடியாக அதிபரின் உடல்நலம் குறித்த கவலைகளை தவறானவை என அறிவித்துள்ளது. சமீபத்தில் ஓவல் அலுவலக கூட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் டிரம்பின் கை காயம் குறித்து பரபரப்பு ஏற்பட்ட போதிலும், அதிகாரிகள் எந்தவித உடல் நல பிரச்சினையும் இல்லை என உறுதிப்படுத்தியுள்ளனர்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications