அமெரிக்கா அதிபராக இரண்டாவது முறையாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது முதல், வரி விதிப்பு, குடியேற்ற கட்டுப்பாடு என பல்வேறு அதிரடி அறிவிப்புகளால் உலக முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறார். தற்போது, அகதிகள் குடியேற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், பாகிஸ்தான் உள்பட மொத்தம் 41 நாட்டவர்கள் அமெரிக்காவுக்கு வருவதற்கு தடை விதிப்பது குறித்து டொனால்ட் டிரம்ப் தீவிரமாக திட்டுமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது டிரம்பின் இரண்டாவது பதவி காலத்தில் தொடக்கத்தில் தொடங்கிய குடியேற்றக் கட்டுப்பாடுகளின் ஒரு பகுதி என கூறப்படுகிறது.
புதிய தடையின் ஒரு பகுதியாக டஜன் கணக்கான நாடுகளின் குடிமக்கள் அமெரிக்கா வருவதற்கான பயண கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக டிரம்ப் பரிசீலனை செய்து வருகிறார் என தகவல். தடை விதிப்புக்குள் வரும் பாகிஸ்தான் உள்ளிட்ட 41 நாடுகள் மூன்று தனித்தனி குழுக்களாக பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் குழுவில் ஆப்கானிஸ்தான், ஈரான்,சிரியா, கியூபா மற்றும் வடகொரியா உள்ளிட்ட 10 நாடுகள் உள்ளன. இந்த நாட்டு மக்களுக்கான முழு விசா இடைநீக்கம் செய்யப்படும்.

இரண்டாவது குழுவில், எரித்திரியா, ஹைட்டி,லாவோஸ், மியான்மர் மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. இந்த நாட்டை சேர்ந்தவர்களுக்கு பகுதியளவு விசா இடைநீக்கம் செய்யப்படும். இது சில விதிவிலக்குகளுடன் சுற்றுலா மற்றும் மாணவர் விசாக்கள் மற்றும் பிற புலம் பெயர்ந்தோர் விசாக்களை பாதிக்கும் என்று செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
மூன்றாவது குழுவில், பாகிஸ்தான், பூட்டான் உள்பட ஏராளமான நாடுகள் இடம் பெற்றுள்ளன. இந்த நாட்டு அரசாங்கங்கள் 60 நாட்களுக்குள் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்றால், அந்நாட்டவர்களுக்கு அமெரிக்க விசா வழங்கலை பகுதியளவு நிறுத்தி வைப்பதற்கு பரிசீலிக்கப்படும்.
அதேசமயம் இந்த பட்டியலில் (குழுவில்) மாற்றங்கள் இருக்கலாம் என்றும், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ உட்பட நிர்வாகத்தால் இன்னும் ஒப்புதல் பெறப்படவில்லை என்று தகவல் அறிந்த பெயர் குறிப்பிடாத அமெரிக்க அதிகாரி தெரிவித்தாத தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது முதல் பதவி காலத்தில், 2017ம் ஆண்டில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள 7 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்கா வருவதற்கு தடை விதித்தார். இந்த கொள்கை 2018ல் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்படுவதற்கு முன்பு பல முறை பின்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications