துக்கவீட்டில் வரலாற்று நிகழ்வு.. டிரம்ப் - எலான் மஸ்க் மீண்டும் இணைந்தனர்.. டிரெண்டாகும் வீடியோ..!!

டொனால்டு டிரம்ப் 2வது முறையாக அதிபரான நாளில் இருந்து தினமும் ஏதாவது ஒரு அதிரடி என்ற வகையில் அந்நாட்டு அரசியல் களம் மிகவும் விறுவிறுப்பாக இருந்தாலும், அந்நாட்டு அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் என்றால் அது டொனால்ட் டிரம்ப் - எலான் மஸ்க் மத்தியிலான நட்பின் முறிவு தான்.

டிரம்ப்-ன் செயல்பாடுகள் பிடிக்காமல் இருவருக்கும் மத்தியிலான நட்பை பொது வெளியில் முறித்துக்கொண்டது மட்டும் அல்லாமல் இருவரும் மாறி மாறி கடுமையாக விமர்சனம் செய்துக்கொண்டு வந்தனர். இதில் குறிப்பாக எலான் மஸ்க், டிரம்ப் மற்றும் டிரம்ப் குடும்பத்தை எப்ஸ்டீன் வழக்குடன் தொடர்புடன் பேசியது, தனி கட்சி துவங்கப்போவதாக அறிவித்தது என பல அதிரடிகள் நடந்தது.

இந்த மோசமாக நிகழ்வுகளுக்கு பின்பு இருவரும் சந்தித்துக்கொள்ளவே இல்லை, ஆனால் சார்லி கிர்க் மரணத்தை அனுசரிக்கும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு இருவரும் அருகில் உட்கார்ந்து 1 நிமிடத்திற்கும் அதிகமாக பேசி நட்பு பாராட்டிய வீடியோ தான் இன்று உலகம் முழுவதும் டிரெண்டாகி வருகிறது.

யார் இந்த சார்லி கிர்க்
செப்டம்பர் 10, 2025 அன்று அமெரிக்காவின் UTAH மாநிலத்தின் யூட்டா வேலி பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது, வலதுசாரி அரசியல் பிரமுகரான சார்லி கிர்க் சுட்டுக் கொல்லப்பட்டார். டர்னிங் பாயிண்ட் யூஎஸ்ஏ என்ற அமைப்பின் இணை நிறுவனர் மற்றும் தலைவர் தான் இந்த 31 வயதான சார்லி கிர்க்.

இந்தச் சம்பவம் அமெரிக்க அரசியலில் வன்முறை அதிகரிப்பின் அறிகுறியாகக் கருதப்பட்டது, அதன் பின்னர் ஏற்பட்ட நினைவு நிகழ்வில் தான் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் ஆகியோரின் சந்திப்பு நடந்தது.

துக்கவீட்டில் வரலாற்று நிகழ்வு.. டிரம்ப் - எலான் மஸ்க் மீண்டும் இணைந்தனர்.. டிரெண்டாகும் வீடியோ..!!

சார்லி கிர்க் நினைவு அஞ்சலி நிகழ்ச்சி
சார்லி கிர்க்கின் நினைவு நிகழ்வு செப்டம்பர் 22 அன்று ஆரிசோனா மாநிலத்தின் கிளெண்டேல் நகரில் உள்ள ஒரு பெரிய ஸ்டேடியத்தில் நடைபெற்றது. 10000க்கும் அதிகமான மக்கள் கலந்துக்கொண்டு சார்லி கிர்க்-கிற்கு அஞ்சலி செலுத்தினர்.

சார்லி கிர்க்-ம் அவரது அமைப்பான டர்னிங் பாயிண்ட் யூஎஸ்ஏ கல்லூரி, பள்ளி, மற்றும் பல்கலைகழக்கத்தில் மாணவர்கள் மத்தியில் அரசியல் குறித்து விழிப்புணர்வு நடத்தினர், இவரின் முயற்சியும் டிரம்ப்-ன் வெற்றிக்கு முக்கியமான காரணமாக அமைந்தது, குறிப்பாக இளம் தலைமுறையினரின் வாக்குகளை பெற டிரம்ப்-க்கு உதவியது.

டிரம்ப்-மஸ்க் சந்திப்பு:
டிரம்ப்-மஸ்க் மத்தியிலான பொது மோதலுக்குப் பின் திடீர் நட்பு இந்த நிகழ்வின் மிக முக்கியமான அம்சமாக இருந்தது. டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் ஆகியோர் பல மாதங்களுக்கு பின் முதல் முறையாக பக்கத்தில் அமர்ந்து பேசினர். இந்த சிறிய சந்திப்பு பல பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல் சார்லி கிர்க்-ம் இருவருக்கும் மத்தியிலான நட்பு முறிவு தற்காலிகமானது தான், விரைவில் இணைவார்கள் என தெரிவித்திருந்தார். இது சார்லி கிர்க்-ன் நினைவு நிகழ்விலேயே நடந்திருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

துக்கவீட்டில் வரலாற்று நிகழ்வு.. டிரம்ப் - எலான் மஸ்க் மீண்டும் இணைந்தனர்.. டிரெண்டாகும் வீடியோ..!!

சமுகவலைத்தள பதிவுகள்
இந்த சந்திப்பு குறித்த வீடியோவை எலான் மஸ்க் தனது டிவிட்டரில் For Charlie என வாசகத்துடன் பகிர்ந்தார், இதேபோல் வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கிலும் பகிரப்பட்டு உள்ளது.

துக்கவீட்டில் வரலாற்று நிகழ்வு.. டிரம்ப் - எலான் மஸ்க் மீண்டும் இணைந்தனர்.. டிரெண்டாகும் வீடியோ..!!

டிரம்ப்-மஸ்க் நட்பு முறிவு:
எலான் மஸ்க், டிரம்பின் நம்பகமான ஆலோசகராக இருந்தவர், டிரம்பின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் "டிபார்ட்மென்ட் ஆஃப் கவர்ன்மென்ட் எஃபிஷியன்ஸி" (DOGE) என்ற சிறப்பு அமைச்சகத்தின் தலைவராகப் பணியாற்றினார். இந்த அமைச்சகம், அமெரிக்க ஊழியர்கள் மற்றும் அரசு அமைப்புகளில் செலவுகளை பெரிய அளவில் குறைத்தது.

ஆனால் பின்நாளில் டிரம்ப் நிர்வாகம் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த மானிய தொகையை ரத்து செய்ததில் துவங்கிய பல இடத்தில் டிரம்ப் - மஸ்க் ஆகியோர் முடிக்கொண்டனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+