அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அடுத்தடுத்து பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வரும் வேளையில் அமெரிக்காவில் அடுத்த பெரிய புரட்சியாக மாறிக்கொண்டு இருக்கும் ஏஐ துறையின் மீது புதிய அழுத்தத்தை கொடுத்துள்ளார்.
டொனால்ட் டிரம்ப் நேற்று தனது சமூக ஊடக தளமான Truth Social-இல் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். இதில் அமெரிக்காவின் மிகப்பெரிய டெக் நிறுவனங்கள் தங்களுடைய ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சிக்காக உருவாக்கியிருக்கும் பெரிய டேட்டா சென்டர்களுக்கு தேவையான மின்சாரத்திற்கு தாங்கள் தான் பணம் செலுத்த வேண்டும் என்றும், அமெரிக்க மக்களை உங்களுக்காக அதிக மின் கட்டணத்தை செலுத்தக்கூடாது என்றும் அவர் கூறினார்.

இந்த ஒரு அறிவிப்பு அமெரிக்க டெக் துறையை புரட்டிப்போட்டு உள்ளது என்றால் மிகையில்லை, ஏஐ தொழில்நுட்பத்தை இயக்க வேண்டும் என்றால் பெரிய டேட்டா சென்டர்கள் அவசியம். இந்த டேட்டா சென்டர் இயங்க வேண்டும் என்றால் மின்சாரம், தண்ணர் வசதிகள் அதிகப்படியான தேவை. இந்த இடத்தில் தான் தற்போது அமெரிக்காவின் ஏஐ கனவும், அமெரிக்க மக்களும் மாடிக்கொண்டு உள்ளனர்.
டேட்டா சென்டர்கள் - மின்சார தேவை
செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சியால் கூகுள், மைக்ரோசாப்ட், மெட்டா போன்ற நிறுவனங்கள் பெரிய அளவில் டேட்டா சென்டர்களை கட்டி வருகின்றன. இவை தினமும் 24 மணி நேரமும் இயங்குவதால் அதிகளவிலான மின்சாரம் தேவைப்படுகிறது.

இதனால் அமெரிக்காவின் பவர் கிரிட் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. டேட்டா சென்டருக்கு தேவையான மின்சாரம் இந்த பவர் கிரிட்-ல் இருந்து தான் செல்கிறது. டிமாண்ட் அதிகமாக இருக்கும் வேளையில், உற்பத்தி குறைவாக உள்ளது. இதனால் மின்சார நிறுவனங்கள் மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகள் இந்த செலவை மக்களின் மின்சார கட்டணத்துடன் பகிர்ந்து கொள்வதால், மின்சார கட்டணம் உயர்ந்து வருகிறது. இதை தடுக்க வேண்டும் என்பதற்காகவே டிரம்ப் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.
சாதாரண மக்களின் மின் கட்டணம் பாதிப்பு
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்க குடும்பங்களின் சராசரி மின் கட்டணம் 6 சதவீதம் உயர்ந்துள்ளது. டேட்டா சென்டர்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் கட்டண உயர்வு இன்னும் அதிகமாக உள்ளது. டிரம்ப் இதை தடுக்க மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறினார்.
மைக்ரோசாப்ட் இந்த வாரத்தில் இருந்து முக்கிய மாற்றங்களை செய்யும் என்றும், அமெரிக்க மக்கள் இனி அதிக மின் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மைக்ரோசாப்ட் மாற்றங்கள் எதிர்பார்ப்பு
டிரம்ப் தனது பதிவில் குறிப்பாக மைக்ரோசாப்ட்டை குறிப்பிட்டு பேசியுள்ளதால் முதலீட்டாளர்களின் கவனம் இந்நிறுவனத்தின் மீது திரும்பியுள்ளது. இந்த நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் துணை தலைவர் பிராட் ஸ்மித் செவ்வாய்கிழமை வாஷிங்டனில் நடக்கும் நிகழ்ச்சியில் இது குறித்து அறிவிப்பு வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அறிவிப்பு தான் நாளை ஒட்டுமொத்த டெக் நிறுவனங்களும் பாலோ செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை தொடர்ந்து மெட்டா, கூகுள், ஆரக்கிள், எக்ஸ், அமேசான் போன்றவையும் மின்சாரத்தை சொந்தமாக உற்பத்தி செய்யலாமா, மின் உற்பத்தி நிறுவனங்கள் உடன் கூட்டணி உற்பத்தி செய்யலாமா என்பதை ஆலோசனை செய்ய உள்ளது.
கரன்ட் முக்கியம் பிகிலு
அமெரிக்கா AI துறையில் சீனாவை விட முன்னிலை வகிக்க வேண்டும் என்று டிரம்ப் நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது, டேட்டா சென்டர்கள் இதற்கு முக்கியம். இதேவேளையில் அமெரிக்க டெக் நிறுவனங்கள் ஏற்கனவே ஏஐ சிப், டெக் இன்பராஸ்டக்சர்-க்காக அதிகப்படியான செலவுகளை செய்து வரும் வேளையில் மின்சாரம் மீதான புதிய தாக்கம் அமெரிக்காவின் ஏஐ கனவை உடைக்கும் விதமாக உள்ளது.

சீனாவுக்கும் வேட்டு
இந்த இடத்தில் தான் சீனா, அமெரிக்காவை விட வேறுப்படுகிறது, சீனாவில் எனர்ஜி துறை மிகவும் குறைந்த கட்டணத்தில் இயங்கிவருகிறது. ஆனால் இதற்கும் தற்போது அமெரிக்கா வேட்டு வைத்துள்ளது. ஆம், ரஷ்யா, வெனிசுலா, ஈரான் மீது விதிக்கப்பட்ட வரி, வர்த்தக தடைகள் மூலம் அமெரிக்காவுக்கு கிடைக்கும் மலிவான எரிபொருள் தடைப்பட்டு உள்ளது.
அப்போ இந்தியாவின் நிலைமை
இத்தகைய முக்கியமான சூழ்நிலையில் தான் இந்தியாவில் பல டேட்டா சென்டர்கள் நாடு முழுவதும் கட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக கூகுள் இந்தியாவில் மிகப்பெரிய அளவிலான டேட்டா சென்டரை அமைக்க உள்ளது.
More From GoodReturns

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ஈரான் மீது பங்கர்-பஸ்டர் குண்டு தாக்குதல்.. டிரம்ப் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு.. அதுவும் இந்த இடத்தில்..!!

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

வெறும் 3 வருடத்தில் ரூ.3.2 லட்ச டூ ரூ.80 லட்சம் சம்பளம்.. TCS-இல் தொடங்கி கூகுள் சென்ற டெக்கி..!!

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

டிரம்ப் ஊதும் மகுடிக்கு கெவின் வார்ஷ் ஆடுவாரா..? தலைதூக்கும் ரெசிஷன் அச்சம்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்வது என்ன?

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!



Click it and Unblock the Notifications