உலக அரசியலில் திடீர் திருப்பம்: டிரம்ப், புதின், ஜீ ஜின்பிங் முத்தரப்பு பேச்சுவார்த்தை..!!

உலக அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருக்கும் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீன அதிபர்கள் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த இருப்பது தான் பரபரப்பாக பேசப்படும் ஒரு விஷயமாக மாறி இருக்கிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகிய மூவரும் இணைந்து, தங்களின் வரலாற்று சிறப்புமிக்க முதல் முத்தரப்பு சந்திப்பை நடத்தவுள்ளனர்.

சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக இந்த முத்தரப்பு மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாடு நவம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்காக வாஷிங்டனில் இருந்து புறப்படும் டிரம்ப், ஃபிலிப்பைன்ஸில் நடைபெறும் ஆசிய நாடுகளின் அமைப்பான ஆசியான் மாநாட்டிற்குச் சென்றுவிட்டு, அதன்பிறகு சீனாவின் ஷென்சென் நகருக்கு செல்கிறார்.

உலக அரசியலில் திடீர் திருப்பம்: டிரம்ப், புதின், ஜீ ஜின்பிங் முத்தரப்பு பேச்சுவார்த்தை..!!

அப்போது புதின் மற்றும் ஜீ ஜின் பிங்கை அவர் சந்திக்கிறார். இந்த சந்திப்பின் மையக்கருவாக அணு ஆயுத கட்டுப்பாடுகள் பற்றிய பேச்சுவார்த்தைகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் ஈரான் போர் தொடர்பான விவகாரங்களும் இந்த மூன்று நாடுகளின் தலைவர்களால் ஆலோசிக்கப்படலாம்.

ஈரானுடன் சீனாவும் ரஷ்யாவும் நெருக்கமாக உள்ளன. இந்த நிலையில் தான் போர் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு இந்த சந்திப்பில் முக்கியத்துவம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் போர் முடிவுக்கு வந்தால் கோடிக்கணக்கான மக்கள் நிம்மதி அடைவார்கள்.

Also Read

ஈரான் போர் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் சப்ளை தடைபட்டுள்ள நிலையில் அதனை சீராக்குவது, உலக பொருளாதார சூழல் ஆகியவையும் இதில் முக்கியத்துவம் பெறும் என சொல்லப்படுகிறது. இக்கூட்டத்தில் உக்ரைன் போர் தொடர்பான விவாதங்கள் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

ஆசிய-பசிபிக் பொருளாதார கூட்டமைப்பில் மொத்தம் 21 உறுப்பு நாடுகள் உள்ளன.இந்த நாடுகள் உலகளாவிய மொத்த ஜிடிபியில் சுமார் 62 சதவீதத்தையும், உலகளாவிய வர்த்தகத்தில் பாதியளவையும் கொண்டுள்ளன. பொருளாதார ஒத்துழைப்புதான் இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாக இருந்தாலும், உலகின் மிக வலிமையான மூன்று வல்லரசு தலைவர்கள் நேரில் சந்தித்து பேசுவதற்கான தளமாக மாறியுள்ளது. எனவே இது சர்வதேச அரசியலில் மிக முக்கியமான திருப்பமாக பார்க்கப்படுகிறது.

அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ வட்டாரங்களின்படி, உலக புகழ்பெற்ற தொழிலதிபரான எலான் மஸ்க் இந்த பயணத்தின் போது டிரம்ப்புடன் சீனாவுக்கு செல்ல இருக்கிறார். அதே போல சில டெக் நிறுவன தலைவர்களும் சீனா செல்லலாம் என சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+