அமெரிக்காவில் மிட்டேர்ம் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் டிரம்ப் தலைமையிலான அரசு, ஈரான் போருக்குப் பின்பு 70 சதவீதம் உயர்ந்த டீசல் விலையைக் குறைக்கப் போராடி வருகிறது. டீசல் விலை உயர்வால் பால், முட்டை-யில் துவங்கி அமேசான் டெலவரி செலவுகள் வரையில் அனைத்தும் உயர்ந்து அந்நாட்டின் பணவீக்கத்தில் ஏற்பட்ட உயர்வு பொருளாதாரத்திற்கே பெரும் சிக்கலாக மாறி வருகிறது.
அமெரிக்காவில் டீசல் இருப்பு வேகமாகக் குறைந்து வரும் வேளையில் உடனடியாக மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் டிரம்ப் இருக்கும் வேளையில், ஈரான் போரால் வளைகுடாவில் இருந்து மொத்தமாக சப்ளை முடங்கியுள்ளது.

இந்த நிலையில் ரஷ்யா தான் ஓரே தீர்வாக இருக்கிறது என்பதை உணர்ந்த டிரம்ப் அரசு, கடந்த வார வெள்ளிக்கிழமை - சனிக்கிழமை டீசலுக்காக டிரம்ப் - புடின் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தை சற்றும் எதிர்பாராத விதமாக வெற்றிகரமாக முடிந்தது.
இதன் வாயிலாக புடின் அரசு டீசல் ஏற்றுமதி மீது விதிக்கப்பட்டு இருந்த தடையைத் தளர்த்தியுள்ளது, இதேபோல் 1 லட்சம் டன் வரையிலான டீசலை அமெரிக்காவுக்கும், உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யத் தயார் என ரஷ்ய அரசு வாக்குறுதி கொடுத்தது.
இதை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பதிவில் ரஷ்யா - உக்ரைன் மத்தியில் ENERGY CEASEFIRE அறிவித்தார், இரு நாடுகளையும் எனர்ஜி உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் எனவும், இதை யாரும் மீற வேண்டாம் எனவும் டிரம்ப் தனது பதிவின் வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ரஷ்யா - உக்ரைன் விவகாரத்தில் தொடர்ந்து ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை மட்டுமே கொண்டு இருந்த அமெரிக்கா இந்த ENERGY CEASEFIRE விவகாரத்தில் நடுநிலையாகச் செயல்பட்டு உள்ளது.
அமெரிக்க வெள்ளைக் கொடியைக் காட்டிய நிலையில் உக்ரைன் அதிபர் Volodymyr Zelensky ஆக்சியோஸ் பத்திரிக்கை அளித்த பேட்டியில், இந்த பேச்சுவார்த்தையில் உக்ரைன் சார்பில் நாங்கள் கலந்துகொள்ளவில்லை. டிரம்ப் புடின் உடன் பேசியிருந்தால், போர் தாக்குதலை நாங்கள் நிறுத்த தயார்..
ஆனால் போர் நிறுத்தம் எப்போது துவங்குகிறது என்பதை முதலில் சொல்லுங்கள். ஏனென்றால் இன்றும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது, நேற்று மாலையில் Kharkiv பகுதியில் பவர் பிளான்ட் மீது தாக்குதல் நடந்துள்ளது என ஜெலென்ஸ்கி தெரிவித்தார். இதுதொடர்பாக டிவிட்டர் வீடியோ பதிவையும் வெளியிட்டுள்ளார் ஜெலென்ஸ்கி.
இதேபோல் இதுவரையில் ரஷ்யா தரப்பில் அமெரிக்காவின் energy ceasefire-ஐ ஏற்றுக்கொண்டதாக எவ்விதமான அறிக்கையிலும் வெளியிடவில்லை.
செப்டம்பர் மாதமும் எண்ணெய் தளங்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது அமெரிக்கா இருநாடுகளுக்குத் தெரிவித்தாலும், தொடர்ந்து தாக்குதல் நடந்து வந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications

