ஈரான் அமைதி திட்டத்தை நிராகரித்த டிரம்ப்.. குண்டுவீச்சுக்கு தேதி குறித்ததால் அதிர்ச்சி..!!

அமெரித்த அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் முன்வைத்த 7 நாள் அமைதி திட்டத்தை நிராகரித்து, மீண்டும் போரை தொடங்க நாள் குறித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உலக நாடுகள் மீண்டும் ஒரு தீவிர போரா என அதிர்ந்து போயுள்ளன.

ஈரான் போர் முடிவுக்கு வருமா என்பது தான் இந்தியா உட்பட பல நாடுகளின் எதிர்பார்ப்பு. ஏனெனில் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு கப்பல் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு பெட்ரோல், டீசல் விலை உயர்வு என பல சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. அமெரிக்காவும் ஈரானும் உடன்பாடுக்கு வந்து போரை நிறுத்த வேண்டும் என்பது தான் பலரது கோரிக்கை. ஆனால் அதற்கான அறிகுறிகளே தென்படவில்லை.

ஈரான் அமைதி திட்டத்தை நிராகரித்த டிரம்ப்.. குண்டுவீச்சுக்கு தேதி குறித்ததால் அதிர்ச்சி..!!

போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கிலும், அமெரிக்காவுடனான மோதலை தவிர்க்கும் வகையிலும் ஈரான் தரப்பிலிருந்து 7 நாட்கள் கொண்ட அமைதி திட்டம் ஒன்று முன்மொழியப்பட்டது. ஆனால், அதனை டொனால்ட் டிரம்ப் நிராகரித்துவிட்டார். நவம்பர் மாதம் நடைபெற உள்ள அமெரிக்க பொது தேர்தலுக்கு பிறகு, சூழலை பொறுத்து ஈரானின் மீது அமெரிக்காவின் குண்டுவீச்சு மற்றும் ராணுவ தாக்குதல்கள் மீண்டும் தொடங்கப்படலாம் என டிரம்ப் அதிகாரிகளிடம் கூறி இருகிறாராம்.

டிரம்ப்பின் இந்த அதிரடி நிலைப்பாடு சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ஏற்கனவே விரிசல் விட்டுள்ள உறவை இது மேலும் மோசமாக்கக்கூடும். போரை நீண்ட காலத்திற்கு இழுத்து செல்லும் என்பதை மறுப்பதற்கில்லை.

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே ஆறு மாதங்களுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. ஈரானின் பல முக்கிய தலைகள் கொல்லப்பட்ட போதிலும் அமெரிக்காவுக்கு ஈடு கொடுத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. பல்வேறு நாடுகள் முன்னெடுத்த அமைதி நடவடிக்கையும் தோல்வி அடைந்துவிட்டது. இதனால் இந்த நாடுகளை ஒரே டேபிளில் கொண்டு வந்து பேச்சுவார்த்தை நடத்தி எப்படி போரை முடிப்பது என்பது பெரிய கேள்வியாக இருக்கிறது.

ஹார்முஸ் ஜலசந்தியை யார் கட்டுப்படுத்துவது என்பதில் தான் அமெரிக்காவும் ஈரானும் முரண்படுகின்றன. ஈரான் ஹார்முஸ் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறுகிறது ஆனால் அமெரிக்காவோ அது எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது என தெரிவிக்கிறது. அவ்வப்போது இரு நாடுகளும் தாக்கி கொள்வதும் திடீரென பேச்சுவார்த்தைக்கு தயார் என கூறுவதும் வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது.அமெரிக்காவில் நவம்பர் மாதம் நாடாளுமன்ற இடைக்கால தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு பின் டிரம்ப் மீண்டும் ஈரான் மீது தீவிர போரை தொடங்கலாம் என சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+