இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சு வார்த்தை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரு நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் விரைவில் ஏற்பட உள்ளது என்ற தகவலை வெளியிட்டு இருக்கிறார்.
இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை உறுதி செய்வதை அமெரிக்கா நெருங்கிவிட்டது என டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருக்கிறார். அடுத்த வாரம் பாகிஸ்தான் நாட்டு அதிகாரிகள் அமெரிக்காவிற்கு வருகை தந்து வர்த்தக பேச்சுவார்த்தையில் ஈடுபட இருக்கின்றனர் என கூறியிருக்கிறார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது டிரம்ப் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அதே வேளையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டால் நாங்கள் வர்த்தக பேச்சுவார்த்தையில் ஈடுபட மாட்டோம் எனவும் டொனால்ட் டிரம்ப் அப்போது தெரிவித்தார். அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், இந்தியா தான் அமெரிக்க பொருட்களுக்கு அதிகபட்ச வரியை விதிப்பதாக குற்றம்சாட்டி வந்தார். கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிகபட்ச வரியை விதித்தார்.
குறிப்பாக இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 26 சதவீத வரியை அறிவித்தார். இதனை அடுத்து ஜூலை 2ஆம் தேதி வரை வரி விதிப்பை டிரம்ப் தற்காலிகமாக நிறுத்தி வைத்தார். இதனை அடுத்து மத்திய அரசு அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தி உள்ளது. மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் அமெரிக்கா சென்று அந்நாட்டு வர்த்தகத் துறை அமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
தொடர்ந்து இருநாட்டு அதிகாரிகள் மட்டத்திலான பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன முதலில் ஒரு இடைக்கால ஒப்பந்தமும் அதனைத் தொடர்ந்து முதல் கட்ட வர்த்தக ஒப்பந்தமும் கையெழுத்து இடப்படும் என சொல்லப்படுகிறது. இந்த சூழலில் தான் இந்தியாவுடன் ஒப்பந்தம் ஏற்படுத்தும் சூழலை அமெரிக்கா நெருங்கி விட்டது என டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.
அதே வேளையில் இந்தியாவும் பாகிஸ்தானும் போரில் ஈடுபட்டால் இந்த வர்த்தக ஒப்பந்த பேச்சு வார்த்தையை நாங்கள் நிறுத்திக் கொள்வோம் என டிரம்ப் மீண்டும் ஒருமுறை கூறியிருக்கிறார். ஜம்மு காஷ்மீரின் பகல் ஹாம் பகுதியில் கடந்த மாதம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலை அடுத்து இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. பின்னர் போர் நிறுத்தம் அமலுக்கு கொண்டுவரப்பட்டது.
அமெரிக்கா தற்போது இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்தும் நிலையில் பாகிஸ்தானுடனும் அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடத்த இருப்பது டிரம்பின் பேட்டி மூலம் வெளிவந்துள்ளது.
More From GoodReturns

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications