அமெரிக்காவுல குடியேறணுமா? H1B விசாவ விடுங்க வந்துவிட்டது கோல்டு கார்டு!! கட்டணம் எவ்வளவு தெரியுமா?

அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் அமெரி வெளிநாட்டவர்கள் வந்து தங்கி வேலை செய்வதையும் குடியேறுவதையும் கடுமையானதாக மாற்றி இருக்கிறது. அத்தனை எளிதாக அமெரிக்கா செல்வதற்கு தற்போது விசா கிடைப்பது இல்லை. ஏற்கனவே விசா பெற்றவர்கள் கூட நிம்மதியாக அங்கே இருக்க முடியவில்லை. அந்த அளவிற்கு டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் விசாக்கள் மீது கட்டுப்பாடுகளை விதித்த வண்ணம் இருக்கிறது.

இந்த சூழலில் அமெரிக்காவில் எனக்கு நிரந்தர குடியுரிமை வேண்டும் என்பவர்களுக்காகவே டிரம்ப் அரசு ஒரு மில்லியன் டாலர் கோல்டு கார்டு விசா என்ற ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்பாட்டுக்கு கொண்டு வந்திருக்கிறது. அமெரிக்காவுக்கு சென்று வேலை பார்ப்பதற்கு என ஹெச்1பி உள்ளிட்ட பல்வேறு விசாக்கள் வழங்கப்படுகின்றன. இதில் இந்தியர்கள் அதிகமாக பயன்படுத்தக்கூடிய ஒரு விசாவாக ஹெச்1பி விசா இருக்கிறது.

அமெரிக்காவுல குடியேறணுமா? H1B விசாவ விடுங்க வந்துவிட்டது கோல்டு கார்டு!! கட்டணம் எவ்வளவு தெரியுமா?

ஹெச்1பி விசாவில் அமெரிக்கா செல்பவர்கள் சில காலத்திற்குப் பிறகு அமெரிக்காவில் நிரந்தரமாக வசிக்க வேண்டும் என்றால் கிரீன் கார்டு என்ற அந்தஸ்து பெற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் இப்போது விசா விண்ணப்பம் கிரீன் கார்டு விதிமுறைகள் அனைத்திலும் டிரம்ப் நிர்வாகம் பல கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. எனவே அமெரிக்காவில் சென்று வசிக்க வேண்டும் வேலை பார்க்க வேண்டும் என்பவர்களுக்கு ஒரு மாற்று வாய்ப்பாக கோல்டு கார்டு விசா திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறார்.

இதன்படி வெளிநாட்டவர்கள் அமெரிக்க அரசிடம் ஒரு மில்லியன் டாலர்களை செலுத்தி விட்டு இந்த கோல்டு கார்டு விசாவை பெற்றுக் கொள்ளலாம் . இந்த விசா அவர்கள் நிரந்தரமாக அமெரிக்காவில் தங்குவதற்கான அந்தஸ்தை பெற இது அனுமதிக்கிறது . கிரீன் கார்டை விட இதில் பல நன்மைகள் இருக்கிறது என டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.

ஒரு மில்லியன் யுஎஸ் டாலர் என்பது இந்திய ரூபாயின் மதிப்பில் கிட்டத்தட்ட 8 கோடியே 99 லட்சம் ரூபாய் ஆகும். தற்போது கோல்டு கார்டு விசா திட்டம் அமலுக்கு வந்து விட்டது என்பதால் வெளிநாட்டவர்கள் இந்த கோல்ட் கார்டு விசாவுக்கு விண்ணப்பம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் செல்வந்த முதலீட்டாளர்கள் மற்றும் உயர்ந்திறன் கொண்ட நபர்களும் அமெரிக்காவை தேடி வருவார்கள், இது அமெரிக்க அரசாங்கத்திற்கும் ஒரு வருமானத்தை பெற்று தரும் என டிரம்ப் நிர்வாகம் கூறியிருக்கிறது.

கடந்த செப்டம்பர் மாதமே இந்த கோல்ட் காடு விசா தொடர்பான அறிவிப்பினை டிரம்ப் வெளியிட்டார். தற்போது அது முழுமையாக செயல்பாட்டுக்கு வந்திருக்கிறது .அமெரிக்காவை சேர்ந்த நிறுவனங்கள் திறன்மிகு வெளிநாட்டவர்கள் வேண்டும் என்றால் இந்த கோல்டு கார்டு விசாவை பயன்படுத்தி அவர்களை வேலைக்கு அழைத்துக் கொள்ளலாம்.

https://trumpcard.gov/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று கோல்டு கார்டு விசாவுக்கு விண்ணப்பம் செய்யலாம். இதில் மூன்று வகையான கார்டுகள் இருக்கின்றன. கோல்டு கார்டு விசாவை பொறுத்த வரை அமெரிக்க அரசாங்கத்திற்கு 1 மில்லியன் டாலரை கட்டணமாக செலுத்தி விட வேண்டும் இது உங்களுக்கு திரும்ப கிடைக்காது .அது தவிர 15,000 டாலர்களை செயலாக்க கட்டணமாக செலுத்த வேண்டும்.

அதே போல கார்ப்பரேட் கோல்டு கார்டு என்ற விசா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் நிறுவனங்கள் ஊழியர்களை ஸ்பான்சர் செய்யலாம். இதற்கு 2 மில்லியன் டாலரை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக டிரம்ப் அமெரிக்க குடியுரிமையை விற்பனை செய்கிறார் என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன. ஆனால் டிரம்ப் இது அமெரிக்க அரசுக்கு வருமானத்தை தருவதோடு திறமையானவர்கள் மட்டுமே வருகை தருவதை உறுதி செய்யும் என கூறுகிறார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+