அமெரிக்காவை சேர்ந்த பல்வேறு நிறுவனங்களில் தலைமைப் பொறுப்புகளில் இந்தியர்கள் தான் இருக்கின்றனர். இந்தியாவிலிருந்து ஹெச்1பி விசாவில் அமெரிக்கா சென்று டெக் நிறுவனங்களில் வேலை செய்ய தொடங்கியவர்கள் தான் தற்போது பல்வேறு நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளாகவும் முக்கிய பொறுப்புகளிலும் இருக்கிறார்கள்.
அமெரிக்காவை சேர்ந்த டெக் நிறுவனங்கள் இந்திய பணியாளர்கள் இல்லாமல் நிச்சயமாக இயங்க முடியாது. கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை , மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சத்ய நாதெல்லாம் ஐபிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அரவிந்த் கிருஷ்ணா, பெர்பிளெக்சிட்டி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அரவிந்த் ஸ்ரீனிவாஸ் என பெரும்பாலான அமெரிக்க நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருப்பவர்கள் இந்தியர்கள் தான் . இவர்களில் பலரும் ஹெச்1பி விசா மூலம் அமெரிக்காவிற்கு சென்றவர்கள்.

அமெரிக்காவை சேர்ந்த டெக் நிறுவனங்கள் திறன்மிகு வெளிநாட்டு ஊழியர்களை அமெரிக்கா வரவழைத்து வேலைக்கு அமர்த்த இந்த விசாவை தான் பயன்படுத்துகின்றன. இப்படி அமெரிக்க நிறுவனங்களில் வேலை செய்பவர்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் இந்தியர்கள் . அந்த வகையில் பார்க்கும்போது அமெரிக்க டெக் நிறுவனங்கள் செயல்படுவதில் இந்தியர்களின் பங்கு முக்கியமானதாக இருக்கிறது.
அண்மைக்காலமாக அமெரிக்கா அரசாங்கம் ஹெச்1பி விசா நடைமுறையில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. ஹெச்1பி விசா கட்டணத்தை உயர்த்தியது , முன்பை போல அத்தனை எளிதாக தற்போது விசா கிடைப்பதும் இல்லை. அமெரிக்க நிறுவனங்கள் வேலைவாய்ப்பில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் என கூறி வருகிறது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒரு சமயம் ஹெச்1பி விசாவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பேசிய வண்ணம் இருக்கிறார். அமெரிக்க அரசாங்கம் ஹெச்1பி விசா மீது இப்படி கடுமையான நிலைப்பாட்டை எடுத்திருக்கும் சூழலில்அமெரிக்காவில் இருக்கக்கூடிய இந்தியர்களும் , இந்தியாவிலிருந்து சென்று அமெரிக்க டெக் நிறுவனங்களை ஆளக்கூடிய இந்தியர்களும் ஏன் ஹெச்1பி விசாகாரத்தில் எந்த கேள்வியும் எழுப்பாமல் மௌனம் காக்கிறார்கள் என பலரும் சாடினர்.
இந்த நிலையில் தான் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஹெச்1பி விசா விவகாரத்தில் முதன்முறையாக மௌனம் கலைத்துள்ளார். பிபிசிக்கு பேட்டி அளித்துள்ள அவர், தொழில்நுட்ப வளர்ச்சியின் வரலாற்றை நீங்கள் பார்க்கும் போது இந்த துறையின் புலம்பெயர்ந்தோரின் பங்களிப்பு தான் முக்கியமானதாகவும் தனித்துவமானதாகவும் இருந்திருக்கிறது என கூறியிருக்கிறார்.
ஹெச்1பி விசா நடைமுறையில் சில குறைபாடுகள் இருக்கின்றன அரசு அவற்றை சரி செய்ய முயல்கிறது என்று நான் நம்புகிறேன் என கூறியிருக்கிறார். திறன்மிகு நபர்கள் அமெரிக்காவிற்கு வரக்கூடிய வகையில் இந்த விசா முறை நீடிக்கும் வகையில் சிறு குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் அரசு மாற்றங்களை செய்கிறது என்று நம்புகிறேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
சுந்தர் பிச்சை கடந்த 2020 ஆம் ஆண்டு டிரம்ப் முதன் முறை ஆட்சியில் இருந்த போது ஹெச்1பி விசாவுக்கு ஆதரவாக தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஒரு கருத்தை வெளியிட்டு இருந்தார். அது தற்போது வைரல் ஆகி வருகிறது. அமெரிக்க பொருளாதார வெற்றியில் புலம்பெயர்ந்தோர் மகத்தான பங்களிப்பை தந்துள்ளனர், தொழில்நுட்ப துறையில் உலகளாவிய தலைவராக அமெரிக்கா வளர்ந்து நிற்பதற்கும் டெக் துறையில் கூகுள் நிறுவனம் முதல் இடத்தில் இருப்பதற்கும் புலம்பெயர்ந்தோரே காரணம் என கூறியிருந்தார்.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications