வாஷிங்டன், அமெரிக்கா: டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார். 79 வயதாகும் டிரம்ப் தான் அமெரிக்க அதிபர் பதவி பதவியை அலங்கரிக்கும் மிக வயதான ஒரு நபர்.
டிரம்ப் உடல்நலம்: டிரம்ப் குறித்து அவ்வப்போது சமூக வலைதளங்களில் பல்வேறு விஷயங்கள் டிரெண்டாகும். ஆனால் திடீரென டிரம்பின் உடல்நலம் குறித்த பதிவுகள் சமூக வலைதளங்களை ஆக்கிரமிக்க தொடங்கி இருக்கின்றன. டிரம்பின் கைகளில் காயங்கள் இருப்பதை காட்டக்கூடிய சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியுள்ளன. கடந்த சில தினங்களாக டிரம்ப் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்தார். இந்த நிலையில் டிரம்ப் இறந்துவிட்டார் என நெட்டிசன்கள் பகிர தொடங்கினர்.

ஆரோக்கியமாக உள்ளார்: இதற்கிடையே அமெரிக்க துணை அதிபரான ஜேடி வான்ஸ் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அதிபர் டிரம்ப் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறார். அவர் தன்னுடைய பதவிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்வார். ஒருவேளை ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் அதிபர் பதவியை ஏற்பதற்கு நான் தயாராக இருக்கிறேன் என கூறியிருந்தார். இந்நிலையில் டிரம்ப் சில தினங்களாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்தது சமூக வலைத்தள வாசிகளை பெருமளவில் சிந்திக்க வைத்து விட்டது .
கோல்ஃப் விளையாடினார்: தன்னுடைய உடல்நலம் குறித்து அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக டிரம்ப் கோல்ஃப் விளையாட்டில் ஈடுபட்ட புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. விர்ஜினியா மாகாணத்தில் உள்ள கோல்ஃப் விளையாட்டு மைதானத்திற்கு தன்னுடைய பேரப்பிள்ளைகளுடன் சென்று டிரம்ப் கோல்ஃப் விளையாடியுள்ளார்.அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருக்கின்றன .

டிரம்புக்கு என்ன பிரச்சினை: டிரம்பினை பொறுத்தவரை நாள்பட்ட நரம்பியல் பாதிப்பு அவருக்கு இருப்பதாக வெள்ளை மாளிகை தரப்பிலேயே விளக்கம் அளிக்கப்பட்டது. இதனை ஆங்கிலத்தில் chronic venous insufficiency (CVI) என அழைக்கிறார்கள். வயது மூப்பு காரணமாக வரக்கூடிய ஒரு பிரச்சினை தான் இது. ஆனால் இந்த பிரச்சனையை அவர் கவனிக்காமல் விட்டால் பெரிய அளவிலான சிக்கல்களை சந்திக்க நேரிடும் என மருத்துவர்கள் தற்போது எச்சரிக்கை விடுக்க தொடங்கி இருக்கின்றனர்.
ஏன் கைகளில் காயம்: இந்த பிரச்சனை தீவிரம் அடையும்போது கால்களில் சிகிச்சை அளிக்க முடியாத காயங்கள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக நரம்பியல் சிகிச்சை நிபுணரான டேவிட் நிம்மிக்குவான் குறிப்பிட்டு இருக்கிறார். பொதுவாக இந்த பிரச்சனை இருப்பவர்களுக்கு கால்களில் வீக்கம் ஏற்படும் என்றும் இந்த வீக்கம் காரணமாக தோலில் மாற்றமடைந்து தோல் வறண்டு போவது, வீக்கம் அடைவது உள்ளிட்டவற்றை காணலாம் என்றும் இதனை கவனிக்காமலே விடும்போது இந்த காயங்கள் மறையாமல் இறுதியில் கால்களையே அகற்றக் கூடிய சூழல் கூட உண்டாகும் என்றும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார் .
எப்போது கண்டுபிடிப்பு: இந்த பிரச்சனை இருப்பவர்கள் கால்களை உயரமாக வைத்துக் கொள்ள வேண்டும், எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுரைகளை மருத்துவர்கள் வழங்குகின்றனர். முதன் முதலில் ஜூலை மாதம் தான் நெட்டிசன்கள் டிரம்பின் கையில் இருக்கும் இந்த காயங்களை கண்டறிந்து சமூக வலைத்தளங்களில் பகிர தொடங்கினர். அப்போதே வெள்ளை மாளிகை தரப்பில் அவருக்கு அடிக்கடி கைகளை குலுக்குவதாலும் ஆஸ்பியரின் மருந்தினை உட்கொள்வதாலும் இந்த பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது என தெரிவித்தது.
டிரம்ப் மருத்துவர் தகவல்: மேலும் அவருக்கு chronic venous insufficiency (CVI)என்ற பிரச்சனையை நரம்பியல் பிரச்சனை இருக்கிறது என்றும் இருந்தாலும் அவர் மருத்துவர் ரீதியாக ஃபிட்டாக தான் இருக்கிறார் என்றும் வெள்ளை மாளிகை தரப்பிலிருந்து விளக்கம் தரப்பட்டது . வெள்ளை மாளிகைக்கான அதிகாரப்பூர்வ மருத்துவரும் டிரம்பின் உடல்நிலை சிறப்பான நிலையில் இருக்கிறது அவருக்கு எந்த ஒரு தீவிரமான உடல்நல பாதிப்பும் இல்லை நரம்பியல் பிரச்சனை காரணமாக காலில் சில சமயம் வீக்கம் ஏற்படுகிறது தவிர அதனால் அவருக்கு வேறு எந்த விதமான பாதிப்புகளும் இல்லை என விளக்கம் தந்திருக்கிறார்.
More From GoodReturns

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!

அமெரிக்காவுக்கு ஈரான் தந்த ’ரகசிய பரிசு’ – அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகம்..!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

டிரம்ப் வாயை திறந்தாலே பொய் தானா? - ஈரான் ராணுவம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!!

ஈரானை சீண்டும் டிரம்ப்.. மீண்டும் போர் தீவிரமாகுமா..?

டிரம்ப் செய்யும் தில்லுமுல்லு.. உண்மையை உடைத்த ஈரான் தலைவர்..!

டிரம்ப் ஊதும் மகுடிக்கு கெவின் வார்ஷ் ஆடுவாரா..? தலைதூக்கும் ரெசிஷன் அச்சம்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்வது என்ன?

யாருடைய கட்டுப்பாட்டில் ஹார்முஸ் ஜலசந்தி? அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்லும் புது கணக்கு

பொட்டில் அடித்தது போல் சொன்ன Iran.. டிரம்ப் மீது சுத்தமா நம்பிக்கையில்லை.. JD Vance வர சொல்லுங்க..!!

என்னுடைய பவர் தெரியாம பேசுறீங்க.. டிரம்ப் வாயை திறந்த உடன் கச்சா எண்ணெய் விலை 13% வீழ்ச்சி..!



Click it and Unblock the Notifications