சண்டையும் இல்ல.. சமாதானமும் இல்ல..: ஈரான் போரில் டிரம்பின் அதிரடி வியூகம்..!!

பிப்ரவரி 28ஆம் தேதி தொடங்கிய ஈரான் போர் முடிவுக்கே வராமல் இருக்கிறது. ஈரானையும் அமெரிக்காவையும் ஒரு ஒப்பந்தத்திற்குள் கொண்டு வந்து எப்படியாவது போரை முடித்து வைக்க வேண்டும் என பல்வேறு நாடுகளும் முயற்சிக்கின்றன. ஆனால் இதுவரை அது நடக்கவே இல்லை.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் நடந்த இடைக்கால தேர்தல்களில் தோல்வியை சந்தித்த நிலையில் அதற்கு ஈரான் போர் தான் காரணம் என்பதை ஒப்பு கொண்டுள்ளார். இந்த சூழலில் தான் டிரம்ப், ஈரான் விவகாரத்தில் புதிய மற்றும் வித்தியாசமான அணுகுமுறையை கையில் எடுத்துள்ளார். மீண்டும் நேரடி ராணுவ தாக்குதல்களை நடத்துவதோ அல்லது சாதகமற்ற சமாதான ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதோ இல்லை என்ற முடிவுக்கு அமெரிக்கா வந்துள்ளது.

சண்டையும் இல்ல.. சமாதானமும் இல்ல..: ஈரான் போரில் டிரம்பின் அதிரடி வியூகம்..!!

இதற்கு மாறாக, பொருளாதார அழுத்தங்கள் மூலம் ஈரானை வழிக்கு கொண்டு வரலாம் என்ற புது உத்தியை டிரம்ப் தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ இது குறித்து முக்கிய ஆலோசனையும் நடத்தியதாக ஆக்ஸியோ தளம் வெளியிட்டுள்ள செய்தி கூறுகிறது.

அமெரிக்கா ஈரான் மீதான பொருளாதார பிடியை மேலும் இறுக்க திட்டமிட்டுள்ளது. ஈரானின் நிதி உள்கட்டமைப்பை பலவீனப்படுத்துவதன் மூலம், ஆயுதம் ஏந்திய குழுக்களுக்கு நிதியுதவி செய்வதையோ அல்லது தனது ராணுவ திறன்களை மீண்டும் மேம்படுத்துவதையோ தடுக்க முடியும் என டிரம்ப் நிர்வாகம் நம்புகிறது. எனவே ஈரானுக்கு நிதி கிடைக்காமல் செய்வதற்கான வழிகளை அமெரிக்கா ஆய்வு செய்து வருகிறது.

Also Read

முன்னதாக கத்தார் பிரதமர் ஷெய்க் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானியுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, டிரம்ப் ராணுவ தாக்குதல்களை தவிர்ப்பதற்கே முன்னுரிமை அளிப்பதாக கூறியுள்ளார். தற்போதைய சூழ்நிலையில் புதிய வான்வழி தாக்குதல்கள் தேவையில்லை என்றும் அவை சாத்தியமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

மேலும், Iron Gate என்ற புதிய ராணுவ நடவடிக்கை மூலம் , மேம்பட்ட ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை கடத்த பயன்படுத்தப்படும் தரைவழி போக்குவரத்து பாதைகளை அமெரிக்கா முடக்க திட்டமிட்டுள்ளது.

அமெரிக்காவின் இந்த நீண்டகால பொருளாதார நெருக்கடி உத்தி, பிராந்தியத்தில் உள்ள சில அமெரிக்க நட்பு நாடுகளான துருக்கி, ஈராக் மற்றும் பாகிஸ்தான் ஆகியவற்றுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. பேச்சுவார்த்தை மூலம் ஒரு தீர்வை எட்டுவதை விட, பொருளாதார ரீதியாக ஈரானை நீண்ட காலம் நசுக்க நினைப்பது குறித்து இந்த நாடுகள் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+