AI டேட்டா சென்டர்களுக்கு சிக்கல்… டிரம்ப் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஏஐ பயன்பாடு நாளுக்கு நாள் அதிகமாகும் நிலையில் அதற்கேற்ப டேட்டா சென்டர்களின் தேவையும் அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களின் வளர்ச்சி காரணமாக டேட்டா சென்டர்களின் பயன்பாடும், அதனால் ஏற்படும் மின் தேவையும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் டேட்டா சென்டர்கள் குறித்து ஒரு முக்கியமான திட்டத்தை முன்வைத்துள்ளார்.

டேட்டா சென்டர்களை அமைக்கும் நிறுவனங்கள், தங்களின் திட்டங்களுக்கு பொதுமக்களின் ஆதரவை பெற வேண்டுமானால், அந்தந்த உள்ளூர் சமூகங்களுக்கும் அல்லது அங்குள்ள தனிநபர்களுக்கும் வழக்கமான முறையில் ஒரு டிவிடெண்ட் அதாவது பங்குத்தொகை வழங்க வேண்டும் என யோசனை கூறியுள்ளார்.

AI டேட்டா சென்டர்களுக்கு சிக்கல்… டிரம்ப் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

பெரும்பாலான மின்சாரத்தை உறிஞ்சும் இந்த பிரம்மாண்ட டேட்டா சென்டர்கள், இனிமேல் சொந்தமாக மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டும் என்றும், தங்களுக்கு தேவையான மின்சாரம் போக மீதமுள்ள உபரி மின்சாரத்தை உள்ளூர் சமூகத்திற்கோ அல்லது மின்னகங்களுக்கோ விநியோகிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

டேட்டா சென்டர்களின் அதிகப்படியான மின் பயன்பாடு காரணமாக உள்ளூர் பகுதிகளில் மின்சார கட்டணம் உயரும் என்ற பொதுமக்களின் கவலைக்கு இது தீர்வாக அமையும் என டிரம்ப் குறிப்பிடுகிறார். எனவே நிறுவனங்களே சொந்தமாக மின்சாரம் தயாரித்தால், அது உள்ளூர் மின் விலையை கட்டுக்குள் வைக்க உதவுவதுடன், மின் கட்டணம் கணிசமாக குறையவும் வழிவகுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Also Read

சில பகுதிகளில் டேட்டா சென்டர்கள் தொடங்குவதற்கு ஆரம்பத்தில் கடுமையான எதிர்ப்புகள் இருந்தபோதிலும், நிறுவனங்கள் உள்ளூர் மக்களுடன் நிதி ரீதியான ஒப்பந்தங்களை செய்த பிறகு அந்த திட்டங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாக டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பதிவில் தெரிவித்துள்ளார்.

நிறுவனங்கள் இதுபோன்ற ஒப்பந்தங்கள் மூலம் பொதுமக்களின் ஒப்புதலைப் பெற்று, அமெரிக்கா முழுவதும் டேட்டா சென்டர் கட்டுமான பணிகளை விரைவுபடுத்த வேண்டும்,இது அமெரிக்காவிற்கு மிகவும் நல்லது என தெரிவித்துள்ளார்.

Recommended For You

டிரம்ப் தனது பதிவில் இந்த திட்டங்களை எப்படி நடைமுறைப்படுத்த போகிறார் என்பது குறித்தோ, மின் உற்பத்தி மற்றும் உள்ளூர் மக்களுக்கான ஈவுத்தொகை எந்த வடிவில் இருக்கும் என்பது குறித்தோ, அல்லது தனது நிர்வாகம் இதற்காக முறையான விதிகளை கொண்டுவருமா என்பது குறித்தோ எந்தவிதமான விரிவான தகவல்களையும் தெரிவிக்கவில்லை.

டேட்டா சென்டர்கள் அதிக மின்சாரம் மற்றும் தண்ணீரை பயன்படுத்துகின்றன எனவே மக்கள் மத்தியில் இவற்றுக்கு எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இந்த சூழலை எதிர்கொள்ளவே டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+