சீனாவின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபாவின் நிறுவனர் மற்றும் தலைவருமான ஜாக் மா, டிரம்ப் தொடுத்து வரும் வர்த்தகப் போர் நடவடிக்கையால் அமெரிக்காவில் தான் உறுதி அளித்த 10 லடம் வேலை வாய்ப்புகளை உருவாக்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
2017-ம் ஆண்டு டிரம்ப் அமெரிக்க அதிபராகப் பதவி ஏற்ற பிறகு ஜாக் மாவை சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது அடுத்த 5 ஆண்டுகளில் தான் அமெரிக்காவில் 10 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக உறுதி அளித்து இருந்தார்.
ஜாக் மா
ஆனால் கடந்த சில மாதங்களாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீன பொருட்கள் மீது தொடர்ந்து வரிகளை உயர்த்தி வர்த்தகப் போர் தொடுத்து வருவதால் இந்த முடிவினை ஜாக் மா எடுத்துள்ளார். சீனாவும் அமெரிக்கப் பொருட்கள் மீது போட்டிக்காக வரிகளை உயர்த்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
கோரிக்கை
அமெரிக்கா - சீனா இடையிலான நட்புறவை இந்த வர்த்தகப் போர் சிதைத்து வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு வர்த்தகப் போருக்கு அலிபாபா நிறுவனம் தயாராக இருப்பதாகவும், அமெரிக்கப் பொருட்கள் விற்பனை குறைப்பதாகவும், உள்நாட்டுப் பொருட்களை வாடிக்கையாளர்கள் வாங்க வேண்டும் என்றும் ஜாக் மா சீன மக்களுக்குக் கோரிக்கை வைத்து இருந்தார்.
எச்சரிக்கை
அமெரிக்கா - சீனா இடையில் இது போன்ற வர்த்தகப் போர் கடந்த 20 ஆண்டுகளாகவே நடைபெற்று வந்தாலும் டிரம்ப் தலைமையில் இந்த முறை அது மிக உக்கிரமாக உள்ளது என்றும் ஜாக் மா எச்சரித்துள்ளார்.
குறைந்த காலத் தீர்வு
குறைந்த காலத் தீர்வை நோக்கிச் சென்றால் அது கண்டிப்பாக வெற்றி பெறாது என்றும், அமெரிக்கா, சீனா, ஐரோப்பா இடையிலான வணிகச் சமுகம் பெரிய அளவில் பாதிப்படைந்து வருகிறது என்றும் முதலீட்டாளர் மாநாடு ஒன்றில் ஜாக் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications