டிரம்புக்கு இவ்வளவு பணத்தாசை இருக்க கூடாது ; அதிபர் என்பதையே மறந்துவிட்டாரா? கொந்தளிக்கும் அமெரிக்கர்கள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிகப்பெரிய ஒரு பிஸ்னஸ் மேன் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதிபர் பதவிக்கு வந்த பின்னரும் அவர் பிஸ்னஸ் மேனை போலவே லாபத்தை மட்டுமே இலக்காக கொண்டு செயல்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

டிரம்ப் அதிபராக இருப்பதால் முன் கூட்டியே கொள்கை முடிவுகளை தன்னை சார்ந்தவர்களுக்கு தெரிவித்து பங்குகளை வாங்குவது விற்பது என பெரிய மோசடியில் ஈடுபட்டு வருகிறார் என அவ்வப்போது குற்றசாட்டுகள் ஆதாரத்துடன் வெளி வருகின்றன. இந்நிலையில் டிரம்பே இது உண்மை தான் என கூறும் அளவுக்கு ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது, இதனால் டிரம்ப் பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

டிரம்புக்கு இவ்வளவு பணத்தாசை இருக்க கூடாது ; அதிபர் என்பதையே மறந்துவிட்டாரா? கொந்தளிக்கும் அமெரிக்கர்கள்

டிரம்ப் தனது சமூக ஊடக நிறுவனமான 'ட்ரூத் சோஷியல்' வாயிலாக வெளியிடும் கருத்துகள் மற்றும் கொள்கை அறிவிப்புகளை முன்கூட்டியே தெரிந்துகொள்ள, பங்குச்சந்தை வர்த்தகர்களுக்கு மாதத்திற்கு 1 லட்சம் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 84 லட்சம்) கட்டணத்தில் புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது. டிரேடிங் செய்பவர்கள் இந்த கட்டணம் செலுத்தினால் டிரம்பின் பதிவுகளை முன்கூட்டியே தெரிந்து கொண்டு டிரேடிங் முடிவுகளை எடுக்கலாம் என சொல்லப்படுகிறது.

Also Read

இந்த நடவடிக்கை பங்குச்சந்தையில் முறையற்ற வர்த்தகத்திற்கு வழிவகுக்கும் என்றும், அதிகாரத்தை பயன்படுத்தி டிரம்ப் தனிப்பட்ட லாபம் ஈட்டுவதாகவும் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் உறுப்பினர்ள் கடுமையாக சாடியுள்ளனர். Truth API என அழைக்கப்படும் இந்த சேவை சனிக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது. இதனை பயன்படுத்தும் நிறுவனங்கள், அதிபர் டிரம்ப் பதிவிடும் தகவல்களை பொதுமக்களுக்கு கிடைப்பதற்கு முன்பே அதிவேகமாக பெற்றுக்கொள்ள முடியும்.

டிரம்புக்கு இவ்வளவு பணத்தாசை இருக்க கூடாது ; அதிபர் என்பதையே மறந்துவிட்டாரா? கொந்தளிக்கும் அமெரிக்கர்கள்

ஏற்கனவே பல ஊடகங்களும், சமூக ஊடக நிறுவனங்களும் இத்தகைய சேவைகளை வழங்கினாலும், டிரம்ப் தனது சொந்த நிறுவனம் மூலம் இதனை வழங்கப்படுவது விமர்ச்சிக்கப்படுகிறது. ஏனேனில் டிரம்ப் பல முக்கிய அறிவிப்புகளை ட்ரூத் சோஷியல் வாயிலாகவே வெளியிடுகிறார். அவரது அனைத்து பதிவுகளும் பங்கு சந்தையில் பெரிய அளவிலான மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.

எனவே டிரம்ப் நிறுவனத்தின் இந்த அறிவிப்பை விமர்சிக்கும் ஏபிள் ஆல்பா டிரேடிங் நிறுவனத்தின் ஐரின் ஆல்ட்ரிட்ஜ் ஒரு பொது நிறுவனத்தின் சிஇஓ இதனை அறிவித்திருந்தால் சிறை தண்டனை கிடைத்திருக்கும். டிரம்ப் என்பதால் யாராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை என கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி, முக்கியமான முடிவுகளை ஒரு குறிப்பிட்ட குழுவினருக்கு மட்டும் முன்கூட்டியே கசியவிடுவது முறையற்றது என்றும் சாடுகிறார்.

Recommended For You

பங்கு சந்தை போக்கை மாற்றக்கூடிய தகவல்கள் சில பெரிய நிறுவனங்களுக்கு மட்டும் முன்கூட்டியே கிடைப்பது, சாதாரண முதலீட்டாளர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த விவகாரம் குறித்து வெள்ளை மாளிகை கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

அதே வேளையில் டிரம்ப் மீடியா & டெக்னாலஜி குரூப் பொதுவான தகவலுக்கும், பொது அல்லாத தகவலுக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்துகொள்ளாதவர்களின் விமர்சனம் இது என விளக்கம் அளித்துள்ளது. டிரம்ப் மீடியா நிறுவனத்தின் வருவாய் கடந்த ஆண்டு வெறும் 3.7 மில்லியன் டாலராக மட்டுமே இருந்தது. அதே சமயம் நிறுவனம் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. இந்த புதிய சேவையின் மூலம், நிறுவனத்தின் ஆண்டு வருவாயை விட அதிக லாபத்தை ஈட்ட முடியும் என சொல்லபப்டுகிறது.

இதனால் தான் இப்படி ஒரு சேவை அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இருந்தாலும் ஒரு நாட்டின் அதிபர் தனது அதிகாரப்பூர்வ கொள்கை முடிவுகளை பணமாக்க முயற்சி செய்வது முறையா என பலரும் கேள்வி எழுப்புகின்றனர். டிரம்ப் ஒரு அதிபராக இல்லாமல் பிஸ்னஸ் மேனாகவே செயல்படுவது தவறு என்றும் தெரிவிக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+