அமெரிக்க உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடு என்பதை காட்டிலும், உலகின் டெக் வல்லமை கொண்ட நாடாகவே பார்க்கப்படுகிறது. நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களின் அமெரிக்க நிறுவனங்களும், அமெரிக்க தொழில்நுட்பமும் ஏதாவது ஒரு விதத்தில் தொடர்புடன் உள்ளது.
இந்த நிலையில் டிரம்ப்-க்கும் சிலிக்கான் வேலி பெரும் தலைகளுக்கும் சமீப காலமாக முரண்பாடாக இருக்கும் வேளையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நேற்று ஒரு சம்பவம் நடந்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வியாழக்கிழமை மாலை வெள்ளை மாளிகையில் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்களுடன் ஒரு விருந்து நிகழ்ச்சியை நடத்தினார்.

இந்த விருந்து, அமெரிக்காவின் முதல் பெண்மணி மற்றும் டிரம்ப்-ன் மனைவியுமான மெலனியா டிரம்ப் தலைமையிலான புதிதாக உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு கல்வி பணிக்குழுவின் கூட்டத்தைத் தொடர்ந்து நடைபெற்றது. இந்நிகழ்வில், தொழில்நுட்ப நிறுவனங்கள் அமெரிக்காவின் செயற்கை நுண்ணறிவு திறன்களையும் டிஜிட்டல் உள்கட்டமைப்பையும் வலுப்படுத்துவதற்காக பல்லாயிரம் கோடி டாலர் முதலீடுகளை உறுதியளித்தனர். இந்த கூட்டம், அமெரிக்காவின் தொழில்நுட்ப எதிர்காலத்தை வடிவமைப்பதற்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
முதலீடுகளில் கவனம் செலுத்திய டிரம்ப்
இந்த உயர்மட்ட விருந்தின் போது, டிரம்ப் அமெரிக்க டெக் நிறுவனங்கள் அமெரிக்க மண்ணில் எவ்வளவு முதலீடு செய்கிறது என்பதில் தான் முழு கவனம் செலுத்தினார். டெக் நிறுவன தலைவர்கள் மத்தியில் ஓரே மேஜையில் சுற்றி டிரம்ப்-ம் அமர்ந்திருந்தார்.
இந்த இரவு விருந்தில் ஒவ்வொரு தொழில்நுட்ப தலைவரிடமும் அவர்களின் நிறுவனங்கள் அமெரிக்காவில் எவ்வளவு முதலீடு செய்ய உள்ளன என்பதை மிகவும் வெளிப்படையாக அனைவரின் முன்னிலையில் கேட்டார். இதற்கு அனைவரும் பதில் அளித்தாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர்.
டிரம்ப்-ன் அருகில் அமர்ந்து இருந்த மெட்டாவின் தலைமை நிர்வாகி மார்க் ஜுக்கர்பெர்க் முதலில் இதற்கு பதிலளித்தார். மார்க் எங்களுடைய நிறுவனம் 2028 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவில் குறைந்தபட்சம் 600 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய உள்ளதாகக் கூறினார். இதற்கு டிரம்ப், "இது மிகப்பெரிய தொகை" என்று குறிப்பிட்டு, மெட்டாவின் லூசியானாவில் 50 பில்லியன் டாலர் மதிப்பிலான டேட்டா சென்டர் திட்டத்தை சமீபத்தில் பாராட்டியதாகக் குறிப்பிட்டார்.
இதை தொடர்ந்து ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டிம் குக், தங்கள் நிறுவனமும் 600 பில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்தார். இதேபோல், கூகுளின் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை, அவர்களின் முதலீடு 250 பில்லியன் டாலர்களாக இருக்கும் என்று கூறினார்.
மைக்ரோசாஃப்ட் தலைமை நிர்வாகி சத்ய நாதெல்லா, ஆண்டுக்கு 80 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்யப்படும் என்று உறுதியளித்தார். இந்த பதில்களுக்கு டிரம்ப் "நல்லது, மிகவும் நல்லது" என்று பாராட்டினார்.
டிரம்ப்-ன் Make America Great Again கொள்கைக்கு இணங்க டிரம்ப் அமெரிக்காவின் ஒவ்வொரு நிறுவனத்திற்கு நெருக்கடி கொடுத்து வரும் வேளையில், தற்போது அமெரிக்க நிறுவனங்கள் தங்களுடைய பணத்தை அமெரிக்க மண்ணிலேயே கொட்ட துவங்கியுள்ளனர்.
எலான் மஸ்க் மிஸ்ஸிங்
டிரம்ப் தலைமையிலான கூட்டத்தில் பல டெக் நிறுவன தலைவர்கள் கலந்துக்கொண்ட நிலையில், அமெரிக்க டெக் துறை முகத்தை மொத்தமாக மாற்றிய டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் கலந்துக்கொள்ளவில்லை. சில மாதங்களுக்கு முன் டிரம்ப் - எலான் மஸ்க் நடப்பில் ஏற்பட்ட விரிசல் இன்று வரையில் சரியாகாமல் உள்ளது.
உயர்மட்ட விருந்தினர் பட்டியல்
டிரம்ப் உடனான இந்த இரவு விருந்தில் பங்கேற்றவர்கள் பட்டியலை வெள்ளை மாளிகையின் ளெவியிட்டு உள்ளது. இதில் மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின், ஓபன்ஏஐ நிறுவனர் கிரெக் ப்ராக்மேன், ஆரக்கிள் தலைமை நிர்வாகி சஃப்ரா காட்ஸ், ஐபிஎம் தலைவர் அரவிந்த் கிருஷ்ணா, ப்ளூ ஆரிஜின் தலைமை நிர்வாகி டேவிட் லிம்ப், மைக்ரான் தலைமை நிர்வாகி சஞ்சய் மெஹ்ரோத்ரா, டிப்கோ மென்பொருள் தலைவர் விவேக் ரணதிவே, பாலன்ட்டீர் நிர்வாகி ஷ்யாம் சங்கர், ஸ்கேல் ஏஐ நிறுவனர் அலெக்ஸாண்டர் வாங் மற்றும் ஷிஃப்ட்4 பேமெண்ட்ஸ் தலைமை நிர்வாகி ஜாரெட் ஐசக்மேன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த உயர்மட்ட விருந்தினர் பட்டியலில் 5 இந்திய சிஇஓ-க்கள் இருந்தனர்.
டிரம்ப் மற்றும் சிலிக்கான் வேலி
இந்த விருந்து, டிரம்புக்கும் சிலிக்கான் வேலி தலைவர்களுக்கும் இடையிலான உறவை புதுப்பிக்கும் ஒரு முயற்சியாகக் கருதப்படுகிறது. "இது நம் நாட்டை ஒரு புதிய உயரத்திற்கு கொண்டு செல்கிறது" என்று டிரம்ப் கூறினார்.
More From GoodReturns

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ஈரான் மீது பங்கர்-பஸ்டர் குண்டு தாக்குதல்.. டிரம்ப் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு.. அதுவும் இந்த இடத்தில்..!!

16 வருஷமா பார்த்த வேலை இப்போ இல்ல.. ஒரே ஈமெயிலில் மாறி போன வாழ்க்கை.. கண்ணீர் சிந்தும் ஐடி ஊழியர்!!

வெறும் 3 வருடத்தில் ரூ.3.2 லட்ச டூ ரூ.80 லட்சம் சம்பளம்.. TCS-இல் தொடங்கி கூகுள் சென்ற டெக்கி..!!

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications