நான் தோற்றுவிட்டால்..அது அமெரிக்காவுக்கு தான் நஷ்டம்.. ஏற்றத்தாழ்வில் பங்கு சந்தைகள்…!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நான் வரவிருக்கும் தேர்தலில் தோற்றுவிட்டால் அது எனக்கு நஷ்டமல்ல, அது அமெரிக்காவிற்கு தான் நஷ்டம் என்று தெரிவித்துள்ளார் டொனால்டு டிரம்ப்.

மிகவும் பரப்பரப்பான விஷயங்களுக்கு மத்தியில் மிக எதிர்பார்ப்புகள் அடங்கிய நவம்பர் மாதம் வரவிருக்கும் தேர்தலில், யார் ஜெயிப்பார்களோ என மிகுந்த எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது.

இதற்கு மத்தியில் நாட்டில் நிலவி வரும் கொரோனா தாக்கத்தினால் பொருளாதாரம் சீர்குலைந்து போயுள்ளது எனலாம்.

மேலும் இதனால் பல லட்சம் பேர் வேலையிழந்து தவித்து வருகின்றனர். இதற்கு சிறந்த உதாரணமே அமெரிக்காவில் வேலையின்மை நலனுக்காக விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளதாக அந்த நாட்டு செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட தரவுகள் மூலம் அறிய முடிகிறது.

ஐடி ஊழியர்களுக்கே இந்த நிலையா.. அங்கேயும் இனப்பாகுபாடா..!ஐடி ஊழியர்களுக்கே இந்த நிலையா.. அங்கேயும் இனப்பாகுபாடா..!

தேர்தல் என்னவாகும்

தேர்தல் என்னவாகும்

இதற்கு மத்தியில் தற்போது நடக்கவிருக்கும் அதிபர் தேர்தல் நடக்குமா என்ற சந்தேகமும் நிலவி வருகின்றது. இது ஒரு புறம் எனில் அப்படியே திட்டமிட்டபடி அதிபர் தேர்தலே நடந்தாலும், தற்போதுள்ள ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஜெயிப்பாரா என்பது கேள்விக்குறியாகத் தான் உள்ளது. ஒன்று மக்களை பெரும் அவதிக்குள்ளாக்கி வரும் கொரோனாவினை சரியாக கையாளவில்லை என்ற சில குற்றச்சாட்டுகளும் நிலவி வருகிறது.

விசாரணைக்கு அழைப்பு

விசாரணைக்கு அழைப்பு

இதற்கிடையில் கடந்த மாதம் அமெரிக்காவின் கறுப்பினத்தவர் ஜார்ஜ் பிளாய்டு, அமெரிக்கா போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டபோது, கொலைசெய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனால் அமெரிக்காவில் பெரும் கலகமே ஏற்பட்டது. ஆயிரக்கணக்கானோர் தங்களது உரிமைகள் பறிக்கப்படுவதாகவும், மேலும் இனப்பாகுபாடு உள்ளதாகவும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

சில மாகாணங்கலில் போராட்டம்

சில மாகாணங்கலில் போராட்டம்

இதற்கிடையில் தால் இந்த பிரச்சனை பூதகரமாகவே மாறியது. அமெரிக்காவின் சில மாகாணங்களில் ஆங்காங்கே 144 தடை உத்தரவும் போடப்பட்டது. ஆனால் அதனையும் மீறி போராட்டக் காரர்கள் பிரச்சனை செய்து வரவே, இதற்கு மேலும் பிரச்சனை அதிகரித்தால், அமெரிக்கா ராணுவத்தினை இறக்க போவதாக அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்தார். இதன் காரணமாகவும் ஒரு சாரர் டிரம்புக்கு எதிராக கோசங்களை விடுத்து வருகின்றன.

யார் ஜெயிப்பார்கள்

யார் ஜெயிப்பார்கள்

இதற்கிடையில் அமெரிக்க தேர்தலில் யார் ஜெயிப்பார்கள், பொருளாதாரம் என்னவாகும். மீண்டும் ஏதேனும் ஊக்குவிப்பு சலுகைகள் இருக்குமா? எவ்வளவு இருக்குமா? என்ற எதிர்பார்ப்பிலேயே பங்கு சந்தைகள் பெரும் ஏற்றத் தாழ்வுகளை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக இந்திய பங்கு சந்தைகளும் பெரும் ஏற்றத் தாழ்வினை சந்தித்து வருகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Trump said If he does not win the election scheduled for November 3,I think it would be a very bad thing for our country.

US president donald trump said If he does not win the election scheduled for November 3, I think it would be a very bad thing for our country.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X