அமெரிக்க பொருளாதாரம் வீழ்ச்சி காணும்.. ஒப்புக் கொண்ட டொனால்டு டிரம்ப்..!

பொருளாதாரத்தில் முதன்மை நாடான அமெரிக்காவே சீனாவின் கொரோனாவைக் கண்டு அலண்டு போயுள்ளது என்றால் அது பொய்யாகாது.

ஏனெனில் அந்தளவுக்கு மக்களை வாட்டி வதைத்து வருகிறது எனலாம். இதனால் மக்கள் ஒரு புறம் பாதிக்கப்பட்டு வருவது, பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும் கண்கூடாக பார்க்க முடிகிறது.

இந்த நிலையில் முதன்மை நாடாக இருந்தால் என்ன, இரண்டாவது பொருளாதார நாடாக இருந்தால் என்ன? நான் எனது கடமையை செவ்வனே செய்வேன் என தனது பங்கிற்கு பொருளாதாரத்திலும் கணிசமான அளவினை தன்னுடன் எடுத்து செல்கிறது.

 எந்த விதமான நெருக்கடியையும் சமாளிப்போம்

எந்த விதமான நெருக்கடியையும் சமாளிப்போம்

இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமெரிக்கா பொருளாதாரம் பாதிக்கப்படக் கூடும் என்பதைக் ஒப்புக் கொண்டுள்ளார். எனினும் நாங்கள் அந்த சவாலினையும் கடந்து செல்வோம். மேலும் சூழ்நிலையை புரிந்து கொண்டு அந்த நெருக்கடியையும் சமாளிப்போம் என்றும் மீண்டும் தனது கம்பீரத்தை உயர்த்திக் காட்டியுள்ளார்.

படு வீழ்ச்சி

படு வீழ்ச்சி

மேலும் பரவி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்கா பங்கு சந்தையிலும் கடும் வீழ்ச்சிக்கு வழிவகுத்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார், மேலும் இது அமெரிக்கா பொருளாதார அச்சத்தையும் தூண்டி விட்டுள்ளதாகவும் ஆய்வாளர்கள் மத்தியில் கூறப்படுகிறது. மேலும் இது குறித்து பேசிய அதிபர் டொனால்டு டிரம்ப், இந்த வைரஸின் தாக்கம் நிச்சயம் பொருளாதாரத்தில் இருக்கும். ஆனால் அவை நீண்டகாலம் நீடிக்காது என்று நாங்கக் நம்புகிறோம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கடுமையான கட்டுப்பாடுகள்

கடுமையான கட்டுப்பாடுகள்

மேலும் இந்த நெருக்கடியின் ஆரம்பத்தில் அமெரிக்கா விதித்த பயணக் கட்டுப்பாடுகள் மூலம், அமெரிக்காவில் இந்த பரவலை தடுக்க உதவியதாகவும் கூறியுள்ளார். கடந்த வியாழக்கிழமை நிலவரப்படி பலி எண்ணிக்கை 12 பேர் என்றும் புதிதாக 53 புதிய வழக்குகள் வெடித்தன என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

டவ் ஜோன்ஸ் 3% வீழ்ச்சி

டவ் ஜோன்ஸ் 3% வீழ்ச்சி

டிரம்பின் இந்த வார்த்தைகளை நிரூபிக்கும் விதமாக அமெரிக்காவின் முக்கிய சந்தையான டவ் ஜோன்ஸ் 3% சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது. முக்கியமான பல இண்டெக்ஸ்கள் 3% மேலாக வீழ்ச்சி கண்டுள்ளன. குறிப்பாக டவ் ஜோன்ஸ் இண்டஸ்ட்ரியல் ஆவரேஜ் 969.58 புள்ளிகள் வீழ்ச்சி கண்டுள்ளது. இதே போல எஸ் & பி 500 106.18 புள்ளிகள் வீழ்ச்சிகண்டும், நாஸ்டாக் காம்போசைட் 279.49 வீழ்ச்சி கண்டும் காணப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+