வாஷிங்டன் : ஜப்பானில் நடந்து முடிந்த ஜி 20 மாநாட்டிலாவது ஒரு தீர்வு கிடைக்கும் என்று எண்ணிய நிலையில், தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது அமெரிக்கா - ஈரான் பிரச்சனை.
ஒரு புறம் ஈரான் உடனான அணு ஆயுத ஒப்பந்தத்தை அமெரிக்கா, முறித்துக் கொண்டாலும் அதை விடுவதாக இல்லை. எப்படியேனும் இந்த அணு ஆயுத ஒப்பந்தத்தை தடை செய்ய வேண்டும் என்று கங்கனம் கட்டிக் கொண்டு அலைகிறார்.
மறுபுறம் ஈரானோ அமெரிக்காவுக்கு சளைத்ததாக தெரியவில்லை. ஆக அன்றில் இருந்தே இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டு சண்டையிட்டுக் கொள்கின்றன. தற்போது எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதை போல ஈரான் சில செயல்களை செயல்படுத்தியும் வருகிறது.
இரண்டாவது முறையாக பொருளாதார தடை?
இதனையடுத்து அமெரிக்கா, ஈரான் மீது பொருளாதார தடையை விதித்தது. இந்த நிலையில் பல என்ணெய் கப்பல்கள் தாக்கப்பட்டன. இதையடுத்து அமெரிக்காவின் ஆளிள்ள விமானத்தினை, ஈரான் தனது வான் எல்லைக்குள் சுற்றுவதாக கூறி சுட்டுத் தள்ளியது. இதனால் கடும் கோபம் கொண்ட டிரம்ப், ஈரான் மீது இரண்டாவது முறையாக மீண்டும் கடினமான பொருளாதார தடையை விதித்தார்.
அமெரிக்கா – ஈரான் பிரச்சனை குறித்து பேசப்படவில்லையா?
இந்த நிலையில் ஜி20 மாநாடும் நடந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக இதை பற்றிய பேச்சு வார்த்தைகள் அதிகம் பேசப்பட்டதாகவும் தெரியவில்லை. இந்த நிலையில் அமெரிக்கா - ஈரான் இடையே போர் வரும் சூழலே நிலவி வருகிறது. அடுத்து இந்த இரு நாடுகளூம் என்ன செய்ய காத்திருக்கிறதோ என்று காத்திருக்கையில், ஈரான் யுரேனியத்தை தற்போது கையில் எடுத்துள்ளது.
வரம்பு கடந்த உற்பத்தி?
ஈரானின் அதிகாரப்பூர்வமான, ஃபார்ஸ் செய்தி நிறுவனம், நாட்டின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பு, தற்போது ஒப்பந்தத்தின் கீழ் அனுமதிக்கபட்ட 300 கிலோ வரம்பை கடந்துள்ளது என்று தெரிவித்துள்ளது. ஈரானின் அணு சக்தி ஒப்பந்தத்தின் கீழ், அணுசக்தி திட்டத்தைக் கண்காணிக்கும் சர்வதேச அணுசக்தி நிறுவனம் (International Atomic Energy Agency) இதை உறுதி படுத்தியும் உள்ளது. அதோடு ஈரான் தற்போது கடந்த 2015ம் ஆண்டு போடப்பட்ட அணு ஆயுத ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்த அளவை யுரேனியம் தயாரிப்பை எட்டியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்கா அதிபர் டிரம்ப், ஈரானுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
நெருப்புடன் விளையாடும் ஈரான்?
அதோடு இது பற்றி டிரம்ப் கூறியதில், ஈரான் தற்போது என்ன செய்துக் கொண்டிருக்கிறது என்று அவர்களுக்கே நன்றாக தெரியும். யுரேனியத்தின் அளவை அதிகரித்து, ஈரான் நெருப்போடு தற்போது விளையாடிக் கொண்டிருக்கிறது என்றும் கூறியுள்ளார்.
அளவோடு வைத்திருங்கள்?
இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள ஷரீப், நாங்கள் அணு ஆயுத ஒப்பந்தத்தை மீறவில்லை. அதோடு அந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியையும் குறிப்பிட்டுள்ளார். அதோடு டிரம்ப் கடுமையான இந்த ஒப்பந்தத்தை கைவிடுமாறு கூறிய நிலையில், அதை எதிர்த்த ஐரோப்பியர்கள் அதை அளவாக வைத்திருக்குமாறும் ஈரானிடம் கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டன் எச்சரிக்கை?
இதுகுறித்து பிரிட்டனின் வெளியுறவுத் துறை அமைச்சர் கூறுகையில், ஈரான் ஒப்பந்த அளவோடு இருந்தால், நாங்கள் ஒப்பந்தத்தை தொடருவோம். இல்லையெனில் ஈரான் விதிகளை மீறினால் இந்த ஒப்பந்தத்தை விட்டு விலகுவோம் என்றும் எச்சரித்துள்ளது.
அமெரிக்காவின் பட்டினி போர்?
அமெரிக்கா ஜனாதிபதி டிரம்பின் கடுமையான பொருளாதார தடைகளால், செறிவூட்டப்பட்ட யுரேனிய உற்பத்தியை விரைவுபடுத்துவதாக ஈரான் கடந்த மே மாதம் அறிவித்தது கவனிக்கதக்கது. அதோடு ஈரானிய எண்ணெய் கொள்முதலை நிறுத்தவோ அல்லது சொந்தமாக பொருளாதார தடைகளை எதிர்கொள்ளவோ வாஷிங்டன் தற்போது அனைத்து நாடுகளுக்கும் உத்தரவிட்டுள்ளது. இது தெஹ்ரான் மக்கள் பட்டினி கிடப்பதற்காக வடிவமைக்கப்பட்ட "பொருளாதாரா போர்" என்றும் கூறப்ட்ர்படுகிறது.
More From GoodReturns

பொட்டில் அடித்தது போல் சொன்ன Iran.. டிரம்ப் மீது சுத்தமா நம்பிக்கையில்லை.. JD Vance வர சொல்லுங்க..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

'எனர்ஜி லாக்டவுன்' உலகம் நாடுகளை அச்சுறுத்தும் புதிய பிரச்சனை.. இந்த 10 விஷயம் நடக்கணும்..!!

அமெரிக்காவுக்கு ஈரான் தந்த ’ரகசிய பரிசு’ – அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகம்..!!

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

ஈரானை சீண்டும் டிரம்ப்.. மீண்டும் போர் தீவிரமாகுமா..?

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

Germany: கிளீன் எனர்ஜி எல்லாம் இனி வேலைக்கு ஆகாது.. பழையப்படி நிலக்கரிக்கு போக வேண்டியது தான்..!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்



Click it and Unblock the Notifications