ஈரான் போர்: டிரம்ப் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! இது நடந்தா கோடிக்கணக்கான மக்களுக்கு நிம்மதி..!!

ஈரான் போர் எப்போது தான் முடிவுக்கு வரும் என பல்வேறு நாடுகளும் காத்து கொண்டிருக்கின்றன. ஏனெனில் அந்த அளவுக்கு ஈரான் போர் பல நாடுகளிலும் பெட்ரோல், டீசல், எல்பிஜி மற்றும் உரத் தட்டுபாடுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் , இது குறித்த ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

டிரம்ப் சிஎன்என் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் ஈரான் அமெரிக்காவுடன் ஒரு உறுதியான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறதா இல்லையா என்பதை பொறுத்தே சூழ்நிலை மாறும் என டிரம்ப் கூறியுள்ளார். ஈரானின் அணுசக்தி திட்டத்தை கட்டுப்படுத்தவும், ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்கவும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஈரான் தற்போது ஒரு வீழ்ச்சியடைந்துவரும் நாடாக இருக்கிறது, இந்த ஆண்டு அந்நாட்டின் பணவீக்கம் 301 சதவீதமாக உயர்ந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.

ஈரான் போர்: டிரம்ப் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! இது நடந்தா கோடிக்கணக்கான மக்களுக்கு நிம்மதி..!!

நாங்கள் ஏற்கனவே ஈரானை மிக கடுமையாக தாக்கியுள்ளோம். பொருளாதார தடைகளும் அமெரிக்காவின் முந்தைய ராணுவ தாக்குதல்களும் ஈரானை கடுமையாக சிதைத்துவிட்டதாகவும், அவர்கள் நிதி ரீதியாக நலிவடைந்து வருவதாகவும் டிரம்ப் தெரிவித்தார். மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்காவின் மூன்று விமானம் தாங்கி கப்பல்கள் முழுமையான போர் ஆயத்த நிலையில் நிறுத்தப்பட்டுள்ளதாக டிரம்ப் அப்போது கூறியுள்ளார்.

சமீபத்தில் அங்கு வந்தடைந்த மற்றொரு கப்பலையும் சேர்த்து மொத்தம் மூன்று கப்பல்கள் தற்போது தயார் நிலையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து உடன்பாடு வந்துவிட்டால் அமெரிக்கா எந்த ஒரு தாக்குதலை நடத்தாது, ஆனால் பேச்சுவார்த்தைக்கு அவர்கள் ஒத்துவராவிட்டால் மீண்டும் தீவிர தாக்குதல் தொடங்கும் என தெரிவித்துள்ளார்.

Also Read

ஒருவேளை மீண்டும் ராணுவ மோதல் ஏற்பட்டால், ஈரானின் உள்கட்டமைப்புகளை குறிவைக்க திட்டமிடப்பட்டுளது, குறிப்பாக, ஈரானில் உள்ள 38 பாலங்களை அடையாளம் கண்டுள்ளதாகவும், வெறும் ஒரே மணி நேரத்தில் அவற்றை தகர்த்து எறிய முடியும் என்றும் அவர் கூறினார்.

இருப்பினும், ஈரானின் பொதுமக்கள் உள்கட்டமைப்புகளை அழிக்க தான் விரும்பவில்லை என்ற டிரம்ப் அவற்றை மீண்டும் கட்டியெழுப்ப 10 ஆண்டுகள் ஆகலாம் , பாலங்களை இடிப்பது எனக்கு பிடிக்காது என்றும், ஒரு நல்ல கட்டடக் கலைஞர் என்ற முறையில் பாலங்களை கட்டுவது எவ்வளவு கடிமானது என்பது எனக்கு தெரியும் என பேட்டியின் போது டிரம்ப் குறிப்பிட்டார்.

Recommended For You

அமெரிக்க தாக்குதல்களால் ஈரானின் ராணுவ திறன்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக டிரம்ப் கூறினார். பெரும்பாலான தொழிற்சாலைகள் அழிக்கப்பட்டுவிட்டதால், அவர்களால் தற்போது ஏவுகணைகளையும், சுமார் 15% அளவுக்கு மட்டுமே ட்ரோன்களையும் தயாரிக்க முடிகிறது என்றார். ஈரான் ஒப்பந்தத்தை மேற்கொள்ள மிகவும் ஆர்வம் காட்டி வருவதால், புதிய ராணுவ தாக்குதல்களுக்கான அவசியம் ஏற்படாது என்றே தான் கருதுவதாக டிரம்ப் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

இது நடந்து போர் முடிவுக்கு வந்தால் பழையபடி கச்சா எண்ணெய், எல்பிஜி சப்ளை சீராகும் இதனால் இந்தியா உள்பட பல நாடுகளிலும் பெட்ரோல் , டீசல் விலைகள் குறையும். இது பல்வேறு பொருட்களின் விலை குறைவுக்கு வித்திடும். இதனால் கோடிக்கணக்கான மக்கள் நிம்மதி அடைவார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+