உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான பேச்சுவார்த்தை முக்கிய கட்டத்தை எட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருக்கிறார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே தீவிரமான போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து பல்வேறு பகுதிகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றிருக்கும் டிரம்ப் உக்ரைன் ரஷ்யா இடையிலான இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வருவதே தன்னுடைய முதல் வேலை என அறிவித்தார் . இதற்காக அமெரிக்கா தலைமையில் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் இந்த பேச்சு வார்த்தை முக்கிய கட்டத்தை எட்டி இருப்பதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக இந்த இரு தரப்பிலும் ஏதேனும் ஒரு தரப்பு இந்த பேச்சுவார்த்தையை சரியான பாதைக்கு கொண்டு செல்ல விடாமல் தடுத்தால் அவர்களுக்கு தான் பிரச்சனை ஏற்பட போகிறது என டிரம்ப் தெரிவித்தார். இருந்தாலும் இந்த பேச்சு வார்த்தையில் பாசிட்டிவான முடிவு வரவேண்டும் என்பதே தன்னுடைய நிர்வாகத்தின் எதிர்பார்ப்பு என தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்க அரசின் வெளியுறவு துறை செயலாளர் மார்கோ ரூபியோ பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் இந்த பேச்சுவார்த்தையில் அடுத்த சில நாட்களில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றால் அமெரிக்கா இந்த சமாதான நடவடிக்கையிலிருந்து விலகி விடும் என எச்சரிக்கை விடுத்திருந்தார். பிரான்சின் பாரிஸ் நகரில் அமெரிக்கா, உக்ரைன் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்ற உயர்மட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட ரூபியோ பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அடுத்த ஆலோசனைக் கூட்டம் லண்டனில் நடைபெறும் என்றும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை என்றால் இந்த சமாதான பேச்சு வார்த்தையிலிருந்து அமெரிக்கா விலகிவிடும் என்றும் தெரிவித்தார். இது அமெரிக்காவின் போர் அல்ல எங்களுக்கு நாங்கள் கவனம் செலுத்த வேண்டிய பிரச்சனைகள் ஏராளமாக இருக்கின்றன என ரூபியோ தெரிவித்துள்ளார் .
முன்னதாக பாரிசில் நடைபெற்ற இந்த பேச்சு வார்த்தையில் உக்ரைன் ரஷ்யா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வந்து அமைதியை நிலைநாட்டுவதற்கான ஒரு சில முன்னேற்றங்கள் ஏற்பட்டு இருப்பதாகவே தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. பிப்ரவரி மாதம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்காவிற்கு வருகை தந்து டிரம்பை சந்தித்தார். அந்த பேச்சுவார்த்தையில் இருதரப்புக்கும் இடையே வார்த்தை மோதல்கள் ஏற்பட்டு எந்த உடன்பாடும் எட்டாமலேயே முடிவடைந்தது.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என கூறும் டிரம்ப் நிர்வாகம் சமாதான பேச்சு வார்த்தையை முன்னெடுத்து இருக்கிறது. அதே வேளையில் உக்ரைன் நாட்டில் இருக்கும் சில குறிப்பிட்ட தனிமங்களை தோண்டி எடுப்பதற்கு தங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என அமெரிக்க தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இது தொடர்பான ஒப்பந்தமும் கூடிய விரைவில் அமெரிக்கா மற்றும் உக்ரைன் இடையே கையெழுத்தாகும் என சொல்லப்படுகிறது.
More From GoodReturns

ஈரானுடன் ஒப்பந்தம் ஏற்படாமலேயே போரை முடிக்க போகிறாரா டிரம்ப்? என்ன சொல்லி இருக்காரு பாருங்க!!

ஈரான் மீது பங்கர்-பஸ்டர் குண்டு தாக்குதல்.. டிரம்ப் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு.. அதுவும் இந்த இடத்தில்..!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!



Click it and Unblock the Notifications