அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சவுதி அரேபியாவிற்கு மேற்கொண்ட மூன்று நாள் பயணத்தின் முதல் நாளே அதிரடியாக, 142 பில்லியன் டாலர் மதிப்பிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தை உறுதி செய்துள்ளார். இது இரு நாடுகள் மத்தியில் கையெழுத்தாகும் 600 பில்லியன் டாலர் மதிப்பிலான சவுதி அரேபியாவின் முதலீட்டு ஒப்பந்தங்களின் ஒரு பகுதியாகும்.
இந்த 142 பில்லியன் டாலர் மதிப்பிலான பாதுக்காப்பு துறை ஒப்பந்தங்கள், சவுதியின் பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்துவதுடன், அமெரிக்காவுடனான நட்புறவை மிகப்பெரிய அளவில் மேம்படுத்த உள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க பாதுகாப்பு ஒப்பந்தம்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சவுதி அரேபிய பயணத்தில் முக்கிய அம்சமாக இந்த 142 பில்லியன் டாலர் மதிப்பிலான பாதுகாப்பு ஒப்பந்தம் விளங்குகிறது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான 600 பில்லியன் டாலர் மதிப்பிலான மாபெரும் முதலீட்டு தொகுப்பின் ஒரு பகுதியாக இருந்தாலும் இதை வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தமாக அமெரிக்க கூறுகிறது. ஏன் தெரியுமா..?
இந்த 142 பில்லியன் டாலர் ஒப்பந்தம், சவுதியின் பாதுகாப்பு திறன்களை மேம்படுத்துவதுடன், இது அமெரிக்காவின் மேம்பட்ட ராணுவ தொழில்நுட்பங்களை வழங்குவதற்கு வழிவகுக்கிறது. இந்த ஒப்பந்தங்கள், இரு நாடுகளின் பொருளாதார மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, இந்நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும்.
அமெரிக்க வெள்ளை மாளிகையின் அறிக்கையின்படி, இந்த 142 பில்லியன் டாலர் பாதுகாப்பு ஒப்பந்தம், அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய பாதுகாப்பு விற்பனையாகும். இது சவுதி அரேபியாவிற்கு அமெரிக்காவின் மேம்பட்ட ராணுவ அமைப்புகள் மற்றும் சேவைகளை அளிக்க உள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திடும் போது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் (MBS) உடன் இருந்தனர். இந்த ஒப்பந்தம் ரியாத்தில் நடைபெற்ற சந்திப்பில் கையெழுத்தானது.
ஐந்து முக்கிய பிரிவுகள்: இந்த ஒப்பந்தம் ஐந்து முக்கிய பிரிவுகளை உள்ளடக்கியது, ஒவ்வொன்றும் சவுதியின் பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்துவதற்கு வடிவமைக்கப்பட்டவை:
- சவுதியின் விமானப்படையை நவீனமயமாக்குவதற்கும், விண்வெளி தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்கும் முதலீடு.
- வான்வழி அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள மேம்பட்ட பாதுகாப்பு அமைப்புகள்.
- சவுதியின் கடற்பகுதி பாதுகாப்பை வலுப்படுத்துதல்.
- எல்லை பாதுகாப்பு மற்றும் தரைப்படைகளின் திறன்களை உயர்த்துதல்.
- ராணுவ தொடர்பு அமைப்புகளை மேம்படுத்துதல்.
சவுதி படைகளுக்கு பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு: இந்த ஒப்பந்தம், சவுதி படைகளின் திறன்களை மேம்படுத்துவதற்கு விரிவான பயிற்சி திட்டங்களை உள்ளடக்கியது. இதில், சவுதி ராணுவத்திற்கு மேம்பட்ட பயிற்சி, ராணுவ மருத்துவ சேவைகளை வலுப்படுத்துதல், மற்றும் ராணுவ கல்வி நிறுவனங்களை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும். இந்த முயற்சிகள், சவுதியின் பாதுகாப்பு படைகளை உலகத்தரம் வாய்ந்த நிலைக்கு உயர்த்துவதற்கு உதவும். வெள்ளை மாளிகையின் அறிக்கையின்படி, இந்த பயிற்சி திட்டங்கள் அமெரிக்க தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டவை மற்றும் பிராந்திய பாதுகாப்பை உறுதி செய்யும்.
600 பில்லியன் டாலர் முதலீட்டு தொகுப்பு: இந்த 142 பில்லியன் டாலர் பாதுகாப்பு ஒப்பந்தம், 600 பில்லியன் டாலர் மதிப்பிலான மாபெரும் முதலீட்டு தொகுப்பின் ஒரு பகுதியாகும். இந்த முதலீடுகள், பாதுகாப்பு மட்டுமல்லாமல், எனர்ஜி, தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு, சுகாதாரம், மற்றும் விளையாட்டு துறைகளையும் உள்ளடக்கியவை.
வெள்ளை மாளிகையின் அறிக்கையின்படி இந்த ஒப்பந்தங்கள் கடந்த நான்கு மாதங்களில் தீவிர பேச்சுவார்த்தைகளின் விளைவாக கையெழுத்தானவை. சவுதி அரேபியாவிற்கு பயணம் மேற்கொண்ட டிரம்ப், மூன்று நாள் மத்திய கிழக்கு பயணத்தின் ஒரு பகுதியாக, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் செல்லவுள்ளார்.
More From GoodReturns

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications