டொனால்ட் டிரம்ப், இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் சவுதி அரேபியாவிற்கு மேற்கொண்ட முதல் அதிகாரப்பூர்வ பயணத்தில், 600 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளார். டிரம்ப் ஒருப்பக்கம் சீனா உடன் சமாதானம் பேச்சுவார்த்தை நடத்தி வரிகளை குறைத்த அடுத்த நொடியே கச்சா எண்ணெய் ஜாம்பவான் ஆன சவுதி அரேபியாவுக்கு கிளம்பியுள்ளார்.
டொனால்ட் டிரம்ப்-ன் சவுதி பயணத்தை உலகமே கவனித்துக்கொண்டு இருக்கும் வேளையில், சவுதி அமெகரிக்காவில் பெரும் தொகையை முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. டிரம்ப்-ன் இந்த பயணம் OPEC கூட்டத்தில் முக்கியமான முடிவை எடுக்க வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல் கச்சா எண்ணெய் சந்தையிலும் டிரம்ப் மற்றும் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் சந்திப்பிற்கு பின்பு இந்நாட்டின் கச்சா எண்ணெய் உற்பத்தி குறித்து முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் வேளையில் தான் 600 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்கள் இரு தலைவர்களின் சந்திப்பின் போது கையெழுத்தாகியுள்ளது.
இந்த ஒப்பந்தங்கள் எனர்ஜி, தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு, சுகாதாரம், பாதுகாப்பு, மற்றும் விளையாட்டு துறைகளை மையமாக கொண்டவை. சவுத அரசின் முதலீடு அமெரிக்காவில் வேலைவாய்ப்பு, கண்டுபிடிப்பு, மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த மாபெரும் ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை நீண்டகாலத்திற்கு வலுப்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நண்பேன்டா: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சவுதி அரேபிய பயணம், இரு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார உறவுகளை புதிய உச்சத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. வெள்ளை மாளிகையின் அறிக்கையின்படி, இந்த 600 பில்லியன் டாலர் முதலீட்டு ஒப்பந்தங்கள் இரு நாட்டிற்கும் மத்தியிலான நட்புறவில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை என விவரித்துள்ளது.
AI மற்றும் எனர்ஜி துறையில் முதலீடு: சவுதி அரேபியாவின் டேட்டாவோல்ட் நிறுவனம், அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு (AI) டேட்டா சென்டர் மற்றும் எனர்ஜி உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு 20 பில்லியன் டாலர் முதலீடு செய்ய உறுதியளித்துள்ளது.
மேலும் அமெரிக்காவின் முக்கிய நிறுவனங்களான கூகுள், ஆரக்கிள், செல்ஸ்ஃபோர்ஸ், AMD, உபர், மற்றும் டேட்டாவோல்ட் ஆகிய முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள், அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியாவில் மாற்றத்தை ஏற்படுத்தும் தொழில்நுட்பத்தில் சுமார் 80 பில்லியன் டாலர் முதலீடு செய்யவுள்ளன. மாற்றத்தை ஏற்படுத்தும் தொழில்நுட்பம் என்பது Transformative Technologies இதில் AI, கிளவுட் கம்ப்யூட்டிங் போன்றவை அடங்கும்.
உள்கட்டமைப்பு துறை முதலீடுகள்: சவுதி அரேபியாவின் முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு, அமெரிக்க நிறுவனங்களான ஹில் இன்டர்நேஷனல், ஜேக்கப்ஸ், பார்சன்ஸ், மற்றும் AECOM ஆகியவை 2 பில்லியன் டாலர் மதிப்பிலான சேவைகளை வழங்கவுள்ளன.
கிங் சல்மான் பன்னாட்டு விமான நிலையம், கிங் சல்மான் பூங்கா, தி வால்ட், மற்றும் கிடியா நகரம் போன்ற பிரமாண்ட திட்டங்களுக்கு இந்த சேவை பயன்படுத்தப்படும். இந்த திட்டங்கள் சவுதியின் நவீனமயமாக்கல் முயற்சிகளுக்கு உந்துதலாக இருக்கும்.
ஏற்றுமதி துறை முதலீடுகள்: ஏற்றுமதி துறையில், அமெரிக்காவின் GE வெர்னோவா நிறுவனம், சவுதி அரேபியாவிற்கு 14.2 பில்லியன் டாலர் மதிப்பிலான எரிவாயு டர்பைன்கள் மற்றும் எனர்ஜி தீர்வுகளை வழங்கவுள்ளது.
விமான ஒப்பந்தம்: அமெரிக்காவின் போயிங் நிறுவனம், சவுதியின் அவிலீஸ் நிறுவனத்திற்கு 4.8 பில்லியன் டாலர் மதிப்பில் 737-8 பயணிகள் விமானங்களை வழங்கும். இந்த ஒப்பந்தங்கள் அமெரிக்காவின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி துறைகளுக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும்.
சுகாதாரத் துறை முதலீடு: சுகாதாரத் துறையில், சவுதி அரேபியாவின் ஷமேக் IV சொல்யூஷன்ஸ் LLC என்ற நிறுவனம் சுமார் 5.8 பில்லியன் டாலர் முதலீட்டில் அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் உயர் திறன் கொண்ட IV திரவ உற்பத்தி ஆலை அமைக்க உள்ளது. இந்த ஆலை, அமெரிக்காவின் மருத்துவ விநியோகச் சங்கிலியை வலுப்படுத்துவதுடன், மருத்துவப் பொருட்களின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும்.
3 முக்கிய துறை முதலீட்டு பண்டுகள்: இந்த ஒப்பந்தங்களின் ஒரு பகுதியாக, மூன்று துறை சார்ந்த முதலீடுகளை செய்ய 3 தனிப்பட்ட பண்ட்களை சவுதி உருவாக்கியுள்ளது. இந்த பண்டில் ஒதுக்கப்பட்ட நிதி அமெரிக்காவில் நேரடியாக முதலீடு செய்யப்படவுள்ளன.
எனர்ஜி முதலீட்டு நிதி: 5 பில்லியன் டாலர் மதிப்பிலான தொகை கொண்ட இந்த பண்ட் அமெரிக்காவின் புதுப்பிக்கத்தக்க எனர்ஜி மற்றும் எனர்ஜி உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு செய்ய உள்ளது.
நியூ எரா விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்ப நிதி: 5 பில்லியன் டாலர் மதிப்பிலான தொகை கொண்ட இந்த பண்ட் அமெரிக்காவின் விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பங்களில் முதலீடு செய்ய உள்ளது.
என்ஃபீல்டு விளையாட்டு நிதி: 4 பில்லியன் டாலர் மதிப்பிலான தொகை கொண்ட இந்த பண்ட் அமெரிக்காவின் விளையாட்டு உள்கட்டமைப்பில் முதலீடு செய்ய உள்ளது.
இந்த முதலீட்டு ஒப்பந்தங்கள், அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியா இடையேயான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த உள்ளது. மேலும் இந்த முதலீடு அமெரிக்காவில் பல துறைகளுக்கு ஜாக்பாட் ஆக மாறவும் வாய்ப்பு உள்ளது. AI முதல் மருந்து பொருட்கள் வரையில் முதலீடு குவிய உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

வேலைக்கு போகாமலே மாதம் ரூ50,000 - 1 லட்சம் வரை பாசிவ் வருமானம் வேண்டுமா? எப்படி சாத்தியம்?

தங்கம், வெள்ளி விலை: கண்ணு வச்சிட்டாங்கப்பா..!! திடீர் டிவிஸ்ட் நடக்குது..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!



Click it and Unblock the Notifications