ஈரானின் அணுஆயுத திட்டத்திற்கு முழுமையாகவும், நிரந்தரமாகவும் தீர்வு காணும் வரையில் அமெரிக்கா - ஈரான் மத்தியில் அமைதி ஒப்பந்தம் எட்டப்படக்கூடாது என்பது இஸ்ரேலின் நிலைப்பாடாக இருந்த காரணத்தால் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாக கூடாது என தொடர்ந்து கூறியது மட்டும் அல்லாமல் ஈரானுக்கு ஆதாவாக தெற்கு லெபனான் பகுதியில் இருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தது.
இந்த நிலையில் ஹார்முஸ் நீரிணையில் முழு உரிமையை கோரி வந்த ஈரானுக்கு எதிராக, ஒமன் நாட்டின் வழித்தடத்தில் அமெரிக்காவின் நட்பு நாடுகளின் கப்பல்கள் இயக்கப்பட்ட காரணத்தால் ஈரான் மீண்டும் தாக்குதலை தொடர்ந்தது. இதற்கு எதிராக அமெரிக்கா ராணுவம் நேற்று பெரும் தாக்குதலை நடத்தியதில் ஈரான் ராணுவ கட்டமைப்புகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.

துருக்கி நாட்டில் இன்று நடைபெற்ற NATO மாநாட்டில் அமெரிக்க அதிபர் கலந்துக்கொண்டு பேசினார். இக்கூட்டத்தில் ஈரான் உடனான அமெரிக்காவின் புரிந்துணர்வு ஒப்பந்தம் முடிந்துவிட்டது (its Over), ஆனால் பேச்சுவார்த்தை தொடரும் என தெரிவித்தார் டிரம்ப்.
இந்த அறிவிப்பு வெளியான அடுத்த நொடியே கச்சா எண்ணெய் விலை 5 சதவீதத்திற்கு மேல் உயர்ந்து ஷாக் கொடுத்தது, பங்குச்சந்தைகள் பெரும் சரிவை பதிவு செய்தது. சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் WTI கச்சா எண்ணெய் விலை 6.46 சதவீதம் உயர்ந்து ஒரு பேரல் 74.99 டாலராக உயர்ந்தது, இதேபோல் பிரெண்ட் கச்சா எண்ணெய் 6.38 சதவீதம் உயர்ந்து 78.89 டாலராக உள்ளது.
ஒமன் வழித்தடத்தில் சென்ற கப்பலை தாக்கியதற்காக ஏற்கனவே அமெரிக்கா ஈரான் கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு கொடுக்கப்பட்ட தடை விலக்கை ரத்து செய்த நிலையில், தற்போது புரிந்துணர்வு ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் இஸ்ரேலின் கனவு பலித்தது என்று தான் சொல்ல வேண்டும்.
துருக்கி கூட்டத்தில் டிரம்ப் பேசும் போது, ஈரானுடன் இனியும் பேசுவது அர்த்தமற்றது, ஆனாலும் எங்களுடைய பேச்சுவார்த்தை குழுவுடன் நான் பேசுகிறேன் தெரிவித்தார். மேலும் நேற்று இரவு ஈரானில் பயங்கரமான தாக்குதலை நடத்தினோம், இதில் ஈரான் நாட்டை சேர்ந்த பயங்கரமானவர்கள் பலர் இதில் பாதிக்கப்பட்டனர் என தெரிவித்த டிரம்ப் ஈரான் மக்களை மிகவும் அசிங்கமாகவும், தர குறைவாகவும் பேசினார்.
அடுத்தக்கட்ட நடவடிக்கையாக ஈரான் ராணுவம் வளைகுடா பகுதியில் இருக்கும் அமெரிக்க ராணுவ தளங்களை தாக்க கூடும், அடுத்த நிலை நடவடிக்கையாக ஈரான் மீண்டும் ஹார்முஸ் வழித்தடத்தை முடக்கலாம், இதேபோல் அமெரிக்க படைகள் ஈரான் துறைமுகத்தை முற்றுகையிடலாம்.
இதே நேட்டோ கூட்டத்தில் ஈரான் மற்றும் கிரீன்லாந்து விவகாரத்தில் அமெரிக்காவுடன் நேட்டோ படைகள் நிற்காதது குறித்தும் டிரம்ப் கடுமையாக விமர்சனம் செய்தார். இதே கூட்டத்தில் அமெரிக்காவின் கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட்-யிடம் ஸ்பெயின் நாட்டுடனான வர்த்தகத்தை மொத்தமாக நிறுத்த கோரினார், மேலும் ஸ்பெயின் நாட்டை நேட்டோ கூட்டணியில் terrible partner என்றும் கூறினார்.


Click it and Unblock the Notifications