அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் மத்தியில் கடந்த ஒரு வருடமாகவே தொடர்ந்து கருத்து வேறுபாடு, விமர்சனம், வழக்கு, மிரட்டல், கேளி என முரணாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் பெடரல் ரிசர்வ் தலைவர் பதவியில் இருந்து ஜெரோம் பவல்-ஐ நீக்கிவிட்டு புதிதாக ஒருவரை நியமிக்கும் பணியில் டிரம்ப் தீவிரமாக இறங்கியுள்ளார்.
டொனால்ட் டிரம்ப் ஜனவரி மாத இறுதிக்குள் ஃபெடரல் ரிசர்வ் (ஃபெட்) தலைவர் பதவிக்கு தான் தேர்தெடுக்கப்பட்டு உள்ள நபரை அறிவிக்க உள்ளார். இதை அமெரிக்க பொருளாதார செயலாளர் ஸ்காட் பெசென்ட் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.

பெடரல் ரிசர்வ் தலைவர் பதவிக்கான தேடலை வெள்ளை மாளிகை கடந்த சில மாதங்களாக செய்து வரும் வேளையில, தற்போது இறுதியாக நான்கு நபர்களை தேர்வு செய்து இறுதி ஆய்வு கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது டிரம்ப் அரசு. இந்த நிலையில் அடுத்த வாரமே அறிவிப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இப்பதவியில் இருக்கும் ஜெரோம் பவல்லின் பதவிக்காலம் மே 2026இல் முடிவடைகிறது. டிரம்ப் பலமுறை வட்டி விகிதத்தை குறைக்காமல் இருக்கும் காரணத்திற்காக ஜெரோம் பவல்-ஐ விமர்சித்து வந்த நிலையில், புதிய தலைவர் தேர்வு சந்தையில் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது. காரணம் புதிய தலைவர் டிரம்ப்-க்கு ஆதரவாக செயல்படும் நபராக இருக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் காரணத்தால் வட்டி விகிதம் பெரிய அளவில் குறைய உள்ளது. இதனால் இந்த அறிவிப்பு மிகவும் முக்கியமானது.
சரி விஷயத்திற்கு வருவோம், டிரம்ப் இறுதியாக தேர்வு செய்துள்ள நான்கு உறுப்பினர்களில் மிகவும் முக்கியமான நபர் உலகின் மிகப்பெரிய முதலீட்டு நிறுவனமாக இருக்கும் பிளாக்ராக்-ன் முக்கிய அதிகாரி தான். இவரை சுற்றி தான் தற்போது மொத்த முதலீட்டு சந்தையின் கவனமும் உள்ளது.
அமெரிக்க வெள்ளை மாளிகை ஜெரோம் பவல்-ஐ இப்பதவியில் இருந்து நீக்குவதற்காக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்தே தேடுதல் பணியை தொடங்கியது. முதலில் 11 பேர் பரிசீலிக்கப்பட்டனர். தற்போது நான்கு பேர் மட்டுமே டாப் லிஸ்டில் உள்ளனர்.
இந்த 4 பேர் யார் என்றால் கெவின் ஹாசெட் (Kevin Hassett), கெவின் வார்ஷ் (Kevin Warsh), கிறிஸ்டோபர் வாலர் (Christopher Waller) மற்றும் ரிக் ரீடர் (Rick Rieder). டிரம்ப் இவர்களில் பெரும்பாலானவர்களை நேர்காணல் செய்துள்ளார். ராய்ட்டர்ஸ் செய்தியின்படி, டிரம்ப் ஒருவரை இறுதியாக முடிவு செய்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளது. டிரம்ப் தான் இறுதி முடிவை எடுக்க நெங்கியுள்ளதாக வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.
ரிக் ரீடர் தான் அடுத்த பெட் தலைவர்..?!
இந்த நான்கு வேட்பாளர்களில் ரிக் ரீடர் தனித்து நிற்கிறார். இதேபோல் பிளாக்ராக் மற்றும் ரிக் ரீடர் உடன் டிரம்ப நெருக்கமானவராகவும் திகழ்கிறார். பிளாக்ராக் நிறுவனத்தின் மூத்த நிர்வாகியும் உலகளாவிய பாண்ட் மார்க்கெட் தலைவருமான இவர், முன்பு பொருளாதாரம், நிதி சந்தை தொடர்பான எந்த அரசு உயர் பதவியிலும் பணியாற்றியது இல்லை.
பொதுவாக ஃபெட் தலைவர்கள் பொருளாதார வல்லுநர்கள் அல்லது மத்திய வங்கியில் பணியாற்றும் அதிகாரிகளாக இருப்பார்கள். ஆனால் ரிக் ரீடர் பிளாக்ராக் என்னும் தனியார் முதலீட்டு நிறுவனத்தில் தலைமை தகவல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். டிரம்ப் இவரை தேர்வு செய்தால் முதல் முறையாக வெளியில் இருந்து ஒருவரை பெடரல் ரிசர்வ் தலைவராக நியமித்த வரலாற்று சிறப்பு டிரம்ப் நிர்வாகத்தை சேரும்.
அதேபோல் ரிக் ரீடர் போன்ற தனியார் துறையில் பணியாற்றிய நபர் தனிப்பட்ட நலனுக்கான முடிவுகளை எடுக்காமல் அரசுக்கும், பொருளாதாரத்திற்கும் ஏற்ற முடிவை எடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் இவரை போன்ற ஒருவர் தலைவர் பதவிக்கு வந்தால் பெடரல் ரிசர்வ்-ன் சுதந்திரம் அமெரிக்க அரசின் கையில் கொடுப்பது போல் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பிரெடிக்ஷன் மார்க்கெட் எதிர்பார்ப்பு
பிரெடிக்ஷன் சந்தைகளில் (Prediction market) ரிக் ரீடர் தான் அடுத்த பெடரல் ரிசர்வ் தலைவராக வருவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாக கணித்துள்ளனர். உதாரணமாக தற்போது அமெரிக்காவில் பிரபலமாகி வரும் பாலிமார்கெட் போன்ற தளங்களில் ரிக் ரீடர் வாய்ப்பு 47 சதவீதமாக உள்ளது.
கெவின் வார்ஷ் போன்ற பிற வேட்பாளர்களை விட ரீடர் முன்னிலை வகிக்கிறார்.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?



Click it and Unblock the Notifications