டிக்டாக் விவகாரம்.. டிரம்ப் சொல்லும் புது கதை.. அமெரிக்கா – சீனா இடையே ஒப்பந்தம் நடக்குமா..?

அமெரிக்கா: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னுடைய வரி விதிப்பு நடவடிக்கையால் தான் சீனா டிக் டாக் விவகாரத்தில் இன்னும் முடிவெடுக்காமல் இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

சீனாவை தலைமை இடமாக கொண்டு செயல்படும் பைட் டான்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான டிக்டாக் செயலி அமெரிக்காவில் புகழ்பெற்ற சமூக ஊடக செயலியாக இருக்கிறது. ஆனால் டிக் டாக் செயலி மூலம் அமெரிக்கர்களின் தனி உரிமைக்கு பாதுகாப்பு இல்லை என்றும், அமெரிக்கர்களின் தகவல்களை சீனா திருடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அடுத்து முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் டிக் டாக் செயலி ஜனவரி 19ஆம் தேதியிலிருந்து செயல்படாது என்ற அறிவிப்பை வெளியிட்டது.

டிக்டாக் விவகாரம்.. டிரம்ப் சொல்லும் புது கதை.. அமெரிக்கா – சீனா இடையே ஒப்பந்தம் நடக்குமா..?

அமெரிக்க பயனாளர்களுக்கு ப்ளே ஸ்டோரில் இருந்து டிக் டாக் செயலி நீக்கப்பட்டது. இந்த சூழலில் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டிரம்ப், டிக்டாக் செயலி மேலும் இரண்டு மாதங்களுக்கு செயல்படும் என்று உத்தரவு பிறப்பித்தார். டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்ட உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இந்த காலகட்டத்திற்குள் சீனாவும் பைட் டான்ஸ் நிறுவனமும் டிக் டாக் செயலியை அமெரிக்காவை சேர்ந்த நிறுவனத்திடம் விற்பனை செய்து விட வேண்டும் என்றும் அவ்வாறு விற்பனை செய்து விட்டால் டிக்டாக் செயலி தொடர்ந்து அமெரிக்காவில் செயல்படும் என்றும் கூறியிருந்தார்.

இதற்கிடையே அமெரிக்கா மற்றும் சீனா இடையே கடுமையான வர்த்தக போர் ஏற்பட்டிருக்கிறது. கடந்த இரண்டாம் தேதி டொனால்ட் டிரம்ப் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 34 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படும் என அறிவித்தார். அவருடைய அறிவிப்பை தொடர்ந்து சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கு 34 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் ஏப்ரல் 10ஆம் தேதியிலிருந்து இது அமலுக்கு வருகிறது என்றும் போட்டி அறிவிப்பை வெளியிட்டது.

இந்த சூழலில் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது டிக் டாக் தொடர்பாக சீனாவிற்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட இருந்ததே அதன் நிலவரம் என்ன என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த டிரம்ப் டிக் டாக் விவகாரத்தில் சீனாவும் அமெரிக்காவும் ஒரு ஒப்பந்தத்தை எட்டியது ஆனால் ஒப்பந்தம் கையெழுத்தாக இருந்த சூழலில் தான் திடீரென சீனா தன்னுடைய மனதை மாற்றிக் கொண்டது. இதற்கு காரணம் நாம் அறிவித்த இறக்குமதி வரி . சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை குறைத்தால் 15 நிமிடங்களில் அவர்கள் டிக் டாக் செயலியை நமக்கு வழங்கி விடுவார்கள் இந்த ஒப்பந்தமும் கையெழுத்து ஆகிவிடும் எனக் கூறியுள்ளார்.

டிக் டாக் செயலி மேலும் 75 நாட்களுக்கு அமெரிக்காவில் செயல்படும் வகையில் புதிய ஆணையில் கையெழுத்திட்டு இருப்பதாகவும் அதற்குள் சீனா ஒப்பந்தத்திற்கு வந்துவிடும் என நம்புவதாகவும் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+