ஜெலன்ஸ்கி நன்றிக்கெட்டவர்.. 350 பில்லியன் டாலர் உதவி செய்தும் மாறவில்லை.. அதிபர் டிரம்ப் கடும் சாடல்!.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் உக்ரைன்- ரஷ்யா இடையேயான போருக்கு மத்தியில், உக்ரைனுக்கு, ராணுவம் சார்ந்த பல்வேறு உதவிகளை ஜோ பைடன் நிர்வாகம் வழங்கி வந்தது. குறிப்பாக பைடன் நிர்வாகம் உக்ரைனுக்கு பில்லியன் கணக்கான டாலர்களை இராணுவ உதவியாக வழங்கி வந்துள்ளது. இதுமட்டுமல்லாமல், உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு அமெரிக்காவின் அசைக்க முடியாத ஆதரவு தொடரும் என்றும் வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் டொனால்டு ட்ரம்ப் ஆட்சிக்கு வந்ததும், உக்ரைன் போர் தொடர்பில் அவரது நகர்வுகள் அனைத்தும் அதிர்ச்சியளிக்கும் வகையில் மாற்றம் கண்டது. அத்துடன் ரஷ்யா மீது அதிக நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவும் ட்ரம்ப் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இப்படி இருக்கையில், கடந்த வாரம் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி உடனான பேச்சுவார்த்தை மிகவும் மோசமாக முடிவடைந்ததை ஒட்டி, உக்ரைனுக்கான ராணுவ உதவியை நிறுத்துவதாக அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார். இதை தொடர்ந்து இருநாடுகளுக்கிடையேயான அமைதி ஒப்பந்தத்தை எட்ட டிரம்ப் தலைமையின்கீழ் பணியாற்ற தயார் என்றும் ஜெலென்ஸ்கி கூறியிருந்தார். இதையடுத்து, ரஷ்யா - உக்ரைன் அமைதி ஒப்பந்தம் தொடர்பாக இந்த வாரத்தில் சவுதி அரேபியாவில் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஜெலன்ஸ்கி நன்றிக்கெட்டவர்..350 பில்லியன் டாலர் உதவி செய்தும் மாறவில்லை..அதிபர் டிரம்ப் கடும் சாடல்!.

இந்தநிலையில், அமெரிக்காவிலிருந்து வரும் உதவியை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி குறைத்து மதிப்பிட்டதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அமெரிக்காவிலிருந்து எந்த நன்றியுணர்வும் இல்லாமல், எளிதாக அமெரிக்க நிதியை பெற்றுக்கொள்கிறார் என்று விமர்சித்துள்ளார். Fox News-யிடம் பேசிய டிரம்ப், உக்ரைனுக்கு பில்லியன் கணக்கான இராணுவ உதவிகளை வழங்கியதற்காக பைடன் நிர்வாகத்தை விமர்சித்தார். மேலும் இதை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தவறாக பயன்படுத்தி கொண்டுள்ளார். அதாவது ஜெலென்ஸ்கியின் இந்த செயல், ஒரு குழந்தையிடம் இருந்து மிட்டாயை பிடுங்குவது போன்று அமெரிக்காவிடமிருந்து நிதியை எடுத்துச்சென்றுள்ளார் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். நாங்கள் அவருக்கு $350 பில்லியன் கொடுத்துள்ளோம் என்று கூறிய டிரம்ப், ஜெலென்ஸ்கி நன்றியுள்ளவராக இல்லை என்று விமர்சித்துள்ளார்.

மேலும், உக்ரைனுக்கான அமெரிக்கா வழங்கும் உதவிகள் பலவீனமாகியுள்ளதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த டிரம்ப், ரஷ்யா மீது தடைகளை விதித்தவன் நான்தான், ரஷ்யாவுக்கு பாதுகாப்பு மற்றும் இராணுவம் பயன்படுத்தும் ஜாவலின்களை (Javelins) கொடுத்தேன். ஆனால் புடினுடன் நான் நன்றாக உள்ளேன் என்று கூறினார். இருப்பினும், என்னைவிட (டொனால்ட் டிரம்ப்) ரஷ்யா மீது யாரும் கடுமையாக நடந்து கொண்டதில்லை, அது ரஷ்யர்களுக்கே தெரியும் என்றும் டிரம்ப் கூறினார். இதுமட்டுமல்லாமல், முக்கிய உலகத் தலைவர்களுடன் தனக்கு நல்ல உறவுகள் இருப்பதாகவும் வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் நான் பழகியது போலவே, புடினுடனும் நான் பழகினேன் என்றுன் டிரம்ப் கூறினார்.

அணு ஆயுதங்களும் ஐரோப்பாவின் பாதுகாப்பும்: ஐரோப்பிய நாடுகள் தங்கள் பாதுகாப்பை தொடர்ந்து வலுப்படுத்தி வரும் நிலையில், கண்டத்தைப் பாதுகாக்க பிரான்சின் அணுசக்தித் தடுப்பைப் பயன்படுத்தலாம் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் சமீபத்தில் பரிந்துரைத்திருந்தார். இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், நாங்கள் அணு ஆயுதங்களுக்கு நிறைய பணம் செலவிடுகிறோம். ஆனால், அழிவின் அளவு நீங்கள் கற்பனை செய்ய முடியாததை விட அதிகமாக உள்ளது. இந்தப் பணத்தை எல்லாம் நீங்கள் பயன்படுத்துவது மோசமானது. இருப்பினும் அந்த பணத்தை தொடர்ந்து பயன்படுத்தினால், அநேகமாக அது உலகின் முடிவாக இருக்கும் என்று குறிப்பிட்டார். மேலும், உலக கையிருப்பில் உள்ள ஆயுதங்களை "உலகத்தையே முடிவுக்குக் கொண்டுவரக்கூடிய அரக்கர்கள் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.

மேலும், கடந்த வெள்ளிக்கிழமை உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலுக்கு கவலை தெரிவித்த டிரம்ப், மாஸ்கோ மீது கடுமையான தடைகள் மற்றும் வரி கட்டணங்களை விதிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக" கூறினார். தற்போது ரஷ்யா, உக்ரைன் மீது தொடர் தாக்குதலில் ஈடுபட்டுவருவதாக சுட்டிக்காட்டிய டிரம்ப், போர் நிறுத்தம் மற்றும் அமைதிக்கான இறுதி தீர்வு ஒப்பந்தம் எட்டப்படும் வரை ரஷ்யா மீது பெரிய அளவிலான வங்கித் தடைகள், வரிகள் விதிப்பது குறித்து நான் கடுமையாகப் பரிசீலித்து வருகிறேன் என்று ட்ரூத் சோஷியலில் பதிவிட்டுள்ளார். மேலும் இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்திய அவர் ரஷ்யா மற்றும் உக்ரைன் தாமதிக்காமல் உடனடியாக இப்போதே பேச்சுவார்த்தைக்கு வாருங்கள். நன்றி என்று பதிவிட்டுள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+