டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு உலக நாடுகள் மீது அடுத்தடுத்து வரி விதித்தது மூலம் உலகளாவிய வர்த்தகத்தை தலைகீழாக புரட்டிப்போட்டது. இந்த வரியை எதிர்த்து அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில் நிதிமன்றம் வசூலித்த வரியை திருப்பி செலுத்தவும், வரியை உடனடியாக நீக்கவும் உத்தரவிட்டது.
இந்த நிலையில் டிரம்ப் அரசு வரி விதிக்க மாற்று வழிகளை ஆய்வு செய்ய துவங்கிய நிலையில், தற்போது வரி விதிப்பு சட்டம் 1930 பிரிவு 338ஐ பயன்படுத்தி கனடா மீது 50 சதவீத வரி விதிக்க உள்ளதாக திங்கட்கிழமை அறிவித்துள்ளது.

டிரம்ப் திங்கட்கிழமை வெளியிட்ட அறிவிப்பின் படி அமெகிக்காவில் தயாரிக்கப்பட்ட கார், மதுபானம், பால் பொருட்களுக்கு பாகுபாடு காட்டுவதாக குற்றம்சாட்டப்பட்டது. இதன் எதிரொலியாக கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களும் 50 சதவீதம் வரி விதிக்கப்பட உள்ளது.
இந்த வரி இனி ஒவ்வொரு நாடுகள் மீதும் ரெசிப்ரோக்கல் வரி விதிப்பு போல் தொடராலாம் என்ற அச்சம் சர்வதேச வர்த்தக சந்தையில் நிலவுகிறது.
வரி விதிப்பு சட்டம் 1930 பிரிவு 338 மூலம் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் எந்தொரு நாட்டின் மீது வேண்டுமானாலும் அமெரிக்க பொருட்கள் தொடர்பான வர்த்தகத்திற்கு பாகுபாடு காட்டுவதாக கூறி அதிபர் 50 சதவீதம் வரையில் வரியை விதிக்க உரிமை உள்ளது. இந்த விதி கடந்த 100 ஆண்டுகளாக இருந்தாலும், டிரம்ப் தான் முதன் முதலில் இதை பயன்படுத்தியுள்ளார்.
மேலும் கனடா மீதான இந்த புதிய வரி விதிப்பு என்பது நடைமுறைக்கு வர 30 நாட்கள் ஆகும். இந்த வரி பால் பொருட்கள், ஸ்விம்ங் பூல், பர்னீச்சர்கள், மீன்பிடி சாதனங்ள், விதைகள், ஆடைகள், விக் போன்ற அனைத்து கனடா இறக்குமதி பொருட்களுக்கும் விதிக்கப்படும் என டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த வரி விதிப்பு குறித்து அமெரிக்க வர்த்தக பிரிவின் உறுப்பினரான ஜேமிசன் கிரீர் கூறுகையில், டிரம்ப் நிர்வாகம் உலக நாடுகள் உடன் நிலையான மற்றும் வெளிப்படையான வர்த்தக ஒப்பந்தங்களை செய்து வரும் வேளையில், கனடா போன்ற சில நாடுகள் அமெரிக்க அரசின் முயற்சிகளுக்கு எதிராக நிற்கிறது என தெரிவித்தார்.
இந்த நிலையில் கனடா நாட்டின் பிரதமர் மார் கார்னி அமெரிக்கா உடனான வர்த்தக பிரச்சனைகளை சரி செய்யும் விதிமாக மாற்று திட்டங்கள் அடங்கிய திட்டத்தை முன்வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் டிரம்ப்-ன் இந்த புதிய வரி வட அமெரிக்க வர்த்தக ஒப்பந்த விதிகளுக்கு முரணானது என தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications