அமெரிக்க பங்குச் சந்தை கடும் சரிவுடன் வர்த்தகமாகி வந்த நிலையில் டிரம்பின் பேச்சால் மொத்தமும் மாறியது, இதனால் நாளை ஆசிய சந்தையில், இந்திய சந்தை உயர்வது மட்டும் அல்லாமல் தங்கம், வெள்ளி விலை குறைய உள்ளது. அப்படி டிரம்ப் என்ன தான் சொன்னார்..?
சுவிஸ் நாட்டின் டாவோஸ் நகரில் நடந்து வரும் உலக பொருளாதார கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கிரீன்லாந்தை வலுக்கட்டாயமாக கைப்பற்ற மாட்டேன் என்று அறிவித்ததால் வால் ஸ்ட்ரீட் அமெரிக்க பங்குச் சந்தை புதன்கிழமை உயர்வுடன் தொடங்கியது.

இதேவேளையில் டென்மார்க் நாட்டின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிரீன்லாந்தை அமெரிக்காவின் பகுதியாக அறிவிக்க உடனடி பேச்சுவார்த்தை தேவை என்று அவர் வலியுறுத்தியுள்ளார். கிரீன்லாந்து-ஐ கைப்பற்றும் முயற்சியில் டிரம்ப்-ன் நிலைப்பாட்டில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் மாற்றம் அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு புதிய நம்பிக்கையை அதிகரித்தது.
ஜாக வாங்கிய டிரம்ப்
டாவோஸ் உலக பொருளாதார மன்றத்தில் பேசிய டிரம்ப், கிரீன்லாந்தை "வலுக்கட்டாயமாக கைப்பற்ற மாட்டேன்" என்று உறுதியளித்தார். கிரீன்லாந்தின் முக்கியத்துவம் மற்றும் கனிம வளங்களை சுட்டிக்காட்டிய டிரம்ப், ஐரோப்பிய நாடுகள் மீது விதித்த வரியை மீண்டும் நினைவூட்டினார். ஆனால் ராணுவத்தை பயன்படுத்த மாட்டேன் என்ற அவரது அறிவிப்பு உலக சந்தைகளில் நிம்மதியை அளித்துள்ளது.
அமெரிக்க பங்குச்சந்தை சந்தை ஏற்றம்
இன்று அமெரிக்க வர்த்தக சந்தை டவ் ஜோன்ஸ் 0.5% உயர்ந்து 48,748.75-ஆகவும், எஸ்&பி 500 0.4% உயர்ந்து 6,823.97-ஆகவும், நாஸ்டாக் 0.2% உயர்ந்து 22,991.96-ஆகவும் வர்த்தகமானது. செவ்வாயன்று ஐரோப்பா மீதான வரி அச்சுறுத்தலால் சந்தை பெரிதும் சரிந்தது. இப்போது அந்த பதற்றம் குறைந்ததால் சந்தை மீண்டுள்ளது.
யுனைடெட் ஏர்லைன்ஸ் காலாண்டு முடிவில் லாப எதிர்பார்ப்பை மீறியதால் உயர்ந்தது. நெட்ஃப்ளிக்ஸ் காலாண்டு முடிவுகள் அறிவிப்பால் சரிந்தது. இன்டெல் பங்கு கணிசமாக உயர்ந்தது. இந்த மாற்றங்கள் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை தருகின்றன.
டிரம்ப்பின் புதிய அறிவிப்பு இந்த பதற்றத்தை சற்று குறைத்துள்ளது என்னவோ உண்மை தான். ஆனால் முதலீட்டாளர்கள் கிரீன்லாந்து விவகாரத்தின் தொடர்ந்து கவனமாக கண்காணித்து வருகின்றனர்.
More From GoodReturns

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

டிரம்ப் ஊதும் மகுடிக்கு கெவின் வார்ஷ் ஆடுவாரா..? தலைதூக்கும் ரெசிஷன் அச்சம்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்வது என்ன?

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!



Click it and Unblock the Notifications