ரஷ்யாவுடன் ராசியாகும் டிரம்ப்.. இந்தியாவுக்கு வரி குறைப்பு.. அமெரிக்கா அடித்த அந்தர் பல்டி!

புடின் அரசுக்கு பெரும் நெருக்கடி கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ரஷ்ய தடை மசோதாவில் பெரும் மாற்றத்தை அமெரிக்க செனேட்டர்கள் கொண்டு வந்துள்ளனர். இந்த மாற்றம் மூலம் ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் இந்சியாவுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் கிடைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரு கட்சிகளாலும் ஒப்புதல் பெற்ற Russia sanctions bill-ல் சில முக்கியமான தளர்வுகள் கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த மசோதா கொண்டு வர முக்கிய காரணம் ரஷ்ய அதிகாரிகள், தலைவர்கள், ரஷ்யா உடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது கடுமையான வரி விதிப்பு மற்றும் பொருளாதார நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

ரஷ்யாவுடன் ராசியாகும் டிரம்ப்.. இந்தியாவுக்கு வரி குறைப்பு.. அமெரிக்கா அடித்த அந்தர் பல்டி!

இந்த மசோதாவில் அறிவிக்கப்பட்ட முக்கியமான விஷயம் என்னவென்றால் ரஷ்யா எண்ணெய் மற்றும் எரிபொருள் வாங்கும் நாடுகள் மீது 500 சதவீதம் வரி விதிக்கப்பட்டும் என நிலைப்பாடு உருவாக்கப்பட்டது. தற்போது அமெரிக்க செனேட்டர்கள் இந்த விதியை தளர்த்த முடிவு செய்து 500 சதவீத வரியை 100 சதவீதமாக குறைத்துள்ளனர்.

அதுவும் இந்த 100 சதவீத வரி என்பது ரஷ்யாவுடன் அதிக எண்ணெய் வாங்கும் டாப் 5 நாடுகளுக்கு மட்டுமே பொருந்தும் வகையில் இந்த Russia sanctions மசோதா திருத்தப்பட்டு உள்ளது.

இந்த மசோதாவை உருவாக்கியவர் Lindsey Graham, இவர் கடந்த 11 ஆம் தேதி திடிரென மறைந்த நிலையில் இந்த திருத்தம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவர் இறப்பதற்கு முன்பே அமெரிக்க அதிபர் டிரம்ப்-யிடம் திருத்திற்கான ஒப்புதலை பெற்றதாக கூறினார் என்பதும் கவனிக்கப்பட வேண்டியது.

இந்த புதிய திருத்தம் மூலம் அதிகளவில் பயன் பெறப்போவது யாரென்றால் ரஷ்யாவுடன் அதிகம் கச்சா எண்ணெய் வர்த்தகம் செய்யும் டாப் 5 நாடுகள் தான், இதில் சீனா, இந்தியா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி மற்றும் அசர்பைஜான். இதேபோல் அதிக எரிவாயு வாங்கும் நாடுகளில் சீனா, பிரான்ஸ், ஜப்பான், ஹங்கேரி மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகள் உள்ளது.

அமெரிக்க அரசு இந்த திருத்தம் கொண்டு வர முக்கியமான காரணம் என்னவென்றால் இந்த 500 சதவீத வரியால் அமெரிக்காவின் நடப்பு நாடுகளும் பாதிக்கப்படுகிறது. இதை சரி செய்யவே அமெரிக்க செனேட்டர்கள் இந்த மாற்றத்தை கொண்டு வர டிரம்பிம் ஒப்புதல் பெற்றனர்.

ஆனால் இது bipartisan legislation என்பதால் இதற்கு இரு கட்சிகளும் மீண்டும் ஒப்புதல் அளிக்க வேண்டும். அடுத்த கட்டமாக இந்த மசோதாவில் ஈரான் மற்றும் ஹிபுல்லாவை சேர்க்கவும் டிரம்ப் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஒருபக்கம் ரஷ்யா மீதான கிடுக்குபிடியை அமெரிக்கா தளர்த்துவதாக கூறப்பட்டாலும், உலகளாவிய வர்த்தகத்தில் ரஷ்யாவின் பங்கு அதிகமாக இருக்கும் காரணத்தால் இது முறைமுகமாக அமெரிக்காவையும் பாதிக்கிறது.

இந்த Russia sanctions bill மூலம் ரஷ்யாவின் வர்த்தகத்தையும், ஏற்றுமதியை முடக்கி அந்நாட்டுக்கான நிதி ஆதாரத்தை குறைத்து உக்ரைன் போரில் இருந்து பின்வாங்க வைக்க வேண்டும் என்ற குறிக்கோள் உடன் கொண்டு வரப்பட்டாலும், 4 ஆண்டுகளாக தொடர்ந்து ரஷ்யா உக்ரைன் உடன் போரிட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+