அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஜூலை 2, 2025 அன்று வியட்நாமுடன் ஒரு முக்கிய வர்த்தக ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாக அறிவித்தார். இந்த ஒப்பந்தம் டிரம்ப் ரெசிப்ரோக்கல் வரியை விதித்த பின்பு செய்யப்பட்ட 3வது நாடு. டிரம்ப் வியட்நாம் நாட்டின் மீது 46 சதவீதம் ரெசிப்ரோக்கல் வரியை விதித்திருந்தார், இந்த வரி விதிப்பில் இருந்து தப்பிக்க எதையும் செய்ய தாயராக இருப்பதாக வியட்நாம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், அமெரிக்க அரசு இதை சரியாக பயன்படுத்தியுள்ளது.
வியட்நாமுடனான ஒப்பந்தத்தின் படி, வியட்நாமில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 20% வரி விதிக்கப்படும், இது ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்பட்ட 46% வரியிலிருந்து குறைக்கப்பட்டுள்ளது. இந்தக் குறைப்பு, வியட்நாம் - அமெரிக்காவுக்கு மத்தியிலான மிகப்பெரிய வர்த்தக உபரியை (trade surplus) கருத்தில் கொண்டு செய்யப்பட்டுள்ளது.

மறுபுறம், அமெரிக்காவிலிருந்து வியட்நாமிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு எந்த வரியும் விதிக்கப்படாது, இதோடு வியட்நாமின் சந்தையை அமெரிக்க நிறுவனங்களுக்கு முழுமையாக திறந்துவிடவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் அமெரிக்க நிறுவனங்கள் வியட்நாம் நாட்டில் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்ய முடியும்.
மேலும், வியட்நாமில் இருந்து மற்ற நாடுகளின் பொருட்கள் (குறிப்பாக சீனாவிலிருந்து) அனுப்பப்படும் "டிரான்ஸ்ஷிப்பிங்" (transshipping) முறைக்கு 40% வரி விதிக்கப்படும், இது வர்த்தக முறைகேடுகளை தடுக்க உதவும்.
இந்த ஒப்பந்தம், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டோ லாமுடன் ட்ரம்பின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு உருவானது. ட்ரம்ப், தனது Truth Social தளத்தில், இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே பெரும் ஒத்துழைப்பை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டு உள்ளார்.
அமெரிக்காவின் ரெசிப்ரோக்கல் வரி அறிவிப்பிற்குப் பிறகு, வியட்நாமுடன் மட்டுமல்லாமல், பிரிட்டன் மற்றும் சீனாவுடனும் வர்த்தக ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. பிரிட்டன் நாட்டுடன் ஒரு ஆரம்ப ஒப்பந்தம் மட்டுமே செய்யப்பட்டு உள்ளது, பிரிட்டன் நாட்டில் தயாரிக்கப்பட்ட கார்கள் மற்றும் பிற பொருட்களுக்கு வரிகள் குறைக்கப்பட்டு உள்ளது.
சீனாவுடன், ஏப்ரல் மாத "லிபரேஷன் டே" அறிவிப்பிற்குப் பிறகு விதிக்கப்பட்ட வர்த்தக தடைகளை நீக்குவதற்கு ஒரு ஒப்பந்தம் மே மாதம் 2025-இல் உருவாக்கப்பட்டது. இதில், சீனாவின் அரிய கனிம ஏற்றுமதி கட்டுப்பாடுகள் மற்றும் அமெரிக்காவின் சில ஏற்றுமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. இந்த ஒப்பந்தத்தின் மூலம், சீனப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரி 145%-இலிருந்து 55% ஆகவும், சீனாவின் அமெரிக்க பொருட்கள் மீதான வரி 125%-இலிருந்து 10% ஆகவும் குறைக்கப்பட்டது.
இந்தியாவைப் பொறுத்தவரை, அமெரிக்காவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. ஜூலை 9ஆம் தேதி டிரம்ப் அறிவிக்க 90 நாள் வரி விதிப்பு ஒத்திவைப்பிற்கான கால அவகாசம் முடிவடைகிறது. இந்தியாவிற்கு தற்போது 26% பரஸ்பர வரி விதிக்கப்பட்டுள்ளது, இது சீனாவின் 54% மற்றும் வியட்நாமின் 46% வரிகளை விட குறைவு.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!



Click it and Unblock the Notifications