அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மற்றொரு குண்டை தூக்கிப்போட்டார். அமெரிக்கா அரசு ரெசிப்ரோக்க் வரியை விதித்த பின்பு இதுவரையில் 4 நாடுகளுடன் வர்த்தகம் ஒப்பந்தம் செய்துள்ளது. 5வதாக இந்தியா இருக்கும் என எதிர்பார்க்கப்படும் வேளையில் டிரம்ப் தனது மெகா திட்டத்தை வெளியிட்டு உள்ளார்.
டிரம்ப்-ன் ரெசிப்ரோக்கல் வரி விதிப்பு ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது, ஆனால் இந்த வரி விதிப்புக்கு பின்பு அமெரிக்க பங்குச்சந்தை, நாணய மதிப்பு என அனைத்தும் ஆட்டத்தை ஏற்படுத்தியதால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஆனால் ஆகஸ்ட் 1-ஆம் தேதியில் இருந்து இந்த ரெசிப்ரோக்கல் வரி நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால் உலக நாடுகள் அமெரிக்காவுடன் எப்படியாவது வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என திட்டமிட்டு பேச்சுவார்த்தை நடத்துகிறது. இந்த பேச்சுவார்த்தை மூலம் அமெரிக்கா தற்போது பல நாடுகளில் முழு வர்த்தகம் மற்றும் முதலீட்டு சுதந்திரத்தை பெற்றுள்ளது.
டிரம்ப் நேற்று செய்தியாளர்களுடன் பேசும் போது 150-க்கும் மேற்பட்ட சிறிய நாடுகளுக்கு புதிய வரி விதிக்க கடிதங்கள் அனுப்ப திட்டமிட்டுள்ளதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டு பொருட்களுக்கு 10% முதல் 15% வரை வரி விதிக்கப்படலாம் என்று ரியல் அமெரிக்கா வாய்ஸ் நிகழ்ச்சியில் டிரம்ப் தெரிவித்தார்.
டிரம்ப் புதன்கிழமை வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் பேசுகையில், இறுதி வரி விகிதம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று தெரிவித்தார். இந்த எதிர்பாராத அறிவிப்பு பல நாடுகளுக்கு புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளது, ஏனெனில் அவர் பிரேசில் மீது 50%, வியட்நாம் மீது 19%, கனடா மீது 25%, ஐரோப்பிய யூனியன் மீது 30% உள்ளிட்ட பல வரிகளை விதித்து வருகிறார். இதோடு மருந்து மற்றும் ஆட்டோமொபைல் இறக்குமதிகளுக்கு அடிப்படை 10% வரியும் உள்ளது. இந்த நடவடிக்கைகள் அமெரிக்க சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
இதன் மூலம் ஏப்ரல் 2-இல் அறிவிக்கப்பட்ட பரந்த வரிகள் திருத்தப்பட்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி அமலுக்கு வரவுள்ளன. இதை முன்னிட்டு, பல நாடுகள் அமெரிக்காவுடன் விரைவாக வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்த முயல்கின்றன. இந்த நிலைமை உலகளாவிய வர்த்தகத்தில் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கலாம்.
டிரம்பின் இந்த திட்டம் சிறிய நாடுகளுக்கு அதாவது அமெரிக்காவுடன் மிகவும் குறைந்த வர்த்தக தொடர்பு கொண்ட நாடுகளுக்கு புதிய அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது, ஏனெனில் அவர்கள் தங்கள் ஏற்றுமதியை பாதுகாக்க அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 150 நாடுகள் மீது 10% முதல் 15% வரை வரி விதிக்கப்படலாம் என்ற அறிவிப்பு சந்தையில் கவலை அளித்தாலும், இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படாத காரணத்தால் பதற்றம் குறைவாக உள்ளது. ஆகஸ்ட் 1-ஆம் தேதி காலக்கெடு நெருங்கி வருகிறது
More From GoodReturns

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications