அமெரிக்க அதிபராக 2வது முறையாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். டிரம்ப் பதவியேற்ற சில தினங்களிலேயே, சீனா,கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்தார்.
மேலும், அமெரிக்க பொருட்களுக்கு அதிகம் வரி விதிக்கும் நாடுகளுக்கு அதேபோல் பரஸ்பரி விதிக்கப்போவதாக அதிரடியாக அறிவித்தார். இந்த பரஸ்பர வரி விதிப்பு ஏப்ரல் 2ம் தேதி நடைமுறைக்கு வர உள்ளது. டிரம்பின் இந்த நடவடிக்கைகள் சர்வதேச அளவில் வர்த்தக போரை ஏற்படுத்தும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பரஸ்பர வரி விதிப்பு பஞ்சாயத்து தீயாக பற்றி எரியும் வேளையில், எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றுவது போல் அடுத்த அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளார் டிரம்ப். நேற்று, லத்தின் அமெரிக்க நாடான வெனிசுலாவிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்கும் நாடுகளுக்கு 25 சதவீதம் இரண்டாம் நிலை வரிகள் விதிப்போம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
இது தொடர்பாக டிரம்ப் சமூக வலைதளத்தில், வெனிசுலாவிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்கும் எந்தவொரு நாடும், நமது நாட்டோடு (அமெரிக்கா) அவர்கள் செய்யும் எந்தவொரு வர்த்தகத்திற்கும் அமெரிக்காவுக்கு 25 சதவீதம் வரி செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்.
அனைத்து ஆவணங்களும் கையொப்பமிடப்பட்டு பதிவு செய்யப்படும். மேலும் ஏப்ரல் 2ம் தேதியன்று அமெரிக்காவின் விடுதலை தினத்தில் இந்த வரி நடைமுறைக்கு வரும். வெனிசுலா, அமெரிக்காவுக்கும் நாம் ஆதரிக்கும் சுதந்திரங்களுக்கும் மிகவும் விரோதமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். டிரம்பின் இந்த வரி மிரட்டலில் உள்ள வேடிக்கையான விஷயம் என்னவென்றால், வெனிசுலா எண்ணெய்யை அதிகமாக வாங்குபவர்களில் அமெரிக்க சுத்திகரிப்பு நிறுவனங்கள் அடங்கும்.
குறிப்பாக வெனிசுலாவின் கனரக கச்சா எண்ணெய்யைதான் அமெரிக்க சுத்திகரிப்பு நிறுவனங்கள் அதிகம் நம்பியுள்ளன. மேலும் சீனா, கியூபா மற்றும் ஐரோப்பா மற்றும் இந்தியாவை சேர்ந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களும் வெனிசுலாவிலிருந்து எண்ணெய் வாங்குகின்றன.
டொனால்ட் டிரம்பின் இரண்டாம் நிலை வரி விதிப்பு மிரட்டல், வெனிசுலாவில் நிக்கோலஸ் மதுராவின் ஆட்சியின் முக்கிய வருவாய் ஆதாரத்தை குறைப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. அதேசமயம், ஏற்கனவே டிரம்பின் வரி விதிப்பால் சிக்கலில் உள்ள சீனாவுக்கு, வெனிசுலா எண்ணெய் வாங்கினால் 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்ற டிரம்பின் மிரட்டல் சீனாவுக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல் இந்தியாவுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. டொனால்ட் டிரம்பின் இந்த நடவடிக்கை உலக எரிசக்தி வர்த்தகத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைகள் காரணமாக ஒட்டு மொத்தத்தில் வரும் ஏப்ரல் 2ம் தேதி சர்வதேச அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

எண்ணெய் அரசியலில் சீனாவை அசைக்க முடியாது? ஹார்மூஸ் சிக்கலை உடைக்கும் பெய்ஜிங்கின் ரகசிய பிளான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!



Click it and Unblock the Notifications