அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவுக்கு திங்கட்கிழமை கடுமையான எச்சரிக்கை விடுத்தது மூலம் மீண்டும் இரண்டு நாடுகளுக்கு மத்தியிலான பிரச்சனை சூடுப்பிடித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்த ரெசிப்ரோக்கல் வரி விதிப்பில் வரி இல்லாமல் தப்பித்த நாடுகளில் மிகவும் முக்கியமானது சீனா, அதேபோல் ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதல் தொடர்பாக சீனா மீது டிரம்ப் நிர்வாகம் எவ்விதமான வரியைும் கூடுதலாக விதிக்கவில்லை.
இந்த நிலையில் திங்கட்கிழமை வெள்ளை மாளிகையில் தென் கொரிய அதிபர் லீ ஜே மையூங் உடனான செய்தியாளர் சந்திப்பில் பேசி டிரம்ப் சீனா குறித்து அதிரடியாக பேசினார்.

அரிய உலோக காந்தம் விவகாரம்:
முதலாவதாக சீனா அரிய உலோக காந்தங்களை அமெரிக்காவுக்கு வழங்காவிட்டால், 200 சதவீத வரியை விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டார். டிரம்ப்-ன் இந்த பேச்சு இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவுகளில் ஏற்படும் புதிய சவால்களை வெளிப்படுத்துகிறது.
உலக அரங்கில் அரிய உலோக காந்தங்கள் தயாரிப்பிலும், வர்த்தகத்திலும் சீனா புத்திசாலித்தனமாக மோனோபோலியாக உயர்ந்துள்ளதை டிரம்ப் பாராட்டினாலும், அமெரிக்காவின் தேவைகளை பூர்த்தி செய்யாவிட்டால் பொருளாதார ரீதியாக பெரும் இழப்பை சீனா சந்திக்க நேரிடும் என எச்சரித்தார்.
இந்த அரிய உலோக காந்தங்கள் ஆட்டோமொபைல் தொழில், எலக்ட்ரானிக்ஸ் உபகரணங்கள் மற்றும் பாதுகாப்புத் துறை போன்ற முக்கியத் துறைகளுக்கு அத்தியாவசியமான பொருளாக உள்ளது.
டிரம்பின் உறுதியான நிலைப்பாடு:
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு தற்போது சிறப்பாக உள்ளது என்று கூறிய டிரம்ப், அதேநேரம் வாஷிங்டனுக்கு பெய்ஜிங்கை விட வலிமையான விஷயங்கள் (Cards) உள்ளன என வலியுறுத்தினார். நான் அந்த விஷயங்களை (Cards) வைத்து விளையாடினால், அது சீனாவை அழித்துவிடும். ஆனால் நான் அவற்றை விளையாடப் போவதில்லை என அவர் தெரிவித்தார்.
டிரம்ப்-ன் பேச்சு சீனாவை வம்புக்கு இழக்கும் வகையிலேயே உள்ளது. ஏற்கனவே அமெரிக்க அரசு என்விடியா-வின் H20 சிப்-க்கு திறந்த கதவை சீனா முடிவிட்ட நிலையில், தற்போதை டிரம்ப்-ன் பேச்சு புதிய பிரச்சனையை உருவாக்கும் என எதிப்பார்க்கப்படுகிறது.

அரிய உலோக பொருட்களின் பின்னணி
சீனா ஏப்ரல் மாதத்தில், அமெரிக்காவின் வரிகளுக்கு பதிலடியாக ஏழு அரிய உலோக பொருட்களின் ஏற்றுமதியை சீன அரசு கட்டுப்படுத்தியது. இது சர்வதேச சந்தையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது அமெரிக்காவின் ஹைடெக் துறையை கடுமையாக பாதித்தது.
இந்த ஒரு விஷயத்திற்காகவே இரண்டு மாத போராட்டத்திற்து பிறகு, டொனால்ட் டிரம்ப் அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தை அறிவித்தார். அதன்படி, அரிய பூமி தாதுக்கள் மற்றும் காந்தங்களை வாஷிங்டனுக்கு வழங்க சீனா ஒப்புக்கொண்டது. இதற்காக அமெரிக்கா பல தடைகளையும், கட்டுப்பாடுகளையும் தளர்த்தியது.
அமெரிக்கா செய்த விஷயம்
சீனா அரிய உலோக பொருட்களை வைத்து அமெரிக்காவுக்கு நெருக்கடி கொடுத்த நிலையில், அமெரிக்கா சீனாவுக்கு வழங்காத முக்கிய விமான உதிரிப் பொருட்களால் 200 சீன விமானங்கள் தரையில் நிறுத்தப்பட்டிருந்தன, இந்த பிரச்சனைக்கு பின்பு விமான உதிரிபாகங்கள் சப்ளையை அமெரிக்கா துவங்கியது.
இதை திங்கட்கிழமை செய்தியாளர் சந்திப்பில் சுட்டிக்காட்டி பேசிய டிரம்ப், சீனா உடனான உறவின் காரணமாக அந்த உதிரிபாக பொருட்களை அனுப்பி விமானங்கள் இயங்கச் செய்ததாகக் கூறினார். அவற்றை நான் தடுத்து நிறுத்தியிருக்கலாம், ஆனால் செய்யவில்லை என டிரம்ப் கூறினார்.
தற்போதைய வரி நிலைமை
தற்போது, சீன இறக்குமதிப் பொருட்களுக்கு அமெரிக்க அரசு வெறும் 30 சதவீத வரியை மட்டுமே விதித்து வருகிறது. இதில் 10 சதவீதம் அடிப்படை விகிதமாகவும், 20 சதவீதம் ஃபென்டானில் தொடர்பான வரிகளாகவும் உள்ளன.
இன்று இரவு 12.01 மணிக்கு பின்பு இந்திய பொருட்கள் மீது அமெரிக்க அரசு 50 சதவீத வரி விதிக்கப்பதாக டிரம்ப் நிர்வாகம் அதிகாரப்பூர்வ ஆணையை வெளியிட்டு உள்ளது.
More From GoodReturns

டிரம்ப் கவுன்ட்டவுன் ஸ்டார்ட்ஸ்! ஈரானுக்கு 48 மணிநேர கெடு- நாளைக்கு தங்கம் பங்குச்சந்தை என்னவாகுமோ?

டொனால்டு டிரம்ப் கொடுத்த டார்ச்சர்.. சீனா தப்பித்தது எப்படி? தடைகளை தகர்த்தெறிந்த வெற்றி பயணம்?

மருந்து நிறுவனங்களுக்கு செக்.. உலோக இறக்குமதிக்கும் லாக்.. மீண்டும் டிரம்ப் ஆடுபுலி ஆட்டம்?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!



Click it and Unblock the Notifications