டிரம்ப்-க்கும் ஜெரோம் பவல்-க்கும் கடந்த சில மாதங்களாக இருந்த பிரச்சனை தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. ஆம், டிரம்ப் தலைமையிலான அரசு எடுக்கும் அதிரடி நடவடிக்கையால் அமெரிக்காவின் பொருளாதாரம், வர்த்தகம், வேலைவாய்ப்பு கடுமையாக பாதிக்கப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில் டிரம்ப் அந்நாட்டின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ்-ஐ பென்ச்மார்க் வட்டி விகிதத்தை குறைத்து பொருளாதார சரிவை கட்டுப்படுத்த நிர்பந்தம் செய்து வந்தார்.
ஆனால் ஜெரோம் பவல் தலைமையிலான பெடரல் ரிசர்வ், டிரம்ப்-ன் கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் நாட்டின் உண்மையான நிலையின் அடிப்படையில் வட்டி விகிதங்களை திருந்தி வந்தது. இதன் மூலம் டிரம்ப், ஜெரோம் பவல் மீது பல கடுமையான விமர்சனங்களை முன்வைத்து, அவரை பெடரல் ரிசர்வ்-ன் கவர்னர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கூறினார்.

இந்த சர்ச்சை மிகப்பெரியதாக வெடித்தது மட்டும் அல்லாமல் பெடரல் ரிசர்வ் ஒரு தனிப்பட்ட அமைப்பு, இதில் அரசுக்கு அதிகாரம் இல்லை என வாதம் கிளம்பி, பதற்றம் குறைந்தது. இந்த நிலையில் டிரம்ப் நேரடியாக பெடரல் ரிசர்வ் மற்றம் ஜெரோம் பவல்-ஐ தாக்காமல் மற்ற நபர்களை குறிவைக்க துவங்கினார்.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்களன்று பெடரல் ரிசர்வ் நிர்வாக ஆளுநர் லிசா குக்-ஐ பதவியிலிருந்து நீக்குவதாக அறிவித்தார். இது அமெரிக்க மத்திய வங்கியின் சுதந்திரத்தின் மீதான டிரம்ப் தாக்குதல்களின் உச்சகட்டமாகக் பார்க்கப்படுகிறது. வட்டி விகிதங்களைக் குறைக்க மறுத்ததால் ஏற்பட்ட கோபத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டிரம்ப் தனது ட்ரூத் ஷோசியல் பக்கத்தில், லிசா குக்-ன் பதவி நீக்க கடிதத்தை வெளியிட்டார். இந்த கடிதத்தில் ஃபெடரல் ஹவுசிங் ஃபைனான்ஸ் ஏஜென்சி இயக்குநர் பில் புல்டேவின் குற்றச்சாட்டுகளை காரணம் காட்டி லிசா குக் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக குறிப்பிட்டு இருந்தார்.
லிசா குக் தனது வீட்டுக் கடன் விண்ணப்பங்களில் தவறான தகவல்களை அளித்ததாக குற்றம்சாட்டப்பட்டது. ஏற்கனவே பில் புல்டேவின் குற்றச்சாட்டுகள் அடிப்படையில் அமெரிக்க நீதித்துறை விசாரிக்க முடிவு செய்துள்ள நிலையில், டிரம்ப் லிசா குக்-ஐ பதவியில் இருந்து நீக்க உத்தரவிட்டு உள்ளார்.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடனால் 2022இல் நியமிக்கப்பட்டவர் தான் லிசா குக், ஃபெடரல் ரிசர்வ் வாரியத்தில் சேவையாற்றிய முதல் கறுப்பின பெண் ஆளுநர் என்ற வரலாற்றை உருவாக்கி சிறப்பு இவருக்கு உள்ளது. இந்த சம்பவம், அரசியல் அழுத்தங்களுக்கும் பொருளாதார சுதந்திரத்துக்கும் இடையிலான மோதலை வெளிப்படுத்துகிறது.
டிரம்ப்-ன் அறிவிப்பை தொடர்ந்து லிசா குக் திங்களன்று வெளியிட்ட அறிக்கையில், அதிபர் டிரம்பின் பதவி நீக்க முயற்சியை சட்டரீதியாக செல்லாதது. சட்டப்படி எந்தக் காரணமும் இல்லாமல் தன்னை பதவியிலிருந்து நீக்க அவருக்கு அதிகாரம் இல்லை என அவர் தெரிவித்தார்.
இதேபோல் எனது பதவியில் இருந்து ராஜினாமாவும் செய்ய மாட்டேன் என உறுதியுடன் கூறிய அவர், 2022 முதல் அமெரிக்க பொருளாதார வளர்ச்சிக்கு தான் செய்த பணியை தொடர்வேன் என அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தினார். இந்த விவகாரத்தில் லிசா குக் சார்பாக அமெரிக்காவின் பிரபல வழக்கறிஞர் ஆபே லோவல்-ஐ நியமித்துள்ளார்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications