ஈரான் - அமெரிக்கா மத்தியிலான போர் தாக்குதல் மீண்டும் மிகப்பெரியதாக வெடித்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரான் மீதான 2வது நாள் தாக்குதலுக்கு பின்பு பேசும்போது ஈரானுடன் மீண்டும் எவ்விதமான பிரச்சனையும் வராது, ஆனால் ஈரான் தாக்கினால் அமெரிக்கா 10 மடங்கு கடுமையான தாக்குதலை செய்யும் என எச்சரித்தார்.
இது மட்டும் அல்லாமல் மீண்டும் சண்டை துவங்கினால் ஈரானின் கதை விரைவாக முடிந்துவிடும். அமெரிக்கா இனி ஒவ்வொரு நடவடிக்கையும் மிகவும் பாதிக்காப்பான முறையில் செய்யும், இதில் கச்சா எண்ணெய்யும் பாதுக்காக்கப்படும், விரைவில் கச்சா எண்ணெய்யும் எளிதாக கிடைக்க கூடியதாக மாறும் என பேசினார்.

பொருளாதார நிபுணர்கள் மத்தியில் டிரம்ப்-ன் இந்த பேசு மிகவும் கவனத்தை ஈர்த்துள்ளது, பொதுவாக டிரம்ப் பேசும் போது ஆக்ரோஷமாக இருக்கும், ஆனால் இந்த முறை மிகவும் அமைதியாகவும், நிதானமாகவும், எதிர்கால நிலையை சந்தித்து பேசுவதாக இருந்தாக கூறினர். செவ்வாய்க்கிழமை தாக்குதல் குறித்து பேசும்போது கூட டிரம்ப், ஈரான் செய்த வேலைக்கு தான் இப்போது அனுபவிக்கிறார்கள் என்ற தொனியில் பேசினார்.
இதேபோல் இரு நாடுகள் மத்தியிலான பேச்சுவார்த்தை தொடர்ந்தாலும், போர் நிறுத்தும் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். ட்ரூத் ஷோசியல் தளத்தில் டிரம்ப் செய்த பதிவும் இதே தொனியில் தான் இருந்தது.
மேலும் அமெரிக்க ராணுவ அதிகாரிகள் கூறுகையில், அமெரிக்கா இந்த முறை ஈரான் மீது பல நாட்கள், தேவைப்பட்டால் பல வாரங்களுக்கு தாக்குதலை தொடரும் வகையில் தயாராகியுள்ளது. ஹார்முஸ் விவகாரத்தை முழுமையாக தீர்க்கும் வரையில் இத்தாக்குதல் தொடரலாம் என தெரிவித்துள்ளனர்.
இத்தாக்குதல் குறித்து அமெரிக்க சென்டரல் கமெண்ட் அமைப்பு கூறுகையில், ஹார்முஸ் வழித்தடத்தில் சர்வதேச சரக்கு போக்குவரத்து மற்றும் சிவிலியன் கப்பல் போக்குவரத்திற்கும் நிரந்தர சுதந்திரம் பெற வேண்டும் என்ற காரணத்திற்காக நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளது. உலகின் 20 சதவீத எரிபொருள் இந்த பாதையில் செல்லும் காரணத்தால் இது மிகவும் முக்கியமானதாக உள்ளது.
ஈரான் மீதான 2 நாள் தாக்குதல் மூலம் கச்சா எண்ணெய் தடாலடியாக உயர்ந்துள்ளது, ஒரு பேரல் WTI கச்சா எண்ணெய் விலை 68 டாலரில் இருந்து 76 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. இதேபோல் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 70 டாலரில் இருந்து 80 டாலரை தொட்டு உள்ளது.
தற்போது ஈரான் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் காரணத்தால் அடுத்த சில வாரங்களுக்கு இந்த தாக்குதல் நடக்கவும் வாய்ப்புள்ளது. இல்லையெனில் ஈரான் போர் தாக்குதலை நிறுத்தி விட்டால் மொத்தமாக தாக்குதல் நிறுத்தப்படும். ஈரானுக்கு ஹார்முஸ் வழித்தடத்தை முழுமையாக கைப்பற்றுவது தான் முக்கிய குறிக்கோளாக இருந்தது, ஆனால் இதற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது.


Click it and Unblock the Notifications