அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் நேற்று பேசியபோது, ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்ந்து நீடித்தால் உலகப்போராக மாறலாம் என்று எச்சரித்தார். "இது போன்ற சம்பவங்கள் மூன்றாவது உலகப்போருக்கு வழிவகுக்கும்" என்று அவர் கூறியுள்ளார் என ANI தனது செய்தியில் தெரிவித்துள்ளது.
டிரம்ப் நேற்று மாநில அளவில் ஏஐ நடைமுறைகள் கொண்டு வரக்கூடாது என்ற முக்கியமான உத்தரவில் கையெழுத்திட்டு செய்தியாளர்களிடம் பேசிய போது இந்த எச்சரிக்கையை விடுத்தார். ரஷ்யா-உக்ரைன் மத்தியிலான போர் 2014 பிப்ரவரி முதல் தொடர்கிறது, ஆனால் 2022 பிப்ரவரி 24 அன்று ரஷ்யா பெரிய அளவிலான தாக்குதலுடன் முழு போராக மாறியது குறிப்பிடத்தக்கது.

போரின் தொடக்க புள்ளி:
ரஷ்யா-உக்ரைன் போர் நேற்று, இன்று துவங்கியது கிடையாது, 2014 பிப்ரவரி முதல் இரு நாடுகல் மத்தியிலான தாக்குதல்கள் தொடங்கி இன்று போராக உருவெடுத்துள்ளது. உக்ரைனில் டிக்னிட்டி புரட்சி வெடித்த பிறகு, ரஷ்யா ராணவு கிரிமியாவை ஆக்கிரமித்து தனது நாட்டுடன் இணைத்துக்கொண்டது. இதை தொடர்ந்து டோன்பாஸ் பிரதேசத்தில் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் உக்ரைன் ராணுவ அதிகாரிகள் மீது போரை தொடங்கினர்.
இந்த தாக்குதல் கொரோனா தொற்று காலத்தில் அடங்கியது, ஆனால் 2022 பிப்ரவரி 24 அன்று ரஷ்யா உக்ரைன் மீது முழுமையாக படையெடுத்தது 4 வருடங்களாக தாக்குதல்களை நடத்தி வருகிறது. இது ஐரோப்பாவில் நடந்த இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு நடக்கும் மிகப்பெரிய போராக உள்ளது. இப்போது ரஷ்யா, உக்ரைன் நாட்டின் பகுதியில் 20 சதவீதத்தை ஆக்கிரமித்துள்ளது.
டிரம்பின் எச்சரிக்கை
இந்த நிலையில் டிரம்ப் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசும் போது போரின் கொடூரத்தை விமர்சித்தார். "ரஷ்யா-உக்ரைன் போரில் கடந்த மாதம் மட்டும் 25,000 பேர் இறந்துள்ளனர். இறந்தவர்களில் பெரும்பாலும் ராணுவ வீரர்கள் தான், இது போன்ற போர்கள் உலகப்போராக மாறும்" என்று டிரம்ப் கூறினார்.
அமெரிக்கா, இந்த போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யா-உக்ரைன் மத்தியில் முக்கிய மீடியேட்டராக செயல்பட்டு வருகிறது. ஆனால் ரஷ்யா மற்றும் உக்ரைன் இரு தரப்பும் பேச்சுவார்த்தையில் மிகவும் மெதுவாக இருப்பதால் டிரம்ப் விரக்தி அடைந்துள்ளதாக தெரிவித்தார்.
வெள்ளை மாளிகை செய்தி பிரிவு செயலர் Karoline Leavitt கூறுகையில், "அதிபர் இரு தரப்பு மீதும் கடும் கோபத்தில் இருக்கிறார். அவர் வெறுமென பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை என்றும், இந்த போருக்கு விரைவில் முடிவுக்கு கொண்டு வரவேண்டும்" என்றார். இந்த போர் 4 ஆண்டுகளாக நீடித்து வருகிறது, இது ஐரோப்பாவில் பெரிய நெருக்கடியை உருவாக்கியுள்ளது என Karoline Leavitt தெரிவித்தார்.
டிரம்ப் அரசு தொடர்ந்து உக்ரைன்-க்கு ஆதாரவாக இருக்க முக்கியமான காரணம் இரு நாடுகளும் செய்துக்கொண்ட தாதுக்கள் ஒப்பந்தம். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரஷ்யாவை எதிர்த்து போராட அமெரிக்கா உக்ரைன்-க்கு செய்த செலவுகளை ஈடு செய்ய அந்நாட்டில் இருக்கும் லித்தியம், டைட்டானியம், அரிய உலோகத்தை பெற ஒப்பந்தம் செய்துள்ளது.
இதுமட்டும் அல்லாமல் உக்ரைன் நாட்டில் இனி வரும் காலத்தில் நடக்கும் உலோக சுரங்கத்தில் கிடைக்கும் வருவாயில் 50 சதவீத தொகையை United States-Ukraine Reconstruction Investment Fund என்ற கணக்கிற்கு அளிக்க வேண்டும் என இரு நாடுகளும் கையெழுத்திட்டு உள்ளது.
டிரம்ப்-ன் 3ஆம் உலக போர் தொடர்பாக எச்சரித்திருப்பது உலக நாடுகள் முழுவதிலும் தற்போது முக்கிய பேசு பொருளாக மாறியிருக்கிறது. இத்தகைய நிலையில் ரஷ்ய அதிபரி விளாடிமீர் புடின் எத்தகைய நடவடிக்கை எடுப்பார் என்பது முக்கியமான கேள்வியாக தற்போது உள்ளது.


Click it and Unblock the Notifications