ஈரான் போரில் பேராயுதத்தை கையில் எடுக்கும் டிரம்ப்? அது என்ன Mother of All Bombs?

ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதலை நடத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டமிடுவதாக தகவல்கள் வெளியான நிலையில் இதுவரை இல்லாத ஒரு பயங்கர ஆயுதத்தை அவர் கையில் எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க ராணுவம், ஈரானின் எரிசக்தி கட்டமைப்பு மற்றும் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து புதிய தாக்குதல் திட்டங்களை தயாரித்து வருகிறதாம். நவம்பர் மாத இடைக்கால தேர்தலுக்கு முன்போ அல்லது அதற்கு பின்போ இந்த தாக்குதல் நடத்தப்பட வாய்ப்புள்ளது. இதில் ஒரு பயங்கர வெடிகுண்டை பயன்படுத்துவது குறித்து டிரம்ப் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்.

ஈரான் போரில் பேராயுதத்தை கையில் எடுக்கும் டிரம்ப்? அது என்ன Mother of All Bombs?

அமெரிக்க ராணுவ ஆயுத கிடங்கில் உள்ள அணுசக்தி அல்லாத மிகப்பெரிய குண்டான GBU-43/B (MOAB) குண்டை பயன்படுத்துவது குறித்த ஆலோசித்தார் என சிஎன்என் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வெடிகுண்டை Mother of All Bombs என அழைக்கின்றனர். இருப்பினும், இந்த ஆயுதம் டிரம்ப் நினைக்கும் இலக்குகளை எட்டுமா அல்லது போரின் போக்கை மாற்றுமா என்பது பெரிய கேள்வியாக உள்ளது.

ஏற்கனவே அமெரிக்க மக்கள் மத்தியில் கடும் ஈரான் போரால் டிரம்பின் செல்வாக்கு குறைந்து வருகிறது. இதனால் இந்த போரை முடிவுக்கு கொண்டுவர கட்டாயத்திற்கு டிரம்ப் ஆளாகியுள்ளார். ஏனெனில் இடைக்கால தேர்தலில் குடியரசு கட்சிக்கு வாக்காளர்கள் மத்தியில் ஈரான் போர் பின்னடைவை ஏற்படுத்தலாம் என்பதால் அதனை தவிர்க்க டிரம்ப்பிற்கு அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

Also Read

இதனால் பெரிய தாக்குதல் நடத்தி ஈரானுக்கு பேரழிவை ஏற்படுத்தி விட்டோம் என அறிவித்து தேர்தலை சந்திக்க டிரம்ப் தரப்பி திட்டமிடலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். ஈரானின் அணுசக்தி தளமான பிகாக்ஸ் மவுண்டைன் மீதான தாக்குதல்களிலும் இந்த MOAB குண்டை பயன்படுத்த திட்டமிடப்படுவதாக ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன. குறிப்பாக ஈரான் தனது அணுசக்தி திட்டத்தின் மிச்ச மீதியை இங்கு சேமித்து வைத்திருப்பதாக அமெரிக்காவும் இஸ்ரேலும் நம்புகின்றன. எனவே இங்கே பெரிய தாக்குதல் நடத்த ஆயத்தமாவதாகவும் சொல்லப்படுகிறது.

ஜிபிஎஸ் வழிகாட்டுதலுடன் இயங்கும் இந்த குண்டு 9.8 டன்கள் எடை கொண்டது, பரந்த நிலப்பரப்பை அழிப்பதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளுக்கு அருகில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டால் பொதுமக்களுக்குப் பெரும் உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது. 2017ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் ஐஎஸ் பயங்கரவாத முகாம்களை அழிக்க இந்த வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டது.தரையில் மோதும் முன்பே வெடித்து சிதறி மிகப்பெரிய பரப்பளவுக்கு சேதத்தை ஏற்படுத்தும் தன்மை கொண்டது.

Recommended For You

முழு அளவிலான போரை மீண்டும் தொடராமல், டிரம்பிற்கு ஒரு அடையாள வெற்றியை தேடித்தரவும், மோதலில் இருந்து வெளியேறவும் இந்த குண்டு ஒரு கருவியாக பயன்படலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர். பெரிய அளவிலான தரைவழி தாக்குதலுக்கான ராணுவ திட்டமிடல் நடந்தாலும், தற்போதைக்கு அத்தகைய நடவடிக்கை வேண்டம் என்பது தான் பெரும்பாலான பாதுகாப்பு துறை அதிகாரிகளின் கருத்தாக இருக்கிறதாம். இருந்தாலும் டிரம்ப் என்ன முடிவெடுப்பதால் என்பதை யாராலும் கணிக்க முடியவில்லையாம். கடந்த வாரம் தான் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, டிரம்புடன் ஆலோசனை நடத்தினார் என்பதால் தான் தாக்குதல் திட்டம் தொடர்பான தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+