டிரம்ப் – ஸீ ஜின்பிங் சந்திப்பில் நடந்தது என்ன? ஈரான் போர் குறித்து பேசப்பட்டதா?

கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனாவிற்கு பயணம் மேற்கொண்டு இருக்கிறார். ஈரான் போருக்கு மத்தியில் டிரம்ப் சீனாவிற்கு பயணம் மேற்கொண்டிருப்பது உலகம் முழுவதுமே உற்று நோக்கக் கூடிய ஒரு விஷயமாக மாறி இருக்கிறது.

பெய்ஜிங் விமான நிலையத்தில் டிரம்புக்கு சீனா அரசு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்தது. இருந்தாலும் அதிபர் ஸீ ஜின்பிங் டிரம்பை வரவேற்க நேரடியாக விமான நிலையம் வராமல் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் டிரம்ப் மற்றும் அதிகாரிகள் பெய்ஜிங்கில் முக்கிய ஆலோசனை கூட்டத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். அதன் பின்னர் டிரம்ப் - ஸீ ஜின் பிங் சந்திப்பு நிகழ்ந்தது.

டிரம்ப் – ஸீ ஜின்பிங் சந்திப்பில் நடந்தது என்ன? ஈரான் போர் குறித்து பேசப்பட்டதா?

உலகம் முழுவதுமே இந்த சந்திப்பு உன்னிப்பாக கவனிக்கப்பட்டது. அப்போது இருதரப்பு உறவுகளுக்கும் ஒரு பொன்னான எதிர்காலத்தை நாம் இணைந்து கட்டமைக்க வேண்டும் என பேசியதாக சீன அதிபர் ஸீ ஜின் பிங் கூறியுள்ளார். அமெரிக்கா சீனா ஆகிய நாடுகள் போட்டியாளர்களாக இல்லாமல் நட்பு நாடுகளாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

பின்னர் பேசிய டிரம்ப் அமெரிக்காவும் சீனாவும் இணைந்து ஒரு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கப் போகிறது முன் எப்போதையும் விட இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு சிறப்பாக அமையப் போகிறது என கூறியுள்ளார். இதற்கிடையே டிரம்ப் - ஸீ ஜின் பிங் சந்திப்பில் என்னென்ன விஷயங்கள் விவாதிக்கப்பட்டது என்பது குறித்து வெள்ளை மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அதில் அமெரிக்கா சீனா இடையே உறவை மேம்படுத்துவது பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் சென்று தொழில் புரிவதையும் , அமெரிக்காவில் சீன முதலீடுகளை அதிகரிப்பது குறித்தும் பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Also Read

உலக அளவில் எரிசக்தி விநியோகம் சீராக இருக்க வேண்டும் என்றால் ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் சுதந்திரமாக செல்லும் வகையில் திறக்கப்பட வேண்டும் என இரு தரப்பினரும் அப்பொழுது வலியுறுத்தினர் என வெள்ளை மாளிகை செய்தி கூறுகிறது. இரு தரப்புமே ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டதாக வெள்ளை மாளிகை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் அமெரிக்க வேளாண் பொருட்களை சீனா வாங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Recommended For You

டிரம்ப் - ஜின் பிங் இடையே மிகச்சிறந்த சந்திப்பு நடத்தப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த சந்திப்பில் அரசியல் ரீதியாக மட்டும் இல்லாமல் தொழில் ரீதியாகவும் அமைந்துள்ளது. இருநாட்டு தலைவர்கள் என மட்டுமில்லாமல் இரு நாட்டு தொழிலதிபர்களும் சந்திக்கும் வாய்ப்பினை ஏற்படுத்தி தந்துள்ளது. முன்னதாக தைவான் விவகாரம் குறித்து சீனா அமெரிக்காவுக்கு எச்சரித்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால் அமெரிக்க அரசின் செய்தியில் அத்தகைய தகவல்கள் வெளியிடப்படவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+